கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 35
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 35
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 35
" காதல் ஒரு கடலில் அகப்பட்ட கப்பல் போன்றது.. கடல் சீற்றங்களை வென்று கரை சேரும் கப்பல் போன்றதுதான் காதல்,மனித சீற்றங்களை வென்றால் தான் காதலில் வெற்றி பெற முடியும் " என்று புரிந்து கொண்ட கெளதம்.. திரிஷா கல்லூரி வரும் பேருந்தை தெரிந்து கொண்டவன்..அவள் கல்லூரி முடிந்து ஊர் திரும்பும் பேருந்து எதுவென்று அறிந்திட..
பிற்பகல் 3.00 மணிக்கு கல்லூரிக்கு வந்து காத்திருந்தான்... எப்படியாவது அவளை பார்க்க வேண்டும்..பேச வேண்டும் என்ற ஆவல் தலை தூக்க..தலைகால் புரியமால் பைத்தியம் பிடித்தவனாக கல்லூரி வாயிலை பார்த்த படி வாக்கிங் செய்தான் கெளதம்...
சுடிதாரும்,சேலையுமாக வண்ண வண்ண நிறங்களில் தோகை விரித்தாடும் மயில் கூட்டமாக கல்லூரி மாணவிகள் வருவதைக் கண்டான்.. மயிலாட்டம் கண்ட கார்மேகம் போல் கரைந்தான்.. நிமிர்ந்தான் கண்கள் அலைபாய அவனது தேவதையை தேடினான்.. தேடினான்...
தேடிவந்த புள்ளிமான் ஓடோடி துள்ளல் நடையில் தனது தோழியின் கைகோர்த்து..கதிரவனின் ஒளியை முழுவதும் உள்வாங்கியவளாக பிரகாசமான புன்னகையான முகத்தை கண்டு சிலிர்த்தவன் , அவளின் கண்களில் படாமல் மறைந்து நின்று சில நொடிகள் அவள் விழிகளை பார்தாலே ஒழிந்திடும் கவலைகள் ஒளிர்ந்திடும் வெற்றியென நினைத்து அவளை பார்த்துக் கொண்டே இருந்தான், இல்லை அவள் விழிகளை பார்த்துக் கொண்டே இருந்தான்.. சங்கரன்கோவில் செல்லும் பேருந்தில் திரிஷா ஏறினாள்.. சிவகாசி செல்லும் பேருந்தில் கெளதம் ஏறினான்..
மறுநாள் அதே பேருந்தில் அதே சீட்டில் அதே பெண்கள் இருக்க .. பேருந்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதிலும்.. அவர்களை இடித்துக் கொண்டு முன்னேறி அவள் இருக்கையை அடைந்தான்..நேற்றவது அவன் பேருந்து ஏறும் போது பார்த்தால் இன்று அவனது ஊர் பக்கம் வரவும் தலையை குனிந்தபடியே பயணித்தால்.. திரி ..திரி.. என்று மெதுவாக அழைத்தான்.. அவள் கண்டு கொள்ளவில்லை..இவன் வருகையும், நிற்பதையும்.. அவள் அறிய பல வித்தைகள் செய்தான்.. அவள் செத்த பாம்பாக அமர்ந்திருந்தாள்...
கல்லூரிப் பக்கம் பேருந்து வர ..இவனை எப்படி கடந்து செல்லப் போறோம்... என்று விம்மிக் கொண்டிருந்தாள்..அவனோ என்ன சொல்லலாம் இவளிடம் பேச என்று எண்ணிக் கொண்டிருந்தான்.. பேருந்து கல்லூரி நிறுத்தத்தில் நின்றது.. திரிஷாவுக்கு இதயம் 💓 பட பட வென பட்டாசு சத்தம் போல் துடித்தது ... மாணவர்கள் இறங்க ஆரம்பித்தனர்.. திரிஷாவுக்கு மார்கழியிலும் வேர்த்தது.. இறங்கிட எழுந்தாள் நிவேதிதா.. வழியில் கெளதம்.. விழித்தால் திரிஷா.. முறைத்தான் நடத்துனர்..ஓ.சிவகாசி தான் போகணும் இந்த சீட்டில் உட்காரு .. பெண் பிள்ளைகள் இறங்க வழியை விடு என்று முன்பக்கம் கெளதமை விரட்ட.. அதிவேகமாக திரிஷா இறங்கி.. திரும்பி பார்க்காமல் ஓடினாள்.. இவன் இறைவனை தேடினான்..சக்கம்மாள் என்னை ஏன் இப்படி சோதிக்க என்று வேண்டினான்...
மறுநாள் திரிஷா என்று சத்தமாகவே அழைத்தான்... அவளின் ரியாக்ஷன் தான் என்ன ?
.....தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

