கனவு நிஜம் ஆனது
கனவு நிஜம் ஆனது
கோகுல் அந்த விளம்பரத்தை பார்த்து,தன்னுடைய கனவு நிஜம் ஆக போகிறது என்று எண்ணிக்
கொண்டான்.
அவனுக்கு சிறு வயது முதல் நாட்டுக்காக உழைக்க வேண்டும்,அதுவும் ராணுவம் அல்லது விமான படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.
அன்றைய நாளிதழில் வெளியான விளம்பரம்,அதை உறுதி படுத்தியது.இளம் வீரர்கள் ராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடல் தகுதி சோதனைக்கு வர சொல்லி இருந்தார்கள்.
குறிப்பிட்ட நாளில் அவனும் அங்கு செல்ல,ஒவ்வொரு சோதனையாக முடித்து கொண்டு வர,அவன் இதயம் படபடக்க தொடங்கியது.
இறுதி கட்ட சோதனையும் வெட்டி கரமாக முடிந்து விட்டது.
அடுத்து அதன் முடிவுக்காக காத்து
இருந்தான்.
மாலை வரை அந்த தேர்வு நடந்து முடிந்த பிறகு,தேர்வு ஆனவர்கள் பெயரை அறிவிக்க தொடங்கி
னார்கள்.முதல் பெயரே அவனுடைய பெயர் தான்.
அறிவித்த பிறகு,இது முதல் கட்ட தேர்வு தான்,அடுத்து ஆறுமாதம்
நடக்கும் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றால் தான் வேலை.
அதை எப்படியும் கடும் முயற்சியில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்,அடுத்த கட்ட பணியை கோகுல் தொடங்கினான்
