கனவு
கனவு
இளம் வயதில் தீராத கனவுகள் இருப்பது சகஜம்.கனவை நனவாக்க படும் பாடு விவரிக்க இயலாது.
விஜயா,பெரிய கனவுடன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாள்.
சம்பாதிக்க வேண்டும்,உயர் பதவியில் அமர வேண்டும் என்று கனவு கண்டு அதை அடைய அங்கு வேலைக்கு சேர்ந்து இருந்தாள்.
சேர்ந்த ஆறு மாதத்தில் எல்லாமே நல்ல முறையில் போய் கொண்டு இருந்தது.இன்னும் ஆறு மாதத்தில் தன்னுடைய கனவு பாதி நிறைவேறி விடும் என்று உறுதியாக நம்பி கொண்டு இருந்தாள்.
அன்று அலுவகத்தில் முக்கியமான மீட்டிங்.வெளிநாட்டு கம்பனி நேர்காணல் நடத்துகிறது.அதில் வெற்றி பெற்றால்,அவள் அந்த குழுவின் தலைவியாக வாய்ப்பு அதிகம் இருந்தது.
அவள் தாய் மொழி பாடத்தில் படித்து வந்ததால், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகள் அத்தனை புலமை இல்லை.படித்தால் புரிந்து கொள்வாள்.அதையே மற்றவருக்கு ஆங்கிலம் மூலம் விளக்க தெரியவில்லை.
பள்ளியில் படிக்கும் போதே தாய் மொழி தான் உயிர்,மற்றவை தேவை இல்லை என்று மூளை சலவை செய்ய பட்டதின் விளைவு,அவளுடைய பேச்சு திறமைக்கு மொழி ஒரு இடையூறாக வந்து விட்டது.இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
முயன்று பார்க்கலாம் என்று ஒத்து கொண்டாள்.நேர்காணலில் அவர்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் எளிதானது,ஆனால் பதில் தெரிந்தும் அவளால் ஆங்கிலத்தில் பதில் கூறி விளக்க முடியவில்லை.மற்றவர்கள் வெளுத்து கட்டினார்கள்.விஜயா அதில் பின் தங்கி விட்டாள்.
அடுத்த கட்ட கனவு நிறைவேறுமா என்று அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது.இருந்தாலும் மனம் தளரவில்லை.அவளுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதில் சொல்லி இருந்தாள்,அதுவும் அவசரம் இல்லாமல் தெளிவாக பேசி இருந்தாள்.
அதனுடைய ரிசல்ட் நாளைக்கு தான் தெரியும்.அதற்காக காத்து இருந்தாள்.அவள் எதிர்பார்க்கவில்லை.அவளும் அந்த நேர்காணலில் தேர்வு ஆகி இருந்தாள்.மற்றவர்கள் என்ன தான் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி இருந்தாலும்,அதில் தெளிவு இல்லை,அவசரம் தான் தெரிந்தது.
இது வாடிக்கையாளர்களிடம் பேசி
அவர்கள் தேவை என்னவென்று புரிந்து செயல் பட வேண்டும்.
அவசரம் இல்லாமல் பேசிய விஜயா
மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்.அவளுடைய தெளிவான நிதானம் ஆன,பதில் அவளுக்கு அந்த பொறுப்பை. கொடுத்தது.
ரமேஷ், விஜயாவின் அத்தை பையன்.
அவன் விஜயாவை மிகவும் நேசித்தான்.ஆனால் காதல் அல்ல,அவளை தான் திருமணம் செய்ய விரும்பினான்.விஜயா அதற்கு உடன் பட்டு இருந்தாள்.ரமேஷ் சின்ன வயதில் இருந்தே அவளுக்கு தெரியும்.அவனை கட்டிக்க போகிற எண்ணத்தில் தேடி வந்த வரன்களை கூட தட்டி கழித்து விட்டாள்.
நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் என்று இருவரும் பேசி வைத்து இருந்தனர்.
அடுத்த மாதத்தில் இருவரும் பெற்றோரிடம் கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.அதன் படி இருவர் வீட்டிலும் சொல்ல,விஜயா வீட்டில் சம்மதம் சொல்லி விட்டார்கள்.
ஆனால் ரமேஷ் வீட்டில் அவனுடைய அம்மா சம்மதம் தெரிவிக்கவில்லை.
விஜயாவின் அப்பா கலப்பு திருமணம் செய்தவர்.அதை சுட்டி காட்டி,விஜயாவின் அம்மா வேறு ஜாதி என்று கூறி திருமணம் வேண்டாம் என்று கூற,ரமேஷும் விஜயாவும் பெற்றோர்கள் மீறி இந்த திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து அந்த ஏற்பாடை நிறுத்தி விட்டனர்.விஜயாவின் இந்த கனவு நிறைவேறவில்லை.
வருத்தம் தான் என்ன செய்வது……
