shameem a

Tragedy

4  

shameem a

Tragedy

*மாட்டுத் தொழுவத்தில் வாழும்...*

*மாட்டுத் தொழுவத்தில் வாழும்...*

4 mins
346


*மாட்டுத் தொழுவத்தில் வாழும்...*

*தமிழக மாஜி MLA..!*


*கண்ணீரை வரவழைக்கும் உண்மைக்கதை!!. *


 அரசியல்வாதிகளில் மாண்புமிகு மாவட்டங்கள், நகரங்கள் மட்டுமல்ல;

ஒன்றிய அளவிலுள்ள கரை வேட்டிகளெல்லாம் கூட இன்றைக்கு ‘பொலிரோ என்ன ஸ்கார்ப்பியோ என்ன என விலையுயர்ந்த கார்களில்’ பறந்து கொண்டிருக்க…


* நிறைய சொத்துக்களுடன் கணவன் மனைவி இருவருமே ஆளும்கட்சி எம்.எல்.ஏ.* என்பதெல்லாம்

பொய்யாய் *பழங்கதையாய்ப் போய் மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாஜி பெண் எம்.எல்.ஏ. வாழ்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது,*

*நிஜமாகவே அதிர்ச்சியாக இருந்தது.*


 சில நாட்களுக்கு முன் தேனி மருத்துவக் கல்லூரி டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்த போது


அவர் கூறியது நம்மை அதிர வைத்தது


அவர் கூறியதாவது


 ஒரு வயசான எம்.எல்.ஏ.அம்மா ரொம்ப சிரமமாக, வைத்தியம் பார்க்கக் கூட காசில்லாமல், வெகு சாதாரணமாக வரிசையில் வந்து நின்றார்.


 அவரைப் பற்றி கேள்விப்பட்டபோது, ஷாக்காக இருந்தது. நீங்களும் விசாரித்துப் பாருங்கள்!’ என்று சொன்னார்.


* தேனி அருகிலுள்ள அம்மச்சியா புரத்தில் கிருஷ்ணவேணி என்ற 82 வயதான முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசித்து வருகிறார் என்று தெரியவந்தது.*


* நேரில் சந்திக்கச் சென்றோம்.*

*ஊரின் கடைசியில் வரிசையாக மாட்டுக் கொட்டகையில் மூன்று போர்ஷன்கள் இருக்க ஒரு மூலையில் ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டும் எரிந்து கொண்டிருந்தது அங்கே நிறைய மாத்திரைகளுடன் பரிதாபமாகப் படுத்திருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணவேணி.*


 மிகுந்த சிரமத்துடன்தான் எழுந்து உட்கார்ந்தார். நான் பாட்டுக்கு கூலிக்குப் போயி சம்பாதிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். லேசா சளி மாதிரி மூச்சடைச்சது. அப்புறம் ரத்த வாந்தியா வந்திருச்சு.


 அதுக்கு வைத்தியம் பார்க்கப் போயித்தான் உங்களுக்கெல்லாம் தெரிஞ்சு போச்சு போலிருக்கு’’ என்றார் விரக்தியுடன்.


* பிறகு, அவரே சிறு இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்தார்..*

*என்னோட வீட்டுக்காரர் அய்யனார்,*

*ராஜாஜி காலத்துல 1952 லிருந்து ஐந்து வருசம் நிலக்கோட்டை எம்.எல்.ஏ.வா காங்கிரஸில் இருந்தார்.*


* அப்ப நிலக்கோட்டைன்னா சோழவந்தான் தொகுதியும் சேர்ந்ததுதான்.*


* அதுக்குப் பின்னாடி நான் 1962லிருந்து ஐந்து வருஷம் ஆண்டிப்பட்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வா இருந்தேன்.*


 அப்போ ஆண்டிப்பட்டியில சேடப்பட்டியும் சேர்ந்துதான் இருந்துச்சு.


* பக்தவத்சலம், காமராஜர் ஆட்சியில நான் எம்.எல்.ஏ.வா இருந்தேன்.*


* நாங்க நல்ல செல்வாக்கா இருந்தோம். தேனியில அய்யர் மெமோரியல் பள்ளியும், அய்யர்* *அரிஜன் ஆண்கள் ஹாஸ்டலும், மகாத்மா காந்தி பெண்கள்* *ஹாஸ்டலும், பெரிய குளத்துல நந்தனார் ஹோமும் பள்ளிக்கூடத்துப் பசங்களுக்காக நடத்தி வந்தோம்.*


 நாங்க எங்க மூணு மகன்களோடு ஸ்கூல் உள்ளேயே ஒரு வீட்டுல இருந்தோம்.


 எங்க வீட்டுக்காரர் ஒரு தடவை,

பள்ளிக்கூடம் பெரிசாகுது. இதுல நாம குடித்தனம் பண்ணக் கூடாது.


