மின்னஞ்சல்
மின்னஞ்சல்
ராஜா வழக்கம் போல ஐந்து மணிக்கு எழுந்து விட்டான்.கல்லூரி படிக்கும் நாட்களில் இருந்தே அதிகாலை எழுவது அவனுடைய
வழக்கம்.
எழுந்ததும் தன்னுடைய கைபேசி மூலம் காலை வணக்கம் தன் நண்பர்களுக்கு,மற்றும் குறிப்பிட்ட
உறவினர்களுக்கு அனுப்புவது வாடிக்கையாக கொண்டு இருந்தான்.
அப்படி அனுப்பி கொண்டு இருக்கும் போது,ஒரு மின்னஞ்சல் வந்து உள்ளதை பார்த்தான்.
உடனே ,அதிகாலை தனக்கு யார் அனுப்புவார்கள் என்று வியந்து
கொண்டு,அதை திறந்து பார்கக
ஆச்சரியம் மேலிட்டது.அவன்
திருமணத்திற்கு வேண்டி பதிவு
செய்து இருந்தான்,அதை பார்த்து
ஒரு பெண் தன்னுடைய விவரததை அனுப்பி,இது சம்பந்தமாக அவளின் தந்தையை தொடர்பு கொள்ள ஒரு எண்ணையும் கொடுத்து இருந்தாள்.
ஓராண்டு காலம்,யாருமே பதில் அளிக்காமல் இருக்கும் போது இப்படி ஒரு தகவல் அவனுக்கு உ
உற்சாகத்தை கொடுத்தது.
சீக்கிரம் காலை கடனை முடித்து அம்மா கையால் சூடாக காபி அருந்திய பின், தன் அம்மாவிடம்
விவரத்தை கூறிய பின்,அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேச எதிர்முனையில் இருந்த அவர்
தன்னை மணி என்று அறிமுக
படுத்தி கொண்டு,நேரில் பேச வேண்டும், முன் பகலில் பத்து மணிக்கு பிறகு அவரது வீட்டு விலாசம் கொடுத்து வர சொன்னார்.
நல்ல வேளை,அது,அவனுடைய வீட்டில் இருந்து நான்கு தெரு தள்ளி உள்ள ஒரு பகுதி தான்.
அம்மாவிடம் விடை வாங்கி கொண்டு,அப்பா படத்தை வணங்கி விட்டு,அந்த வீட்டை நோக்கி தன்
இரு சக்கரத்தை செலுத்தினான.
சரியாக இருபது நிமிடத்தில்
அங்கு செல்ல,அது ஒரு பெரிய
வீடு, காவலாளிடம் வந்த விசயத்தை கூற,காத்து இருக்கும் படி கூறி விட்டு,உள்ளே சென்றான்.
ஐந்து நிமிடத்தில்,உள்ளே வர சொல்லி செய்தி வர,வீட்டிற்குள் நுழைந்தான்.
மணி எழுந்து அவனை வரவேற்று
இருக்கையில் அமர வைத்தார்.
பக்கத்து இருக்கையில் ஒரு இளம் பெண் அமர்ந்து இருந்தாள்.
அவளுக்கு இரு கைகளும் விரல்கள் துண்டாகி இருந்தது.
ஆனால் அவ்வளவு அழகு.
மணி ராஜாவை அந்த பெண்ணுக்கு அறிமுக படுத்தி வைத்தார்.பிறகு ராஜாவிடம்,இது தான் என்னுடைய ஒரே மகள்
தாமரை,சமீபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே,விழுந்து
ஏற்பட்ட விபத்தில் கைகள் இரண்டும் பேருந்து சக்கரத்தில சிக்கி நசுங்கி விட்டது.ஒரே மகள்,இவளுக்கு திருமணம் செய்து மாப்பிள்ளயை வீட்டோடு வைத்து கொண்டு, அவருடைய வியாபாரத்தையும் கவனித்து கொள்ள பொருத்தமான பையனை தேடி வருவதாக கூறினார்.
தாமரை அழகாக இருந்தாள்.
கைகள் தவிர வேறு குறை
ஒன்றும் இல்லை.
ராஜா சற்று நேரம் சிந்தித்து விட்டு
அம்மாவிடம் பேச அனுமதி கேட்டான்.மணியும் சம்மதம் கூற
அங்கு இருந்தே அம்மாவிடம்
விவரத்தை கூற,அவனுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார்.
அம்மாவின் சம்மதம் தான் முக்கியம் என்று கூறி விட்டு
ராஜா அம்மாவின் ஆலோசனையை மணியிடம் கூறினான்.
அதாவது, மணம் செய்து கொள்ள விருப்பம்,ஆனால் தாமரை அவனுடைய வீட்டில் தான் இருக்க வேண்டும்,அவனும்,தாமரையும் சச
சேர்ந்து,வியாபாரத்தில் கவனித்து கொள்ளலாம்.எவ்வித குறையும் இல்லாமல்,அம்மா தாமரையை
கவனித்து கொள் வார்கள்.
இதற்கு உடன்பட்டால்,திருமணம்
பற்றி மேற்கொண்டு பேசலாம்.
முடிவு செய்து கொண்டுஎங்க வீட்டிற்கு வாங்க என்று கூறி விட்டு ராஜா விடை பெற்று கிளம்பினான்.
தாமரையின் அம்மா,உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வெளி ஊர சென்று உள்ளார்,வந்ததும் அவருடன் கலந்து கொண்டு தகவல் தெரிவிப்பதாக மணி கூறினார்.
மணி ராஜாவை பற்றி தன் நண்பர் மூலம் விசாரிக்க,பொறுப்புள்ள பையன்,அப்பா சிறு வயதில் தவறு விட்டார்.அவருக்கு வந்த ஓய்வுஊதியம் கொண்டு,படித்து நல்ல வேலையில் இருப்பதாக
விசாரித்து சொன்னார்.
பத்து நாட்கள் பிறகு மணி ராஜா வீட்டிற்கு வந்து சம்பந்தம் பேசி முடிவு செய்ய திருமணம் இனிதாக
நடந்து முடிந்தது.
