Tamizh muhil Prakasam

Drama

4  

Tamizh muhil Prakasam

Drama

மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பம்

மாற்றம் நம்மிலிருந்து ஆரம்பம்

2 mins
841


"வாங்க ராதிகா! சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க. எங்க கடை திறக்கறதுக்குள்ள உங்களால வரமுடியாம போயிருமோன்னு யோசிச்சிட்டே இருந்தேன். நல்ல வேளை வந்துட்டீங்க" என்று சற்றே படபடப்புடன் வரவேற்ற ரத்தினத்திற்கு ஒரு சிறு புன்னகையை பதிலாக வழங்கி விட்டு, கடையினுள் நுழைந்தார் ராதிகா.


கைப்பையினை மேசைக்கு கீழ் இருந்த அலமாரியில் வைத்து விட்டு, தான் கையோடு கொண்டு வந்திருந்த சில ரோஜா மலர்ச் செண்டுகளை, அவற்றுக்கென சிறிது நீர் நிரப்பப்பட்ட பூந்தொட்டிகளில் நேர்த்தியாக அடுக்கினார்.


" நீங்க போய் மீதமிருக்குற மற்ற பூங்கொத்து எல்லாத்தையும், ட்ரோலில வெச்சு எடுத்துட்டு வந்துருங்க சார். நான் அதுக்குள்ள எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்கறேன். இன்னைக்கு பத்து மணிக்கு மேல மூகூர்த்தம் இருக்கு. அதனால, இன்னைக்கு கொஞ்சம் அதிகமாகவே பூங்கொத்து முன்பதிவு வந்திருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல, முன்பதிவு பண்ணினவங்க எல்லாரும் வருவாங்க" என்றவாறு வெளியே சென்றார் ரத்தினம்.


சற்று நேரத்திற்கெல்லாம், முன்பதிவு செய்திருந்தவர்கள் ஒவ்பொருவராய் வர, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தது.வந்தவர்களில் ஒருவர் மலர்ச் செண்டுகளை வாங்கிக் கொண்டு," வாழ்த்து அட்டைகள் கிடைக்குமா?" என்று கேட்க, இல்லை என்று சங்கடத்துடன் தலையாட்டினார் ராதிகா. இப்படியே, இன்னும் சிலரும் கேட்டனர். இல்லை என்ற பதிலை மீண்டும் மீண்டும் சொல்வது ராதிகாவுக்கு சற்றே சங்கடமாகத் தான் இருந்தது.


இது பல மணி நேரங்கள், ராதிகாவின் மனதினுள் ஓடிக் கொண்டே இருந்தது. ரத்தினம் வந்ததும், " நாம் வாழ்த்து அட்டைகளும் வாங்கி வைத்து வியாபாரம் செய்தால் என்ன?" என்று கேட்க, "சரி பார்க்கலாம்" என்ற ரத்தினம், அடுத்து வந்த வாரத்தில் ஒரு நாள் சில வாழ்த்து அட்டைகள், சிறிய பரிசுப் பொருட்கள், போன்றவற்றை வாங்கி வந்தார். அந்த பகுதியில் சில திருமண மண்டபங்கள் இருந்தன. இதனால், பூங்கொத்து வாங்க வருபவர்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு வேறு எங்கும் அலைய வேண்டியில்லாமல், அங்கேயே வாங்கிக் கொண்டனர். வியாபாரமும் நன்றாக நடந்தது.

ரத்தினத்திற்கு என்ன ஒரு உறுத்தல் எனில், பூங்கொத்து வியாபாரம் மட்டும் செய்கையில், பெரியவர்கள் மட்டும் கடைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இப்போது, பரிசுப் பொருட்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனையும் செய்வதால், பள்ளி, கல்லுரி மாணவ மாணவியரின் வரத்தும் அதிகரித்தது. யார், என்ன பரிசுப் பொருள் வாங்குகிறார்கள் என்பதை எல்லாம் நாளும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாதே. மேலும், கேள்வி கேட்டால், சரியான பதிலும் கிடைக்காது. " உனக்கென்ன வந்தது, நான் காசு கொடுத்து தானே வாங்குகிறேன். நீ ஒன்றும் ஓசியில் தரவில்லையே" போன்ற விவாதங்கள் எழும். எனவே, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுப் பொருள் வியாபாரத்தினையே நிறுத்தி விடலாமா என்று சமயங்களில் ராதிகாவிடம் ஆலோசனை செய்தார்.


அப்போது தான் ராதிகாவுக்கு அந்த யோசனை தோன்றியது. நாம் ஏன் நமது கடையில், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று ஒரு கட்டுப்பாடு வைக்கக் கூடாது? என்றார் ராதிகா. ரத்தினத்துக்கும் அது நல்ல யோசனையாக தோன்றியது. அடுத்து சில நாட்களில், காதலர் தினம் வரவிருந்தபடியால், உடனே அந்த யோசனையை அமல் படுத்தினர்.இப்படி ஒரு கட்டுப்பாடு போட்டால், யார் கடைக்கு வருவார்கள். காதலர் தினத்தன்று முகூர்த்த நாளாக இருந்தபடியால், வியாபாரத்தில் எவ்வித நஷ்டமும் ஏற்படவில்லை. வழக்கம் போல் பூங்கொத்து வியாபாரம் நடந்தது.


காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல், காதலின் உண்மையான அர்த்தம் விளங்காது, அது ஓர் சுயநல மற்றும் ஒருதலைப் பட்ச முடிவாக இருந்து விட்டால் ஏற்படும் விபரீதங்களை எல்லாம் சமீப காலமாக கண்கூடாக கண்டு வருகிறோம்.பலர் கூடி இருக்கும் இடத்திலேயே, தன் காதலை ஏற்காதவரை, அமில வீச்சுக்கு ஆளாக்குதல், கொலை செய்தல் என்று சர்வ சாதாரணமாக நிகழும் சமூகத்தில், இப்படி ஒரு சிலர் கட்டுப்பாடுகள் விதிப்பதால், அனைத்தும் சரியாகி விடும் என்பதில்லை. ஆனால், அதற்கு வழிகோலும் வகையில், மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஒத்துப் போகாமல், வியாபாரிகள் சுயநலத்தை சற்றே ஒதுக்கி வைத்தால், அது கூட நல்மாற்றத்திற்கு ஒரு வழியாக அமையலாம்.


ரத்தினம் அவர்கள் சுயநலம் பாராமல், மேற்கொண்ட முயற்சி சரி தானே?



Rate this content
Log in

Similar tamil story from Drama