மேஜிக்
மேஜிக்
மந்திரத்தில் மாங்காய் வராது.நட்டு வளர்த்தால் மட்டுமே காய்க்கும்.இது பொதுவான சொல்.
ஆனால் வெறும் வார்த்தைகளில் நம்மால் உறவுகளை மேம்படுத்த முடியும்.ஒருவருக்கு யாருடனும் பிரச்சனை இல்லை.இனி ஒருவருக்கு பேசினால் சண்டை வருகிறது.இருவருக்கும் என்ன வித்தியாசம்.முதலாவது நபர் மேஜிக் படித்து இருக்காரா.ஏன் அவர் பேசினால் யாரும் சண்டைக்கு வருவது இல்லை.
இதில் ஒரு மேஜிக் க்கும் இல்லை.அவர் பேசுவது அன்பான வார்த்தைகள்.பிறர் பேசும் போது காது கொடுத்து கேட்பார்.
அதற்கு அவர்களுக்கு புரியும் படி எளிமையான சொற்களில் பதில் கூறுவார்.அதில் அக்கறையும்
கலந்து இருக்கும். இரண்டாமவர் பேசும் போது ஏனோ தானோ என்று பதில் அளிப்பார்.அக்கறை இருக்காது.கடமைக்கு பதில் அளிப்பார்.
ஒரு மருத்துவரிடம் போகிறோம்,நம்முடைய நோயின் தீவிரத்தை எடுத்து சொல்கிறோம்.அவரும் பொறுமையாக கேட்டு கொண்டு மருந்து கொடுக்கிறார்.நமக்கு நோய் குணம் ஆகி விடுகிறது.
இதில் மேஜிக் எதுவும் இல்லை.
நம்முடைய மனம் அவருடைய செய்கையில் திருப்தி அடைந்து விடுகிறது.சொல்ல போனால் அவரை பிடித்து போய் விடுகிறது.நாமும் அவர் கொடுத்த மருந்தால் குணம் ஆகி விட்டது என்று நம்புகிறோம்.அவர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை தான் அந்த மேஜிக்.பலருக்கு புரிவது இல்லை.
புரிந்தவர்கள் மேஜிக் செய்கிறார்கள் அவ்வளவு தான்.
