கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -28
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -28
கண்கள் தொடுக்கும் காதல்: பாகம் -28 " மஞ்சள் நிற நூல் கயிற்றை விட ,இல்லற வாழ்க்கைக்கு சிறந்த அங்கீகாரம் காதல்தான்" என்பதை புரியாத ஒருவன் ஊர்க்கு தலைவர், விளங்கிடும்..... ஊர் ..என்று மனதுக்குள் திட்டினான்.. கூடலூர் ஊர்த் தலைவரை.. சுந்தரத்தின் போனை வாங்கிய கெளதம் ஊர் நாட்டாமை குருசாமிக்கு போன் போட்டான்.. கெளதம்: hellow, சிங்காரம் மகன் கெளதம் பேசுகிறேன் .. நாட்டாமை : நல்லா இருக்கியா? கெளதம்: இருக்கிறேன் நாட்டாமை.. நாட்டாமை: என்ன தம்பி இப்படி பண்ணிட்ட.. சே... என்ன.. கஷ்டப்பட்டு உன்னை வளர்த்து படிக்க வைத்தான் ..நீ அவனுக்கு செய்கிற நன்றி கடன் இதுதானா..? உன் அப்பனும் நானும் தினமும் 25 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து PSR college பக்கம் இருக்கிற மலைக்கு போய்.. அங்கே ஜல்லி உடைப்போம்.. சித்திரை மாதம் அடிக்கிற வெயிலுக்கு.. அடிக்கடி உங்க அப்பனுக்கு சூடு பிடிக்கும்..சூடு பிடித்த நேரத்தில் சூடு பிடி தாங்காமல் யூரின் சொட்டு சொட்டாக டவுசர்ல வடியும்.. இதைப் பார்த்து அவன் நிலை கண்டு எனக்கு கண்ணீர் வந்தது உண்டு..அப்படி உழைத்து படிக்க வச்ச மனிதனை தேரை இழுத்து தெருவில் விட்டது மாறி ஆயிருச்சு..தம்பி.. கெளதம் : நினைச்சு பார்க்காதது நடந்திருச்சு நாட்டாமை நாட்டாமை: அப்பா அம்மா மாமா எல்லோரும் ஊர்ல இல்லை.. வெளியூர் போயிட்டாங்க..ஆடு மாடு நாய் எல்லாம் ஊர்ல தவிக்குதுக.. கெளதம்: ஏன் ? , என்னாச்சு? நாட்டாமை: திரிஷாவின் அப்பா பணத்தை கட்டு கட்டா கொடுத்து காவல்துறையை விலைக்கு வாங்கி ஏவி விட்டு தொந்தரவு தருகிறான்.. அதுதான் ஊரை விட்டே போயிட்டாங்க.. கெளதம்:(அழுதான்) நாட்டாமை: இப்ப 4 மணிக்கு ஊர்க்கு உள்ள வந்த காவல்துறையினர்.. சிங்காரத்தை எங்க என்று கேட்டு ஊரையே வெளுத்து வாங்கிட்டாங்க.. எந்த ஊர்ல இருக்க? சேப்ட்டிய இருக்கியா..? கெளதம்: தேனி பக்கம் நாட்டாமை.. நாட்டாமை: திரிஷா வீட்டுக்கு நீ இருக்கிற இடம் தெரியாமல் பாத்துக்க..இங்க நடக்கிறதை பற்றி கவலைப் படாதே நான் பார்த்துக்கிறேன்.. வக்கீல் பிடித்து அவங்க கிட்ட பேசிட்டு என்ன முடிவு எடுக்கலாங்கிற விவரத்தை கலந்து பேசிட்டு நானும் மாமாவும் உன்னை கூப்பிட அங்க வருவோம் அதுவரை ஊர் பக்கம் வரக் கூடாது.. எச்சரிக்கையோடு இருந்துக்கோ கெளதம்: சரிங்க நாட்டாமை என்று சொல்லி போனை கட் செய்து அழுதான்... திரிஷாவிடம் இதையெல்லாம் சொல்லி இருவரும் பிரிந்து விடலாம் என்று சொல்வதற்கு சென்றவன்.. பல முழம் மல்லிகையை சில சுற்று சுற்றி தல நிறைந்த மதுரை மல்லி வாசமும் , அவள் பொன்மேனி தேன் வாசமும் காற்றலையில் கலந்து தன் பக்கம் ஈர்க்க ..கள்ளிப்பழ சிவப்பழகில் அவள் உதடுகள் மனதை கிள்ளி எறிந்து கில்லி விளையாட அழைத்திட..பெண்மைக்கே உகந்த மென்மையான வீரியமான முன்னழகு அங்கம் இரண்டும் சிங்கத்தின் ஐவிரலை மொய்த்திட அழைத்திட .. பொற்கொல்லர் மெய்ஞானம் உடன் மீட்டிய தங்க தகடோ அவள் மெல்லிய இடை ! முகம் பதிக்க அழைக்கின்றதே !! , தேனில் மிதந்த நிலவாக மஞ்சள் நிற சேலையில் செக்க சிவந்து சொர்க்க வைக்கும் பேரழகில் மோகத்தை அவள் தூண்ட,காமத்து நிபந்தனையுடன், தேன் நிலவுக்கு அழைத்துச் செல்ல காமதேவன் குதிரை வண்டி கட்டி காத்திருந்தான் சாரதியாக.. ஈன்றோர் நினைவுகளை இவள் அழகு மறைத்தது, மோகம் குடியேற பெற்றோர் பாசம் வெளியேறியது , காதலில் கரைந்தது அன்னையின் கருணை, இன்பம் சுயநலமாக தந்தையின் துன்பம் மறந்தது.. அப்பா நாளைக்கு திருமணம் செய்து கொள்கிறோம் அதற்கான ஏற்பாட்டை செய்யுங்கள் என்று சுந்தரத்திடம் கூறினான் கெளதம்.. இந்த ஊர்ல திருமண காட்சியெல்லாம் அருள்மிகு கூடல் அழகிய பெருமாள் கோவிலில் தான் நடக்கும்.. அங்க திருமணம் நடத்த இருவர்க்கும் VO சான்றிதழ் வேனும்..தலைவர்யிடம் இதைப்பற்றி பேசிட்டு வாரேன் என்று சுந்தரம் கிளம்பினார்... காதலர்களுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா?.. .....தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம்

