கணினி மயம்
கணினி மயம்
அருணா ஒரு இல்லத்து அரசி.
கணவனையும் குழந்தையும் வேலைக்கும் பள்ளிக்கும் அனுப்பி விட்டு இவளும் வேலைக்கு செல்வதற்குள் போதும் என்றாகி விடும்.
அவளும் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலை.காலை எட்டு மணிக்குள் சமைத்து துவைத்து,வீடு சுததம் செய்து அனைத்து வேலையும் பம்பரமாக சுழன்று சுழன்று செய்ய வேண்டும்.கணவர் குழந்தையை குளித்து உடை மாற்றி பள்ளிக்கு அனுப்ப உதவுவார்.அதற்கு மட்டும் தான் அவருக்கு நேரம்.
இப்படி பட்ட சூழ்நிலையில் கொரோனா வர,வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்ற முறை வந்த போது அவளுக்கு ஒரு பெரிய விடுதலை.எதையும் அரக்க பறக்க செய்யாமல்,நிதானமாக செய்ய முடிந்தது.அவள் உடல்நிலையும் நல்ல முன்னேற்றம்.
கணவனும் வீட்டில் இருந்து வேலை செய்ய தொடங்கி விட்டான்.அவளுக்கு இப்போ மிக்க மகிழ்ச்சி.
