STORYMIRROR

Packiaraj A

Romance

4  

Packiaraj A

Romance

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 18

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 18

2 mins
4

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 18 ஒரு வழியாக ஜே பல்பொருள் அங்காடியை தேடிப்பிடித்து கண்டறிந்தான்..மிகப் பிரம்மாண்டமான கட்டிடமாக இருந்தது.. உள்ளே சென்றான் cashier இருக்கையில் முதலாளியே இருந்தார்..sir வணக்கம் என்றான் கெளதம்.. அவர் பதிலுக்கு தலையை ஆட்டினார்.. Sir நேற்று phone போட்டு வேலைக்கு கேட்டேன்.. வரச்சொல்லிருந்திங்க என்றான் கெளதம்.. ஆமா ஆமா அந்த திருநெல்வேலி தம்பி நீங்கதானா வாங்க தம்பி இருங்க என்றார். முதலாளி:தம்பி பெயர் என்ன? கெளதம் : கெளதம் சார் முதலாளி: அப்பா என்ன தொழில் செய்றாங்க? கெளதம்: விவசாயம் Sir முதலாளி: அருமை தம்பி, விவசாயி மகன், விவசாயினு சொல்வது கேவலமாக நினைக்கிற இந்த காலத்தில உண்மையை சொன்ன நீங்க வேலைக்கு selected..ரகு..ரகு இங்கே வா.. ரகு வந்தான், இந்த தம்பி தொழிலுக்கு புதுசு நம்மகிட்ட வேலைக்கு வந்திருக்கார் வேலையை கற்றுக் கொடு என்றார் முதலாளி, ரகு சரி முதலாளி என்றவன் கெளதமை அழைத்து சென்றான் .. திரிஷா இரவு 8 மணிக்கே சாப்பிடாமல் படுக்கை அறைக்கு சென்றவள் ஒரு watsapp messageயை கெளதமுக்கு அனுப்பியவள் இரட்டை டிக்காக கைப்பேசியை பார்த்தபடி இருந்தாள்.. மணி 10.00 ஆனாது.. திரிஷாவின் வயிறு உணவுக்கு பசியெடுக்க . உள்ளம் காதலனின் பேச்சை கேட்க தவமிருக்க... கண்கள் மொபைலில் பதில் செய்தியை காண ஆவலாக இருக்க.. கைகள் அவள் கைகள் மொபைலில் மறைந்த திரையை ஒளியாக்கிய படி தேய்த்து கொண்டே இருக்க.. மூளையில் அவன் நினைவுகள் வந்து போக..வாய் அவன் பெயரை உச்சரிக்க துடிக்க..ஆழாத் துயரில் திரிஷா மெத்தையில் சரிந்தாள், நடந்தாள், தண்ணீர் குடித்தால் காதல் வைத்தியன் கெளதம் phone callயை எதிர்பார்த்து பைத்தியமானள்.. வேலை முடித்து சிதறிய பொருள்களை அடுக்கி வைத்து கடையை விட்டு வெளியேற இரவு மணி 11 ஆகியிருந்தது.. வெளியே வந்தவன் கைப்பேசியை எடுத்து அதற்கு உயிர் கொடுத்து திரையை பார்க்க அதிர்ந்தாள்.. கெளதம். 100 க்கு. மேற்பட்ட குறுந்தகவல்கள்,100க்கு மேற்பட்ட அழைப்புகள் அனைத்துமே திரிஷாவிடமிருந்தே வந்திருந்தன.. அவனை பயத்தில் ஆழ்த்தியது. அவள் போனுக்கு டயல் செய்தான் ரீச் ஆகி ரீங் அடிப்பதற்குள் திரிஷா போனை அட்டன் செய்தாள்.. இருவரும் முத்தத்தில் ஆரம்பித்து செல்ல சண்டைகளை தொடர்ந்து,அன்பு, பாசம், கசப்பு இனிப்புயென நவரச உணர்வுகள் அத்தனையும் பேசி முத்தத்தோடு முடித்தனர்..மணியை பார்த்தாள் கடிகாரத்தின் சிறிய முள் 1யை தொட்டிருந்தது. மனதிற்குள் திருப்தி அடைந்தாள்.பசியை போக்க 🐕 நாய்க்கு பிரிட்ஜில் வைத்திருந்த சோற்றை சாப்பிட்டு தூங்கச் சென்றாள்.. தூக்கம் வரவில்லை..தண்ணீரைக் குடித்தால் வரவில்லை, எலுமிச்சை பழச்சாறு குடித்தால் தூக்கம் வரவில்லை, நடந்தாள், உடற்பயிற்சி செய்தாள், மூச்சு பயிற்சி செய்தாள் தூக்கம் வரவே இல்லை.. காதலனுடன் பேசிய சந்தோஷம்..தூக்கத்தை தடுத்து கொண்டே இருக்க அவள் விடியும்வரை விழித்திருந்தாள். இப்படியாக ஒரு மாதம் காலம் கடந்து தொடர்ந்தது.. ஃபோனில் இருவரும் பேசிக்கொண்டே காதலை நாளும் ஒரு பொழுதாக வளர்த்திருக்க.. ஒருநாள்.. .. தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம் 



Rate this content
Log in

Similar tamil story from Romance