கொரோனா காதல்
கொரோனா காதல்
சாரு என்ற 24 வயது நிரம்பிய அழகான பெண். ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறாள். வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்ணாயினும் அன்பும் பொறுப்பும் பக்குவமும் நிறைந்தவள். ராஜு என்ற பொறியியல் பட்டதாரி ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 30 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறான். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் ஆயினும் தன் தாய் தந்தையரை மகிழ்ச்சியாக பார்த்துக்கொண்டான். ராஜூவுக்கு சாருவின் மீது ஒருதலையாக காதல் இருந்தது. சாருவிடம் எத்தனை முறை தன் காதலை சொல்லியும் சாரு அதை ஏற்க மறுத்துவிட்டாள்.
"தன் அம்மா அப்பாவை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை" என்று கூறுவாள். ஒரு நாள் ராஜு வேலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி தலையில் பலத்த அடி உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சாரு ஐசியூவில் ராஜுவின் நிலையை பார்த்தவுடன் மூச்சடைத்து நின்றாள். மருத்துவர்கள் நிலைமை சற்று கடினம் தான் என்று கூறியவுடன் ராஜுவின் அம்மா அப்பா கதறி அழுதனர். " ஒரே பையன் டாக்டர் எவ்வளவு செலவு ஆனாலும் காப்பாத்துங்க" என்று கூறினார்கள். ராஜுவின் அம்மா கையை பிடித்து ஒன்றும் ஆகாது அம்மா என்று கூறிவிட்டு சென்றாள். இரவு பகல் பாராது ராஜனின் அருகிலேயே இருந்து ராஜாவிற்கு சேவை செய்தாள் சாரு. ராஜாவிற்கு ஒன்றரை நாள் கழித்து மயக்கம் தெளிந்தது. மயக்கம் தெளிந்து வருகையில் சாருவும் அங்கிருந்து கிளம்பி விட்டாள். ராஜுவின் அம்மா ராஜுவிடம் சாருவால் தான் நீ உயிர் பிழைத்தாய் என்று கூறியவுடன் ராஜுவின் கண்ணில் நீர் ததும்பியது. ராஜாவிற்கு சாருவை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் சாரு அவன் கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டே இருந்தாள். சில நாட்களில் ராஜாவிற்கு கொரோனா தொற்றும் உறுதியானது. விபத்தில் சிக்கி தலையில் காயம் பட்டதால் ராஜாவிற்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் மறுபடியும் ஐசியூவில் சேர்க்கப்பட்டான். சாரு ராஜுவின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டாள். ஒன்றும் ஆகாது ராஜு என்று கூறி கொண்டே மருத்துவம் பார்த்தாள். 10 நிமிடம் கழித்து ராஜுவின் நிலை சீரானது. ராஜு சாருவை பார்த்து புன்னகைத்தான். சாருவும் சிரித்திக்கொண்டே கொரோனா காதலையும் தந்துவிட்டது என மனதில் நினைத்து விட்டு கிளம்பினாள். அதன் பின் சில நாட்களாக சாருவும் ராஜுவும் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக் கொள்ளவும் இல்லை. சாருவிற்கு காதல் எண்ணம் மட்டும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஆனால் ராஜுவின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனை மட்டும் அவளுக்கு ஓடி கொண்டே இருந்தது. தன் காதலை அவனிடம் சொல்லவும் துடித்தாள். ஒருநாள் சாருவின் பெற்றோர் சாருவை பெண் பார்ப்பதற்காக நாளை மாப்பிள்ளை வீட்டார் வரப்போவதாக கூறினார்கள். இதைக்கேட்ட சாரு பித்துப்பிடித்து நின்றாள். தன் பெற்றோரிடம் அனைத்தையும் கூறிவிட முன்வந்தாள் ஆனால் வாய்ப்புகளோ அவளுக்கு கிடைக்கவில்லை. மறுநாள் சாருவின் உறவினர்கள் அவளை அலங்காரம் செய்து மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் நிறுத்தினர். சாரு அவர்களை கண்டவுடன் அழத்தொடங்கினாள். "ராஜு... " என்று கூறினாள்.
சாருவின் பெற்றோர் "என்னமா மாப்பிள்ளை பிடிச்சிருக்கா " என்று கேட்கவும் சாரு, ஓடி சென்று ராஜுவின் அருகில் நின்றாள். ராஜு அவள் கண்ணை துடைத்து விட்டான். " என்னை காப்பாத்தியவள என்னால எப்படி விட முடியும் " என்று கூறினான்.
இருவரின் திருமணம் பெரியோர் ஆசியுடன் இனிதே நடந்தது. இரு வீட்டாரும் மகிழ்ந்தனர்.

