Saravanan P

Drama Romance Tragedy

4.5  

Saravanan P

Drama Romance Tragedy

மீண்டும் வருவாயா?

மீண்டும் வருவாயா?

4 mins
424


சக்தி தனது அறையில் அமர்ந்து அவனது நோட்டில் ஹோம் ஓர்க் செய்து கொண்டிருந்தான்.


நோட்டின் பின்பக்கம் தனது காதலி ரேவதியின் முகத்தை பென்சில் ஸ்கெட்ஸிங் செய்து கொண்டிருந்தான்.


ரேவதி,ஒன்பதாம் வகுப்பில் அவன் வகுப்பில் வந்து சேர்ந்தாள்,அவளது அப்பா டிரென்ஸ்பெர் வாங்கி கொண்டு அந்த ஊருக்கு வந்திருந்தார்.


புது பள்ளி,புது நபர்கள் என ரேவதி அமைதியாகவே வகுப்பில் அமர்ந்து இருப்பாள்.


சக்தியின் கண்கள் அவளை பார்க்கும் போதெல்லாம் அவன் இதய துடிப்பு அதிகமாவதை உணர்ந்தான்.


சக்தி பெரும்பாலும் வகுப்பில் அமைதியாக இருப்பான்,அவனது நண்பர்கள் இருவருடன் மட்டுமே பேசுவான்,மீதி நேரம் தன் ஸ்கெட்ச் புத்தகத்தை வைத்து படம் வரைந்து கொண்டிருப்பான்.


ஒரு நாள் சக்தி அந்த ஸ்கெட்ச் புத்தகத்தை டேபிள் அடியில் வைத்து ரெஸ்ட் ரூம் சென்ற பொழுது சில மாணவ,மாணவிகள் அந்த புத்தகத்தை எடுத்து பார்த்து விட்டு ரேவதி இடத்தில் வைத்துவிட்டு என்ன நடக்க போகிறது என பார்த்து கொண்டிருந்தனர்.


ரேவதி வகுப்புக்கு வந்து அந்த புத்தகத்தை திறந்த யாருடையது என பார்த்து விட்டு அதில் தான் வகுப்பில் அமர்ந்து இருப்பதை சக்தி இடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு படம் இருந்ததை பார்த்து விடுகிறாள்.


வகுப்பறைக்குள் நுழைந்த சக்தி தன் இடத்திற்கு சென்று தண்ணீர் குடித்து விட்டு ஸ்கெட்ச் புத்தகத்தை பார்க்க அது அங்கு இல்லை.


ரேவதி அவனிடம் வந்து புத்தகத்தை நீட்ட "அறிவு இல்லை,என் புக்கை எதுக்கு எடுத்த?" என சக்தி எடுத்து விடுகிறான்.


ரேவதி அனைவரும் தங்கள் இருவரை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து "இல்லைங்க,என் இடத்தில் உங்கள் ஸ்கெட்ச் புக் இருந்தது" என சொல்லி சோகமாக திரும்பி சென்றாள்.



சக்தி புத்தகத்தை எடுத்து பேக்கில் வைத்து விட்டு ரேவதியை பார்த்த பொழுது அவள் முகத்தில் சோகம் ததும்ப அமர்ந்திருந்தாள்.


அன்று நாள் முழுக்க, இருவரும் வேறு யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.


அன்று மாலை,ரேவதி மட்டும் வகுப்பில் அமர்ந்து இருந்தாள் முகம் கவலையை‌ காட்டி கொண்டிருந்தது.


வகுப்புக்கு தன் பேக்கை எடுக்க வந்த சக்தி ரேவதி தனியாக அமர்ந்து சோகத்துடன் இருப்பதை கண்டு,தான் அன்று காலை பேசியதை நினைத்து அவளிடம் சென்று "என்னை மன்னிசுருங்க,யோசிக்காம பேசிட்டேன்" என கூறினான்.


ரேவதி அவனை பார்த்து விட்டு "பரவாலைங்க,நான் அந்த புக்‌கை உண்மையில் எடுக்கல" என சொல்லிவிட்டு வெளியை செல்ல யத்தனிக்க சக்தி தங்களுடன் கூட வரவா என கேட்க ரேவதி சரி என்றாள்.


ஏன் இவ்வளவு சோசகமா இருந்தீங்க என கேட்க என் வீட்டில நேற்று பிளட் டெஸ்ட் குடுத்து இருக்காங்க,ரிசல்ட் என்ன வரும்னு‌ யோசிச்சிட்டு இருக்கேன்.


