கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
ராஜா அந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் வாங்கும் வரை அந்த கிராமத்தில் தான் இருந்தான்.
வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கியதும் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டான்.
கிராமத்தில் வீடு சிறியது,ஆனால் வீட்டை சுற்றி ஓர் தோப்பே இருந்தது.பல வகை பழ மரஙஅல் வீட்டை சுற்றி இருந்தது.ருசியான பழங்கள்,நிழல் கொடுத்து வந்தது.
மனைவி நகரத்தில் இருந்து வந்தவள்.
ஒரு குழந்தையும் பிறந்து பெரிதாக
அவனை படிக்க வைக்க நகரத்திற்கு சென்று வசித்தால் நல்லது என்று அவன் மனைவி நினைக்க,சரி என்று ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்து குடி பெயர்ந்தனர்.ஆனால் ராஜாவிற்கு ஒரு கூண்டில் அடைபடட மாதிரி
இருந்தது.பெற்றோரை கூட அழைத்து வர முடியவில்லை.
மாமனார் மாமியார் காலையில் வந்து மாலையில் திரும்பி போய் விடுவார்கள்.ராஜாவின் குழந்தைக்கு விளையாட இடம் இல்லை.தாத்தா பாட்டியிடம் கதை கேட்க முடியவில்லை.அதுவே ஒரு பெரிய ஏக்கம்.
ராஜா வால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவனுடைய வருமானத்தில் அதை விட பெரிய வீட்டிற்க்கு செல்ல முடியாது.
அதனால் விடுமுறை வந்தால் எல்லோருமே கிராமத்திற்கு சென்று பொழுதை களிப்பதசி வழக்கமாக மாற்றி கொண்டான்.
இரண்டும் இரு வேறு துரு வங்கள்.
நகர மக்கள் ஏன் ஓய்வு இல்லாமல் ஓடி கொண்டு இருக்கிறார்கள் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.
