குடியரசு தின கொண்டாட்டம்
குடியரசு தின கொண்டாட்டம்
குடியரசு தின கொண்டாட்டம்
அந்த நகரத்தின் புற நகர பகுதியில் அமைந்தது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு.அதில் ஒவ்வொரு அடுக்கிலும் ஐந்த் வீடுகள் வீதம் ஐந்து அடுக்கில் மொத்தம் இருபத்தைந்து வீடுகள் இருந்தது.
அந்த குடியிருப்பு புதிதாக கட்டி குடும்பங்கள் அதில் வீடு வாங்கி குடியேறி இருந்தார்கள்.இப்போது தான் அதை கட்டிய ஒப்பந்ததாரர்
ஒரு குடி இருப்போர் சங்கம் அமைத்து அங்கு நடக்கும் பராமரிப்பு போன்ற பொறுப்புகளை அந்த சங்கத்திடம் ஒப்படைத்து இருந்தார்.
இது வரை அங்கு நடந்த விழா,கொண்டாட்டம் போன்றவைகளை ஒப்பந்ததாரர் பொறுப்பு எடுத்து செய்து முடித்து இருந்தார்.
புதிதாக பொறுப்பு எடுத்த நல சங்க நிர்வாகிகள் வர போகும் குடியரசு தினத்தை கொண்டாட,முடிவு செய்து அதை நடத்தி முடிக்க ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் பொறுப்பை கொடுக்க எண்ணினார்கள்.
அதை கூட்டம் போட்டு முடிவு செய்து
இருந்தார்கள்.குழுவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விவரத்துடன் விண்ணப்பிக்க சொன்னார்கள்.
மூன்று நாளில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் கொடுத்து இருந்தார்கள்.அதை நல சங்க நிர்வாகிகள் பரிசீலனை செய்து பார்த்து விட்டு,ஒரு நிர்வாகி,விண்ணப்பம் செய்த குடும்ப உறுப்பினர்களின் இருவரை மட்டும் தவிர்க்கலாமே என்று தன்னுடைய எண்ணத்தை சொல்ல,
மற்ற நிர்வாகிகள் காரணம் கேட்க,அவர்கள் இருவரும் தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்.கூட்டம் போடும் போது அவர்களும் நமக்கெதிரில் சரி சமமாக அமர்ந்து பேசுவார்கள்.இது தான் சந்தர்ப்பம் என்று ஒவ்வொருமுறையும் நமக்கு எதிரில் அமர்ந்து தேவை இல்லாமல் கேள்விகள் கேட்டு கொண்டு இருப்பார்கள்.அதனால் அவர்கள் இருவரையும் தவிர்த்து குழு அமைக்கலாம்.அல்லது குழு இல்லாமல் நாமே கொஞ்சம் சிரமப்பட்டு செய்து முடித்து விடலாம் என்று ஆலோசனை சொன்னார்.
நல சங்க நிர்வாகிகள் எல்லோருமே உயர்ந்த சமூகத்தை சேர்ந்தவர்கள்.
அதனால் அந்த ஒரு நிர்வாகி சொன்னது சரி தான் என்று மற்றவர்கள் ஒத்து கொண்டார்கள்.
இவர்கள் எடுத்த முடிவு,இதை படிக்கும் நமக்கு தான் தெரியும்,வேறு யாருக்கும் தெரியாது.
குடியரசு தின கொண்டாட்டம், என்பது சாதி மதம்,ஏழை பணக்காரன்,வித்தியாசம் பார்க்காமல் கொண்டாட வேண்டிய விழா.ஆனாலும் மக்கள் மத்தியில் சாதியில் உயர்ந்தவர்கள்,
தாழ்ந்தவர்கள் என்ற பாகு பாடு
இன்னும் இருக்கு என்று அறியும் போது மனம் வலிக்க தான் செய்கிறது.நல்லவேளை அந்த இருவருக்கும் தங்களை நிராகரிக்கிறார்கள் என்ற விசயம் அவர்களுக்கு தெரியாது. தெரியாமல் இருப்பது தான் நல்லது.காரணம் அவர்கள் இருவரும் நல சங்க நிர்வாகிகள் மீது பெரும் மதிப்பு வைத்து இருந்தார்கள்.
