அடிமையின் புன்னகை
அடிமையின் புன்னகை
அரபி ஒருவர் தன் அடிமையுடன் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பொம்மைக் கடை தென்பட்டது. அங்கு வாசலில் விற்பனைக்கு வைத்திருந்த மூன்று புத்தர் சிலைகள் அரபியை கவர்ந்தன.
அரபி பரந்த மனப்பான்மை கொண்டவர். மாற்று மதத்தவரையும் மதிப்பவர். அந்த மூன்று புத்தர் பொம்மைகளில் ஒன்றை வாங்கி தன் வீட்டு வரவேற்பறையில் வைக்க விரும்பினார்.
மூன்று புத்தர் சிலையில் ஒன்று புன்னகைத்தபடி இருதது. மற்றொன்று தியான புத்தர். மூன்றாவது புத்தர் சிலை கண்களில் கண்ணீர் துளிகளுடன் வடிவமைக்கப் பட்டு இருந்தது.
அரபி தியான புத்தர் சிலையை விலை பேசி வாங்கிக் கொண்டார். தன் அடிமைக்கும் ஒரு புத்தர் சிலையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
மிச்சம் இருந்த மற்ற இரண்டு புத்தர் சிலைகளில் உனக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள் என்று தன் அடிமையிடம் கூறினார்.
அடிமை புன்னகைக்கும் புத்தர் சிலையை எடுத்துக் கொண்டார்.
அதை கண்ட அரபிக்க்கு ஆச்சரியம். அடிமை வாழ்க்கையில் நீ துன்பப்படுவதால் கண்ணீர் துளிகளுடன் உள்ள புத்தர் சிலையை தேர்ந்தெடுப்பாய் என்று நினைத்தேன். நீ புன்னகைக்கும் புத்தர் சிலையை எடுத்திருக்கிறாயே. என்ன காரணம் என்று அடிமையிடம் வினவினார் அந்த அரபி.
"அடிமை வாழ்க்கை என்று ஆகிவிட்ட பின் அதையே நேசிக்க ஆரம்பித்து விட்டேன். கடவுள் தந்த இந்த வாழ்க்கை இனிமையானது. மகிழ்ச்சியானது என்று நினைக்க கற்றுக் கொண்டேன். அதனால் புரிதல் ஏற்பட்டது. மேலும் கடவுள் அருளால் அடிமைகளை கொடுமைப் படுத்தாத அரபி எனக்கு கிடைத்திருக்கிறார். அதனால் புன்னகை செய்யும் இந்த புத்தர் சிலையை தேர்ந்தெடுத்தேன். புத்தரின் புன்னகை என் வாழ்க்கையின் புன்னகை" என்று கூறிய அடிமை புன்னகையுடன் அரபியின் ஒட்டகத்தை பிடித்தபடி நடந்தார். ஒட்டகத்தின் உதடுகளும் சிரித்தபடி தெரிந்தது.