 இதை அரசாங்கத்துக்கே எழுதிக் கொடுத்துட்டு தனியா போயிடலாம்’ன்னு சொன்னார்.


* அதே மாதிரி 35 ஏக்கர் உள்பட எல்லாத்தையும் 1963ல் தானமா அரசாங்கத்துக்கு இலவசமா எழுதிக் கொடுத்துட்டோம்.*

* இப்ப இருக்கிற நம்ம அரசியல்வாதிகள் அவங்கவங்க வீட்டு* *பக்கத்துல இருக்கிற நிலத்தயும் இல்ல சேத்து எடுத்துகிறாங்க*.


 சுந்தரமூர்த்தி, வெற்றி வேந்தன், மூவேந்தன் என்ற மூன்று மகன்களுடன் நாங்க அம்மச்சியாபுரத்துல தான் வசித்து வந்தோம்.


* அவருக்கு காமராஜர்னா உசிரு*.

*காமராஜர் இறந்தப்ப, 77 பானைகளை உடைச்சு, நிறையப்பேர் மொட்டை போட்டு துக்கம் அனுஷ்டிச்சோம்.*


 மெட்ராஸ்ல தலைவருடைய இரங்கல் கூட்டத்தில் கலந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனவர், துக்கம் தாங்காம அங்கேயே செத்துப் போயிட்டார்.


 அதுக்குப் பின்னாடி ரொம்ப சிரமமாப் போயிடுச்சு.


 ஒத்தைப் பொம்பளையா மூணு பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்பட்டேன்.


காசு செலவுபண்ண வழியில்லாததால அரசியல் பக்கம் போக முடியல.

நாங்க அதுல சம்பாதிச்சு பழகலையே!

என்ன ஒரு அருமையான வார்த்தைகள்.

நெஞ்சு கணக்குதுங்க


 மூத்த பையன் நாலு குழந்தைகளைப் பெத்ததுக்கு பின்னாடி அவனும் மருமகளும் உடம்பு சரியில்லாம செத்துப் போயிட்டாங்க.


 இரண்டாவது பையன் என்னோட தான் இருக்கான். அவனும் ஆஸ்துமா பிரச்னைனால ரொம்ப சிரமப்படுறான்.


* 1977_ல் தி.மு.க.வுல* *ஆண்டிபட்டி வேட்பாளரா அவனைப் போட்டாங்க*

*நமக்கு தான் நல்லவங்களை வாழ வைத்து பழக்கமே இல்லையே ஆனா தோத்துப் போயிட்டான்.*


 மருமக ரேணுகா இப்ப கூலி வேலைக்குப் போய் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருக்கா.


 மூணாவது பையன் மூவேந்தன்

டி.எஃப்.டி. முடிச்சு சினிமா எடுக்கறேன்னு மெட்ராஸ்லயே இருந்தான்.


 இளையராஜா வந்து பூஜையெல்லாம் போட்டு, வாணிவிஸ்வநாத் கதாநாயகியா நடிக்க படமெல்லாம் ஆரம்பிச்சாங்க.


 ஆனா, அவன் திடீர்னு காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடா போய்ட்டான்.


* அப்படியே சரத்பவார் கட்சிக்கு மாறினான்.* *கல்யாணத்துக்கு முன்னாடியே உடம்பு சரியில்லாம,*

*கிட்னி ஃபெயிலியராகி 2003ல் இறந்துட்டான்.*


 மூவேந்தன் தான் நல்ல நிலைமைக்கு வந்து குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். ஆனா அவனுக்கே லட்சக்கணக்கா கடன் வாங்கி வைத்தியம் பார்த்துக் கடன்காரி ஆனது தான் மிச்சம்.


 எல்லாக் கட்சிக்காரங்களும் எனக்கு நல்லா தெரிஞ்ச வங்கதான். ஆனா அதவச்சு அவங்ககிட்டே உதவி கேக்கத்தான் சங்கடமா இருக்கு

இப்படியும் இருக்காங்க பாருங்க சார் மனிதர்கள்... நம்ம தெருவுல் எம்.எல்.ஏ இருந்தாலே நாம் விடுற அலும்பு தாங்காது.


 இதனால் கிடைக்கற கூலி வேலைக்கெல்லாம் போவேன். கூட இருக்கற பொண்ணுக கிட்டே நான் முன்னாள் எம்.எல்.ஏ.ன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிடுவேன்.


* நானும் அவரும் சமபந்தி விருந்து கொடுத்த *பருத்திக்காட்டுலயே எண்பது ரூபாய் கூலி வேலைக்குப் போனேன்.*

*அன்னிக்கு எனக்கு கண்ணீரே வந்துருச்சு *


வசதியா இருந்துட்டு ஏழ்மை நிலைமை அடைவது.. உலகத்திலேயே கொடுமையான விஷயம்

அதுவும் 35 ஏக்கர் நிலம் பில்டிங் ஸ்கூல்

நல்ல வருமானம் எல்லாத்தையும் அரசாங்கத்துக்கு இலவசமா எழுதிக் கொடுத்துட்டு... ஐயோ மகா பரிதாபம்


 ‘அய்யனார்புரம்’ னு அவரு மேல இருந்த மரியாதையில ஒரு ஊரையே மக்கள் கூப்பிட்டாங்க.

