மேஜிக்
மேஜிக்
மேஜிக்
செல்லமகன், சிவா, தன் அப்பாவிடம்
ஒரு மேஜிக் செய்து காண்பிக்கும் படி கேட்டுக்கொண்டு இருந்தான்.குமரன் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளி,அவனுக்கு மூட்டை தூக்க மட்டும் தான் தெரியும்.
சிவா கேட்கும் மேஜிக் என்ற வார்த்தைக்கு கூட அவனுக்கு அர்த்தம் தெரியாது.
கடந்த வாரம் தான் ஒருத்தர் வந்து பள்ளியில் மேஜிக் செய்து காண்பித்தார்.மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்.
பணம் கொடுத்தால் இன்னும் நிறய காண்பிப்பார்.மாணவர்கள் பணம் சேர்த்து வைத்ததும் சொன்னால் இன்னும் நிறைய செய்வதாக ஆசிரியரிடம் சொல்ல,அவரும் சரி என்றார்.
அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் சாப்பிடுவதே பிரச்சனை.இதில் காசு சேர்த்து கொடுத்து மேஜிக் பார்க்க முடியுமா என்று நினைத்து அவர் புத்தகத்தில் படித்த சில தகவல்களை வைத்து தினமும் ஒரு மேஜிக் செய்து காட்டுவார்.
அவருடைய இருப்பும் தீர்ந்து போக,மாணவர்கள் ஓரிருமுறை கேட்டு விட்டு மறந்து விட்டனர்.
ஆனால் சிவா அதை மறக்கவும் இல்லை.அவனும் ஏதாவது கற்றுக்கொண்டு செய்து காண்பிக்க வேண்டும் என்று நினைத்தான்.
அதற்கு வேண்டி தான் அப்பா குமரனை நச்சரித்து கொண்டு இருக்க,சிவா விடம் கேட்டு அது என்ன என்று புரிந்து கொண்டான்.ஒரு வேடிக்கை என்று புரிந்து கொண்டு,வரும் ஞாயிறு விடுமுறை தினத்தில் செய்து காண்பிப்பதாக கூறினான்.
சிவா ஞாயிறு கிழமை எப்போது வரும் என்று காத்துக்கொண்டு இருந்தான்.
சனிக்கிழமை குமரனின் மனைவி
ரேஷன் கடையில் வாங்கி வந்த இருபது கிலோ அரிசியை தகர டப்பாவில் போட்டு வைக்கும் படி சொல்லிக்கொண்டு இருந்தாள்.
அதற்கு குமரன் அடுத்த நாள் செய்வதாக கூற,இந்த சின்ன வேலையை செய்ய நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்று திட்டிக்கொண்டு இருந்தாள்.
குமரன் சனிக்கிழமை வேலையில்
இருந்து வரும் போது ஒரு சாக்கு பையை கொண்டு வந்து இருந்தான்.
அடுத்த நாள் காலையில் எழுந்து தயார் ஆனதும்,சிவாவை அழைத்து,தான் கொண்டு வந்த சாக்கு பையை கையில் தூக்கி பார்க்க சொன்னான்.அதை அவன் எழுத்தில் தூக்கி விட்டான்.
அப்புறம் அந்த சாக்கு பை நிறைய ரேஷன் கடையில் இருந்து வாங்கி வந்த அரிசியை கொட்டி ஒரு கயிற்றால் காட்டினான்.அதற்கு பிறகு சிவா வை அதை தூக்க சொல்ல அவனால் அது முடியவில்லை.
பிறகு இப்போது பார் அப்பா மேஜிக் செய்கிறேன் என்று கூறி விட்டு மூட்டையை தூக்கி தலையில் வைத்து கொண்டான்.சிவா விற்கு ஒரே ஆச்சரியம் தன்னால் தூக்க முடியாத சாக்குபையை அப்பா எப்படி தூக்கினார் என்று ஆச்சரிய பட்டு இது தான் மேஜிக் கா என்று கண்ணை மூடாமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.
நான் செய்ய முடியாதா என்று சிவா கேட்க,நீயும் பெரிய பையன் ஆகும் போது இது மாதிரி மேஜிக் செய்யலாம்.எதுவும் பழகி விட்டால் எளிதில் செய்து விடலாம் என்று சொல்லி விட்டு,வா சாப்பிடுவோம் என்று சாப்பிட அமர்ந்தனர்.
