கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 32
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 32
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 32
" பணம் 💰, காமம் போன்ற சில எதிர் பார்ப்புகளை எதிர் பார்த்து வரும் மாயமான அன்புதான் காதல் "என்று முறைத்து கொண்டிருந்த கெளதமிடம் நாட்டாமை கூறிக்கொண்டு இருக்கும் வேளையில்..
கருப்பு நிற மஹிந்திரா பொலிரோ நியோ கார் நின்ற வேகத்தில் அதில் இருந்து அருவாள்,கத்தி,வாள்கள் ஏந்திய ரவுடிகள் பத்து பேர் இறங்கி கெளதமை நோக்கி ஓடி வந்தனர்..
அவர்களை பார்த்த கெளதமும்,நாட்டாமை குருசாமியும் SP யின் வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டார்கள்.. ரவுடிகள் வீட்டின் கதவை ஆயுதங்கள் மூலம் உடைத்து உள்ளே முயல .... முற்பட்ட போது, இரும்பு தொப்பி அணிந்து கையில் துப்பாக்கியுடன் காவல்துறை அங்கு வர ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்..
கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டு உள்ளே இருந்த ஓய்வு பெற்ற காவல்துறை துணை தலைவரிடம் பயந்து நடுங்கியபடி, சார் ரவுடிகள் இங்கேயும் வந்துட்டாங்க என்று நாட்டாமை சொல்ல... பயப்படாதீங்க.. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்.. அவங்க இங்க வருவாங்கனு நல்லாவே தெரியும்.. அதனால்தான் முன் கூட்டியே காவல்துறை நண்பர்களை வீட்டின் அருகே பாதுகாப்புக்கு நிறுத்தி இருக்கேன் என்றார் ஓய்வு காவல்துறை தலைவர்.. இப்போது தான் நாட்டாமை குருசாமிக்கு மீண்ட உயிர் மீண்டும் வந்ததாக உணர்ந்தார்...
கூலிப்படையினர் கைது செய்யப்பட்டதை அறிந்த கமல்.. மதுரை நகரில் உள்ள குண்டர்கள்,பயில்வான்கள் , ரவுடிகள் என அனைவரையும் ஃபோனில் அழைத்து, மதுரை முழுக்க ஆட்களை நிறுத்தி கெளதம் எப்ப எப்படி எந்த வழியில் எந்த ஒரு வாகனத்தில் வந்தாலும் தலையை கொய்து
வாருங்கள்.. என்று உத்தரவு பிறப்பித்தார்...
காலை ஆறு மணி முதல் திரிஷாவின் அப்பா கமலின் கூலிப்படையினர் நீதிமன்றத்துக்கு உள்ளே வெளியே அக்கம் பக்கம் எல்லா இடங்களிலும் நின்றிருக்க மணி பத்து..திக் திக் நிமிடங்களில் நீதிபதி வந்து தனது இருக்கையில் அமர.. கமல் கெளதமின் வருகையை எதிர்பார்த்து கையை பிசைந்தபடி கோபத்துடன் நீதிமன்றத்தை செக்கு மாடுகள் போல் சுற்றி வர..
மணி 12.00 PM ஆனது, காதலர்கள் நீதிமன்றம் வரவில்லை.. மதிய சாப்பாடு வேளை முடிந்து விசாரணை ஆரம்பம் ஆனது அந்நேரத்திலும் காதலர்கள் வரவில்லை..காதலர்களை காணமால் கமல் கையை பிசைந்து பிசைந்து பூரி போல் உப்பியிருந்தது அவரது கை..
விசாரணை முடிவுற இன்னும் எட்டு நிமிடங்களே இருந்தது..அங்கு நின்றிருந்த திரிஷாவின் அப்பா கமல், வக்கீல் R.S துரை சிங் , உறவினர் அனைவருக்கும் நெஞ்சு படபடக்க வியர்வை துளை போட்டு தோலின் வழியே வடிந்தோடியது ..
5 நிமிடங்கள் இருந்த நிலையில் காதலர்கள் நீதிபதி முன் நிறுத்தப்பட்டனர்..
மதுரை நகர் முழுவதும்.. நீதிமன்றம் முழுவதும் நிறுத்தி வைத்திருந்த ரவுடிகளை மீறி எப்படி உயிரோடு வந்தான் கெளதம்.. என்று கமல் புரியாமல் சிலையாக நின்றான்..
ஓய்வுபெற்ற SP யின் வீட்டிலிருந்து ஓய்வுபெற்ற SP உறவினர்கள் வாகனம் 20 மேற்பட்ட கார்கள் அணிவகுத்து புறப்பட்டு முன்னும் பின்னும் காவல்துறை வாகனங்கள் வர , அனைத்து வாகனமும் நீதிமன்றம் நோக்கி புறப்பட்டது... அங்கு காத்திருந்த கமலின் கூலிப்படை ஆட்கள் மிரண்டு போய் பின் தொடர்ந்தனர்... வாகனங்கள் 20 தும் நீதி மன்றம் வரை அணிவகுத்து சென்று திரும்பி .. மீண்டும் திருமங்கலம் வந்து மீண்டும் நீதிமன்றம் சென்றது கார்கள்..
இப்படியாக கூலிப்படைகளை கொலப்பம் அடையச் செய்யவே இந்த கார் அணிவகுப்பு, ஆனால் இதில் எந்த வாகனத்திலும் காதலர்கள் இல்லை..இந்த கார்கள் அணிவகுத்து சென்ற சில நிமிடங்களில் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவர் காரில் காதலர்களை ஏற்றி நீதிமன்றத்தில் யாரும் சந்தேகிக்காத வகையில் அவர்களை பாதுகாப்பான இடத்தில் அமர வைத்து மாலை விசாரணை முடியும் நேரத்தில் காதலர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்...
நீதிபதி தீர்ப்பு காதலர்களுக்கு சாதகமா? பாதகமா ?..
தொடரும்...
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