ஆனா இப்ப என் நிலைமை?


 சமீபத்தில் உடம்பு சரியில்லாம போய்,

*தேனி ஆஸ்பத்திரில வரிசைல நின்னேன்.* என்னைத் தெரிஞ்சுக்கிட்ட டாக்டர் வந்து, ‘உள்ள வாங்கம்மா’ ன்னு அழைச்சிட்டுப் போனார்.


* ‘மாத்திரை வாங்க காசில்லாமயா கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க?’ ன்னு கவலையா கேட்டார்.*


* இப்பவும் அவுரு தயவுல தான் மாத்திரை கொடுத்திட்டு வர்றாங்க*

*மனிதர்கள் இன்னமும் உயிரோட தான் இருக்காங்க*


* எம்.எல்.ஏ. பென்ஷன் ரூ 250 ல ஆரம்பிச்சு இப்ப ஆறாயிரம் ரூபாய் வாங்குறேன்.*


 அதுல கடனுக்கே அஞ்சாயிரம் போயிடுது. மீதி ஆயிரத்தில தான் எல்லாம் பண்ண வேண்டிருக்கு.


 என் மருமக ரேணுகா தினசரி ரூ30 இல்ல 40 ரூபாய் கொண்டு வருவா. என் பேரன் இருபது ரூபா கூலி வாங்கிட்டு வருவான்.


 இப்படியே தான் வாழ்க்கை நகருது.

என் உடம்பு நல்லா இருந்தா நானே கூலிக்குப் போய் சமாளிப்பேன்.

ஆனா முடியல…

கடனையும் அடைக்க முடியல!’’ என்றார்.


** *கிருஷ்ண வேணிக்குப் பாதுகாப்பாக இருக்கும் அவரது பேரன் யோகபிரபு,*

*‘‘பாட்டி வேலைக்குப் போக முடியாததால நான் கடை வேலைக்குப் போய்ட்டு வந்து, இவங்களை பாத்துக்கறேன்.*


 பிரஷர் வந்து ரத்தவாந்தி எடுத்ததிலிருந்தே ரொம்ப நம்பிக்கையில்லாம இருக்காங்க.


 இப்பத்தான், நாம முந்தி எப்படியெல்லாம் இருந்தோம்… ஆனா கடைசில இந்த நிலைமைக்கு

வந்துட்டோமேன்னு கவலைப்படறாங்க.


 பாட்டி பங்குக்கு இந்த மாட்டுக் கொட்டகை மட்டுந்தான் மிச்சம்.

இப்ப மாடெல்லாம் இல்லாததால,

சுவர் வச்சுத்தடுத்து அவங்க

படுக்கறதுக்கு இடம் ஒதுக்கியிருக்கோம்!

என்றான்.


 பேசிக் கொண்டிருக்கும் போதே கிருஷ்ணவேணி தட்டுத் தடுமாறி எழுந்து இரண்டு பைகளை எடுத்துப் பழைய போட்டோக்களை யெல்லாம் காட்டினார்.


 அந்த இரண்டு பைகள், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான சில தட்டுமுட்டு சாமான்கள்,

நிறைய மாத்திரைச் சீட்டுகள்…


* இவை தான்* *லட்சாதிபதியான*

*இந்த மாஜி எம்.எல்.ஏ.வின் கணவனும் மனைவியுமாக 10 வருடம் தேச சேவை உண்மையும் உத்தமுமாக செய்த* *இந்த ஏழை தியாகியிடம் பிரதான சொத்தாக இருக்கிறது.*


* இந்த நிலையிலும் நம்மிடம்,*

*ஏதாவதுகுடிச்சிட்டுப் போங்க...*

*கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே*

*என்று தடுமாறி ஸ்டவ் அருகில் போனவர்,* *தலை சுற்றி அப்படியே உட்கார்ந்து விட்டார்.*


 *என்னால முடியலையே....’’ என்றபடி அழவும் ஆரம்பித்தார். இப்படியும் கூட ஒருவர் இருக்க முடியுமா என்ற வேதனையுடன் விடைபெற்றோம்.*


*#குறிப்பு;*

*இந்த மாதிரி செய்தியை பரப்புவோம்.*

*யாராவது காங்கிரஸ் தலைவர்களோ...,*

*மனிதாபிமானமுள்ள..* *அரசியல்வாதிகளோ..*

*பார்த்து திருமதி கிருஷ்ணவேணி அம்மையாரின்* *கடைசி காலத்திலாவது ஏதாவது உதவி செய்து புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.*


Rate this content
Log in

Similar tamil story from Tragedy