STORYMIRROR

Packiaraj A

Romance

4  

Packiaraj A

Romance

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -17

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -17

2 mins
2

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -17 "காதல் தோல்வியின் வலியை விட, காதலர்களாக ஒருவரையொருவர் பிரியும் வலியே வலிகளில் மிக கொடியது " என்பதை கடந்த 4 நாட்களாக கெளதமை பிரிந்திருந்த நிலையில் உணர்ந்திருந்தாள் திரிஷா.. கெளதமின் தோளில் சாய்ந்து இருந்தவள் திடுக்கிட்டு எழுந்தவள், படிப்பு முடிவதற்குள் வேலைக்கு என்ன அவசரம்? என்றாள் திரிஷா. குடும்பத்தின் கடன் பிரச்சினை, அக்காவின் வளைகாப்பு செலவு மற்றும் பேர்காலச் செலவுயென அவனது பிரச்சனைகளை பட்டியலிட்டான் கெளதம். உன் குடும்பம் உன் சுயநலத்திற்காக உன்னை பார்க்காமல் தனிமையில் காதலின் வேதனையை நான் எப்படி அனுபவிப்பேன் கெளதம் என்றாள் திரிஷா. ஐயோ..திரிஷா.. அந்த வேதனை உனக்கு மட்டுமானதல்ல எனக்கும்தான், என்னதான் satellite வானத்தில் பறந்தாலும் அதன் உயிர்நாடி பூமியில் உள்ள கணினியில் தான், அதுபோல நான் எங்கே சென்றாலும் அங்கே என் உடல் மட்டுமே நகரும் full control அதாவது என் எண்ணம், என் நினைவுகள் கற்பனையென அனைத்தும் உன்னையே சுற்றி வரும்... என்றான் கெளதம். தினம் இரண்டு வேளை phone போட்டு என்னுடன் பேசனும் ஒவ்வொரு அரை மணிநேரமும் watsapp யில் தகவல் சொல்லனும் இதை நான் எதிர் பார்ப்பேன் இது தவறினால் உயிர் துறப்பேன் என்று கூறியபடி முல்லைக் கொடியாக அவனது மடி சாய்ந்து பிரிவின் வேதனையை நினைத்து ஏங்கி விம்மினாள் திரிஷா.. "திரிஷாவின் கவலை கண்டு இலங்கை வேந்தனைப் போல்" கலங்கியவனுக்கு கண் கலங்கி வழிந்த கண்ணீரில் ஒரு துளி அவளின் மெல்லிய நூலிடையில் மாணிக்க முத்தாக விழுந்திட சிலிர்த்து எழுந்தவள்..அவன்‌ கண்களில் இருந்த கண்ணீரை முந்தியால் தொடைத்தவள் .. அழாதே கெளதம்.. என்றவள் துக்கம் தீர்க்க முத்தம் கொடுத்து எழுந்தாள்.. வீட்டுக்குள் சென்றவள் ஒரு கைப்பேசி 4 ஐநூறு ரூபாய் எடுத்து வந்து கெளதமின் கைகளில் திணித்தவாரே நல்ல முறையில் போயிட்டு வா.. மாதம் ஒருமுறை ஊர்க்கு வந்துவிடு என்றுகூறி வழியனுப்பி வைத்தாள் திரிஷா.. சங்கரன்கோவில் ஜங்ஷனில் 7:17 PM க்கு பொதிகை எக்ஸ்பிரஸில் ஏறினான்.. கெளதம் அன்று இரவு சாப்பிடாமல் படுக்கை அறைக்கு சென்றவள் மணி 11 யைத் தாண்டியும் கெளதமின் போன்கால்க்கு காத்திருந்தாள் திருச்சி அருகே train சென்று கொண்டிருக்க திரிஷாவுக்கு போன் செய்தான்.. Hellow வில் ஆரம்பித்து அடுத்து ஐந்தாறு முத்தங்கள் போனுக்கு கொடுத்தாள்..அவன் அவனது போனுக்கு ஐந்து முத்தங்கள் கொடுத்தான்.. கொடுத்த‌ முத்தங்கள் காற்றின் வழியாக சென்று அவர்களுக்கு அடைந்தததோ இல்லையோ செவி வழியாக சென்று உள்ளத்தை ஆனந்தமாக்கியது. பேசியவர்கள் பேசினார்கள் அதிகாலை 5 மணிவரை என்னதான் பேசினார்கள்..அது காதலித்தோர்க்கே தெரியும்.. காலை 8 மணிக்கு பட்டாளம் மணிக்கூண்டு அருகில் உள்ள உணவகத்தில் இட்லியை வாங்கியவனுக்கு திரிஷா நினைவு வர‌ போன் செய்தான்.. பேசிவிட்டு மணியை பார்த்தான் மணி 10:30 ஆகிருந்தது.. முகவரியை பார்த்து கடையைத் தேடி ஓடினான்.. கெளதமுக்கு வேலை கிடைத்ததா ? இல்லையா?.. .... தொடரும் சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் மேலக்கலங்கல் தென்காசி மாவட்டம் 


Rate this content
Log in

Similar tamil story from Romance