Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

கொரோனா

கொரோனா

2 mins
248


கொரோனா 


அவனுக்கு ஆரம்பத்தில் சளி இருமல் காய்ச்சல் இருந்தது.வீட்டிலேயே கை வைத்தியம் பார்த்தான்.காய்ச்சல் கொஞ்சம் குறைந்த மாதிரி இருந்தது.ஆனால் சளி இருமல் நிற்கவில்லை.நெஞ்சில் சளி கட்டி இருக்கும் அதனால் இருமல் என்று நினைத்து ஒரு மிளகை லேசாக கடித்து சுவைத்து கொண்டு இருந்தான்.

அலுவலகமும் சென்று வந்தான்.ஆனால் இரவு வீடு திரும்பும் போது உடம்பு லேசாக சூடாக இருந்தது.


வீட்டில் எப்போதும் தயாராக இருக்கும் காய்ச்சல் மாத்திரையை முழுங்கி விட்டு படுத்து கொண்டான்.காலையில் காய்ச்சல் இருக்கவில்லை.இருமலுக்கு மிளகு கஷாயம் குடித்தான்.ராத்திரி பாலில் மஞ்சள் பொடி போட்டு கலக்கி குடித்து இருந்தான்.இருமல் சற்று குறைவாக இருந்தது.ஆனால் மூக்கு அடைத்த மாதிரி இருந்தது .

மூச்சு விட சிரமமாக இருந்தது.

அலுவலகம் சென்றான்.அங்கும் உடம்பு சூடு பரிசோதித்து பார்த்தார்கள்.எப்போதும் உள்ள சூடு தான்.அதிகமாக காட்டவில்லை.அவனுக்கு கொஞ்சம் ஆஸ்த்மா தொந்தரவு அப்பப்ப வந்து போகும்.

அதுவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டான்.


இப்படியே கை மருத்துவத்தில் ஒரு வாரம் ஓடி விட்டது.

அன்று காலை அவனால் எந்திரிக்க முடியவில்லை.களைப்பாக இருந்தது.மூச்சு விட ரொம்பவே சிரமமாக இருந்தது.உடல் நன்றாக கொதித்தது.உடனே ஒரு ஆட்டோவில் அவன் மனைவி அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல,உடனே அவனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும்.அபாய கட்டத்தில் இருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள்.

இருவரும் திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது.எப்ப வேண்டுமானாலும் குழந்தை உண்டாகலாம் என்ற நிலை.அதற்கான முயற்சியில் இருந்தார்கள்.

அவளுக்கு பயம் பிடிக்க,உடனே கணவனின் பெற்றோருக்கு தகவல் சொன்னாள்.தொடர்ந்து தன்னுடைய அப்பா அம்மாவிற்கும் தகவல் சொல்ல,எல்லோரும் பதறி அடித்து ஓடி வந்தார்கள்.

டாக்டரை பார்த்து கேட்க,இரத்த பரிசோதனை செய்து உள்ளோம்.முடிவு இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும்.அது வரை பொறுத்து இருங்கள் என்றார்.

இரண்டு மணி நேரம் கழித்து அவர் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்.அவரால் சுவாசிக்க முடியவில்லை.அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கு.யாரும் இப்போது பார்க்க முடியாது.

உயிர் பிழைப்பது சிரமம், என்று டாக்டர் சொல்ல,அவனுடைய மனைவி குய்யோ முறையோ என்று கத்தி மயக்கம் போட்டு விழ,அவளை அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.அவள் இன்னும் மயக்கத்தில் இருந்தாள்.

கணவனை கவனித்து டாக்டர் வந்து,ஒரு வாரம் தாமதமாக வந்ததால் அவனை காப்பாற்ற முடியவில்லை.கொரோனபாதிப்பு என்று தெரிந்ததும் வந்து இருக்க வேண்டும்.அலட்சியமாக விட்டதால்,இப்போது ஒரு உயிர் போய் விட்டது.. சாரி காப்பாத்த முடியவில்லை என்று சொல்லி விட்டார்.

அவளை பரிசோதித்த டாக்டர் அவள் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறாள் என்று சொன்னார்.

பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எப்படி அலட்சியமாக விட்டார்கள்,யாருடைய கவன குறைவு.எதையும் முளையிலேயே கிள்ளி விட வேண்டும்.சின்ன ஒரு அலட்சியம் ஒரு உயிர் போய் விட்டது. வர போகும் அந்த குழந்தையின் எதிர்காலம்

இப்போதைக்கு ஒரு கேள்வி குறி தான்

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract