கொடிய தொற்று நோய்
கொடிய தொற்று நோய்
கொடிய தொற்று நோய்
ராஜா பெற்றோருக்கு ஒரே பிள்ளை.
படித்து முடித்து சென்னை மென்பொருள் நிறுவனத்தில் வேலை.நல்ல உழைப்பாளி.
அவனுடைய உழைப்பை கௌரிக்கவிக்கும் வகையில் அவனை சில காலம்,அதாவது மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் பணி புரிய அனுப்பி வைத்தனர்.போன இடத்தில் அவனுக்கு அந்த வேலை பிடித்து போக,அங்கே நிரந்தரமாக இருக்க விரும்பினான்.
அவனுடைய சம்பளம்,வெளிநாடு போன்றவை அவனுக்கு ஒரு நல்ல மனைவியும் அமைந்தது.அவளும் அமெரிக்காவில் வேலை செய்து வந்ததால்,மிகவும் வசதியாக போய் விட்டது.
குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது.மனைவிக்கு இனியும் விடுமுறை கிடைக்காது,வேலைக்கு போய் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை.குழந்தையை பார்த்து கொள்ள தன்னுடைய அம்மாவை வரவழைத்து கொண்டான்.ஆயிற்று அம்மா வந்து,ஐந்து மாதம்.இன்னும் ஒரு மாதத்தில் அம்மா இந்தியா திரும்ப வேண்டும்.
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கொடிய தொற்று நோய் கிருமி பரவ,போக்குவரத்து நின்று போனது.
ஊரில் அப்பாவிற்கு அந்த கொடிய நோய் தாக்க,அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.அவர் அம்மாவை பார்க்க விரும்ப,அம்மாவை தனியே அனுப்ப முடியாமல் திணறி கொண்டு இருந்தான்.சாதாரண நாளில் அங்கு இருந்து சென்னைக்கு நேரடி விமான தொடர்பு இருந்தது.இப்போது மூன்று இடம் சுற்றி தான் போக முடியும்.அம்மாவிற்கு அது சாத்தியம் இல்லை.அம்மாவும் உடனே அப்பாவை பார்க்க விரும்பினார்.அந்த கவலை அவர் உடல்நிலையை பாதிக்கும் அளவிற்கு இருந்தது.அவனும் மனைவியும் ஒரு மாதம் விடுமுறை எடுத்து கொண்டு,நான்கு பேரும் இந்தியா புறப்பட்டனர்.பல சோதனைகள்,காத்து இருப்பு போன்றவை கடந்து வந்து அப்பாவை பார்த்து இரண்டு நாளில் அவர் இறந்தும் விட்டார்.
ராஜாவிற்கு கடுமையான மன அழுத்தம்.பணத்திற்கு வேண்டி அப்பாவை பறி கொடுத்த மாதிரி ஒரு குற்ற உணர்வு அவனை வாட்டியது.
உடனே அந்த வேலைய ராஜினாமா செய்து விட்டு,சென்னையில் குறைவான சம்பளத்தில் வேலை தேடி கொண்டான்.பணத்திற்காக இனி அம்மாவை அல்லது மாம்னார் மாமியாரை இழக்க விருப்பம் இல்லை.இப்போது அவன் குற்ற உணர்வு நீங்கி நிம்மதியாக குடும்பம் நடத்தி வருகிறான்.
