saravanan Periannan

Abstract Drama Romance


4.7  

saravanan Periannan

Abstract Drama Romance


மீண்டும் செய்ய விரும்பும் பயணம்

மீண்டும் செய்ய விரும்பும் பயணம்

2 mins 343 2 mins 343

ரெயில் நிலையத்தில் பயணிகள் சிலர் நொறுக்கு தீனி வாங்கி கொண்டு இருந்தனர்.

பிறர் தங்கள் குடும்பத்துடன் அமர்ந்து ரெயிலுக்காக காத்து இருந்தனர்.


அந்த கூட்டத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பரஞ்சோதி ,தான் இங்கு மட்டும் அல்ல , வாழ்க்கையிலும் தான் தனிதான் என நினைத்தான்.


பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான திருச்சிக்கு செல்ல காத்திருந்தான்.


ரெயில் தனக்கே உரிய சத்தத்துடன் வந்து நின்றது.அவன் ஏறி தன் இடத்தில் அமர்ந்தான். அங்கு பலர் நொறுக்கு தீனிகள் விற்று முடிக்க தவித்து கொண்டிருந்தனர்,அவனுக்கு தனது நண்பர்கள் நல்ல சம்பளம் வாங்கியும் பற்றவில்லை என கூறும்போது இங்கோ பலர் தங்களது அத்தியாவசிய தேவைக்காக உழைத்து கொண்டிருக்கின்றனர்.


ரெயில் கிளம்பும் பொழுது தீடீரென்று பலர் வேக வேகமாக அதனுள் ஏறினர்.


அவன் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவரை பார்த்து மகிழ்ச்சியும் பயமும் ஒரே நேரத்தில் அடைந்தான்.


அந்த நபர் அவனுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த குந்தவை ஆவாள்‌.

அவள் அதே பெட்டியில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்தாள்.


அவன் தனது கல்லூரி நாட்களை நினைக்க ஆரம்பித்தான்‌.


அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து வீட்டில் சிறு வயதில் அடியும் உதையும் அதிகம் வாங்கினான்.


அவன் நினைத்ததை விட அன்பு குறைவாகவே கிடைத்தது.


கல்லூரியில் சேர்ந்தாலும் அவன் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டான்.


அவனுக்கு ஜெபி மற்றும் கௌதம்,சுந்தர் போன்ற நல்ல நண்பர்கள் கிடைத்ததால் கொஞ்சம் அவனது மனம் மாறுதல் அடைந்தது.ஆனாலும் பெண்களிடம் பேச அவன் தயங்கினான்.


அவனது வகுப்பில் இருந்து குந்தவையை பார்த்தவுடன் பேச ஆவல் கொண்டான்.


கல்லூரியில் அவர்களது கடைசி வகுப்பில் கூட பயத்தால் பேசுவதை தவிர்த்தான்.அவனது இந்த பயம் தற்பொழுதும் தொடர்ந்தது‌.


யோசித்து கொண்டே உறங்கியவன்,தன் அருகில் அமர்ந்திருந்த அனைவரும் இறங்கியதை உணரவில்லை.


அப்பொழுது குந்தவை அங்கு இருந்த ஜன்னலுக்கு அருகில் அவனுக்கு எதிரில் அமர்ந்தாள்.

கண் முழித்து பரஞ்சோதி அவளை பார்த்தவுடன் திரும்ப முயன்ற பொழுது அவளே "ஹாய் பரஞ்சோதி , எப்படி இருக்கீங்க" என கேட்டாள்.


பரஞ்சோதி பயந்து கொண்டே நான் நல்லாயிருக்கேன் குந்தவை,நீங்க சென்னையில் தான் வேலை செய்றீங்களா? என கேட்டான்.


அவள் ஆமா என்றும் நீங்க எங்க வேலை செய்றீங்க என கேட்டாள்.


ஆமாங்க நானும் சென்னைத்தான், பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊரு திருச்சி போறேன் என கூறினான்.


அவள் தன்னுடைய மெல்லிய புன்னகையை புரிந்தாள்.


அவள் அவனிடம் ஏதோ சொல்ல வந்து தயங்கினாள்.


இவனின் இதயமோ துடிக்கும் வேகத்தை அதிகமாக்க கேட்டான்,என்ன வேணும்னு.


பரஞ்சோதி,பவர்பேங் இருக்கா என கண்ணில் விழுந்த கூந்தலை விரல்களால் நகர்த்தியபடியே கூறினாள்.


அவனும் பவர்பேங்கை எடுத்து குடுத்தான்.பிறகு இருவரும் தாங்கள் கொண்டுவந்த உணவை உண்ண ஆரம்பித்தனர்‌.


அவர்கள் உரையாட ஆரம்பிக்க நேரம் போனதே தெரியவில்லை.


ஒவ்வொரு ரெயில் நிறுத்தம் வர வர,பரஞ்சொதி இந்த உரையாடல் நின்று விடுமோ என எண்ணியபடியே பேசினான்.


திருச்சி நிறுத்தம் வந்தவுடன் பரஞ்சோதி இறங்கினான்.


திரும்பி பார்த்தால் குந்தவையும் இறங்கினாள்.


பரஞ்சோதி ஆச்சரியத்துடன் நீங்களும் திருச்சியா? என கேட்டான்‌.


குந்தவை ஆமா என சொல்லி சிரித்தப்படி சென்றாள்.


பரஞ்சோதி நின்று மகிழ்ச்சியுடன் யோசிக்க,ப்ளீஸ் வெய்ட் என கத்தியப்படியே ஓடினான்.


அவளுடைய கொலுசு மணிகள் இவனை பார்த்து நடனம் ஆடின‌.


இருவரும் பேசியபடியே ரெயில் நிலையம் விட்டு வெளியேறினர்.


Rate this content
Log in

More tamil story from saravanan Periannan

Similar tamil story from Abstract