பிளட் டெஸ்ட் னா,வைட்டமின் கம்மியா இருக்கானு டெஸ்ட் பண்ண குடுத்தீங்களா என சக்தி கேட்க,ரிசல்ட் எதுவும் பிரச்சினை இல்லாம இருக்கனும் என ரேவதி கூறிவிட்டு "சஜஷன் குடுக்குற பேர்ல என் பயத்தை சுத்தி இருக்கவங்க ஜாஸ்தி பண்றாங்க" என கூறினாள்.


சக்தி ஒன்னும் கவலை படாம போங்க,பாத்துக்கலாம் என கூற,ரேவதி சிறிது சிரிப்புடன் அவனுக்கு பை சொல்லி சென்றாள்.


அடுத்த நாள்,சக்தி பள்ளிக்கு சீக்கிரம் வந்து போர்ட் கீளின் பண்ணி விட்டு போர்டில் வாசகம் எழுதினான், "வாழ்க்கையின் ஸ்வாரஸ்யமே அடுத்து நடப்பதை கணிக்க முடியாதது தான்." என எழுதி திரும்ப,ரேவதி முகத்தில் தெளிவுடன் வந்து தன் இடத்தில் அமர்ந்தாள்.


சக்தி கையை உதறி விட்டு ரேவதியிடம் வந்து என்ன ஆச்சு ரிசல்ட் என கேட்க,ரேவதி டையபீடீஸ் என கூறினாள்.


சக்தியால் நம்ப முடியவில்லை,ஆறுதல் கூறுவதா இல்லை வேறு பேசுவதா என குழம்பி நின்றான்.


ரேவதி சரி அதுக்கு மெடிசன்ஸ் குடுத்து இருக்காஙக் நீ போர்ட்ல எழுதுன வாசகம் ரொம்ப உண்மைதான் என மெல்லிய புன்னகை புரிந்தாள்.


இருவரும் அன்று மதியம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்து விட்டு இருவரையும் கூப்பிட்டு "இது பள்ளி, படிக்கிற வயசு,இனிமேல் சேர்ந்து சுத்தாமல் இருங்க" என வார்ன் பண்ண இருவரும் வெளியே வந்து அந்த ஆசிரியரின் தவறான எண்ண அமைப்பை பற்றி மெல்ல பேசி கொண்டே வந்தனர்.


"என் வாழ்க்கை மாறுதே,


சூழல் அழகாகுதே,


தோழி நீயும் வந்ததாலே.


மனம் கட்டம் விட்டு வெளியே வந்து,


தன் ஆசைகளை பேசுதே.


கடந்து செல்லும் வாழ்க்கையை சற்று நிற்க சொல்லி திரும்ப பார்க்கிறேன்.



 என் வாழ்க்கை மாறுதே,


சூழல் அழகாகுதே,


தோழா உன் வரவா லே,


உள்ளத்தினில் அன்பின் அலை பொங்கி கரை மீறுதே,


எங்க இருந்தாய் இத்தனை நாள் எனக்கு தெரியாமலே."


சக்தி,ரேவதி இருவரின் நட்பு பத்தாம் வகுப்பில் மிகவும் ஆழமாக வளர்ந்து கொண்டிருந்தது.


இருவரும் ஒன்றாக படிக்க ஆரம்பித்தனர்,போன் நம்பர் மாற்றி கொண்டு பேச ஆரம்பித்தனர்.


லைப்பரரியில் புத்தங்கள் ஒன்றாக அமர்ந்து படித்தனர்.


சுற்றி உள்ளவர்கள் பேசும் கேலிகளை பற்றி கவலை படாமல் இருந்தனர்.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த பின் இருவரும் சேர்ந்து ஒரு நாள்,சிட்டி சென்ட்ரல் லைப்பரரி செல்ல முடிவெடுத்து கிளம்பினர்.


சக்திக்கு பத்தாம் வகுப்பிலேயே ரேவதி மீது காதல் உணர்வு தோன்றியது,ஆனால் சொன்னால் தன்னுடன் பேசாமல் போவாளே,பத்தாம் வகுப்பு பொது தேர்வு என நினைத்து அப்பறம் கூறலாம் என அந்த எண்ணத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.


அந்த லைப்பரரியில் இருவரும் டேபிளின் ஒவ்வொரு பக்கமும் அமர்ந்து கதை புத்தகத்தை படித்து கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.


அன்று லைப்ரரி விட்டு கிளம்பி பக்கத்தில் இருந்த பூங்கா சென்று இருவரும் புல் தரையில் அமர்ந்தனர்.


சக்தி ரேவதியிடம் உன் கிட்ட ஒன்னு சொல்லனும் என தயங்க,நீ இப்படியெல்லாம் ரொம்ப யோசிச்சு பேச மாட்டியா? என்ன என ரேவதி கேட்க,நான் உன்னை காதலிக்கிறேன் என கூற ரேவதி உடனே அங்கிருந்து எழுந்து வேகமாக நடக்க,சக்தி அவள் பின்னே வேகமாக ரேவதி நில்லு,நில்லு என வேகமாக நடந்து சென்றான்.


