குழந்தை மனசு
குழந்தை மனசு
ஒரு பழைய ஆல்பம் ஒன்றை எடுத்து முகத்தை வேறு பக்கம் திருப்பி அதை தூசி தட்டி கொண்டே அம்பிகா சீக்கிரம் கடைக்கு போய் வாங்கிட்டு வா பையன் கிளம்பி வந்துகிட்டே இருக்கான் என பாலா சொல்லிக்கொண்டு தூசி தட்டி முடித்தவுடன் செர்ரில் அமர்ந்து ஆல்பத்தை புரட்டி ஒரு போட்டோவை தேடினார்.
அது அவர் மகனுக்காக அவர் செய்த ஆல்பம், அவனது சிறு வயது முதல் திருமண போட்டோக்கள் வரை அதில் இருந்தது.
தன் மகனின் குழந்தை போட்டோவை ரசித்து கொண்டே தூங்கி விட அவர் மகன்,மருமகள், பெண் பேரக் குழந்தை வந்து புத்துணர்ச்சி பெற்று விட்டு பேத்தி வந்து பாலாவை தட்டி எழுப்ப பாலா எழுந்து அவளை பார்த்து விட்டு தூக்கி முத்தம் கொஞ்சி வெளியே கூட்டி சென்று சுற்றிக் காட்டினார்.
பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.
பேத்திக்கு தன் கையால் ஊட்டிவிட்டு,மகனிடம் கண்டிப்பாக வேலை மற்றும் பெங்களுரு சிட்டி பற்றி விசாரித்தார்.
ஆம்,அவர் மகன் குடும்பத்துடன் பெஞ்களுரில் செட்டில் ஆகிவிட்டான் வேலை காரணமாக.
அந்த இரண்டு நாட்கள்,பாலா பேத்தியை தாங்கினார் அவர் அன்பால்.
தனது மகன் குடும்பம் இரண்டு நாள் கழித்து கிளம்ப அவர் வழி அனுப்பி விட்டு உள்ளே வந்து அவர் மனைவி அம்பிகா பார்க்காத போது கண்ணீர் துளிர்த்தார்.