ரேவதி திரும்பி அவனை பார்த்து எப்பல இருந்து ஸாருக்கு இந்த எண்ணம் என கேட்க,சக்தி உண்மையை சொல்லி விடுகிறேன்.


ரேவதி அவனிடம் எனக்கும் உன்னை பிடிக்கும்,ஆனா எனக்கு யோசிக்க டைம் வேணும்,நான் என் முடிவு சொல்லறப்ப எதுவா இருந்தாலும் ஏத்துக்கனும் சரியா,எப்பவும் போல பிரண்ட்ஸா இருக்கனும் என சொல்லி அவனிடம் போயிட்டு வரேன் என சொல்லி வீட்டுக்கு கிளம்பினாள்.


பத்தாம் வகுப்பு லீவ் முடிந்து,பதினொன்றாம் வகுப்பின் முதல் நாள், சக்தி அன்று பள்ளிக்கு சீக்கிரம் கிளம்பி சென்றான்,அவன் புது வகுப்பு போர்டில் வாசகம் எழுத சாக் பீஸ் எடுத்து கொண்டு தன் வகுப்புக்கு செல்ல,அங்கு ரேவதி போர்டில் "உண்மையான அன்பு காலம் கடந்து மனங்களில் வேரூன்றி நிற்கும்."


சக்திக்கு அருகில் வந்து அவன் கையை பிடித்து அழைத்து சென்று பெஞ்சில் அமர வைத்து அவனிடம் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு என கூற,சக்தி கண் கலங்க அவள் கைகளை பிடித்து கொள்கிறான்.



அடுத்த மூன்று நாட்கள், இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் என கூறலாம்.


ரேவதியின் படத்தை நோட்டில் வரைந்து முடித்து அந்த நோட்டை பேக்கில் வைத்து அவளிடம் போனில் நாளை பள்ளிக்கு வா,உனக்கு ஸர்பரைஸ் தரேன் என சிறிது நேரம் பேசி விட்டு தூங்க சென்றான்.


அடுத்த நாள்,அவளுக்கு வீட்டுக்கு போகும் போது ஸர்பரைஸ் தரலாம் என சக்தி முடிவு செய்து பள்ளியில் இருவரும் லன்ச் பிரேக்கில் நடந்து கொண்டிருந்தனர்.


பின்பு லைப்ரரி சென்று புக் படிக்கும் போதே ரேவதி சக்தியிடம் ரொம்ப தலை வலிக்குது என கூறினாள்,சரி வா கிளாஸ் போலாம் என சக்தி எழுப்பி அழைத்து சிறிது தூரம் சென்ற பொழுது எனக்கு மயக்கம் வருது என கூற,சக்தி அவளை தாங்கி அழைத்தபடி டிஸ்பன்ஸரி அழைத்து சென்று விட்டு அவள் தண்ணீர் பாட்டில் எடுக்க கிளாஸிற்கு ஓடினான்.


 சக்தி மீண்டும் கீழே வரும்போது, அவள் டிஸ்பன்ஸரி சென்ற பொழுது அவள் பேச்சு குளறியது.


மேம் அவள் இரு கைகளை தூக்கிய போது ஒரு கை மட்டும் கீழே இறங்கியது.


 ரேவதி வாய் ஒரு பக்கம் தொங்கியது,மேம் உடனடியாக ஸ்கூல் ஆபிஸில் கூறி அவளை ஆஸ்பத்திரி அழைத்து சென்றனர்.


சக்தி விரைவாக அவள் மீண்டு வர வேண்டும் என வேண்டாத தெய்வம் இல்லை.


ஆனால் அடுத்த நாள்,காலை அவன் பள்ளி நண்பர்கள் கூறிய செய்தி "ரேவதி ஸ்டொர்க் வந்து இறந்து விட்டாள்."


அன்று அவன் நண்பர்களுடன் அவள் வீட்டிற்கு சென்று தான் வரைந்து அவளுக்கு பிடித்த கார்டன் படம் மட்டும் ஒரு மலர் வளையத்தை அவள் காலின் பக்கத்தில் வைத்துவிட்டு அவள் முகத்தை பார்த்து விட்டு கண்ணீரை அடக்க முடியாமல்,அவளுடன் இருந்த நினைவுகள் அவன் மனதில் மீண்டும் படமாக ஓட ஒரு மூலையில் சென்று கதறி அழுதபடி அவள் உடல் இருந்த திசையை பார்த்து விட்டு தரையில் அமர்ந்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Drama