வல்லன் (Vallan)

Tragedy

3.8  

வல்லன் (Vallan)

Tragedy

கேடுகெட்ட உலகம்

கேடுகெட்ட உலகம்

2 mins
154


டேய் சோமு என்னடா நம்ம கெழவன் வீட்டு முன்னால ஒரே கூட்டமா இருக்கு? தெரியலயே ண்ணா நானு இப்பத்தான் கடைவீதி வரைக்கும் போயிட்டு வரேன், வாங்க போயி பார்ப்போம் என்னாச்சுனு. மணியும் சோமுவும் கிழவன் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

நம்ம கெழவனுக்கு ரெண்டு மவனுங்க, அவனுங்க புள்ளைங்களுக்கு எல்லாமும் கண்ணாலம் பண்ணிட்டானுங்க. என்னன்னு தெரியலயே ஊருல இருந்து கூட வந்திருக்காங்க போல. பக்கத்துல வந்த மணி சோமுகிட்ட கேட்டாரு. ஆமா ண்ணா கெழவன் மவ கூட வந்திருக்கு.

டேய் பெரியவனே என்னடா ஆச்சு உங்கொப்பனுக்கு ? வாயே திறக்கல பெரிய மவன், மவ கதறி அழறா. இத பார்த்தே சூழ்நிலைய உணர்ந்துக்கிட்டார் மணி. என்னடா நல்லாத்தானே இருந்தாரு, நா போகும் போது கூட மம்பட்டிக்கு புடி செதுக்கிட்டு இருந்தாரே? அதுக்குள்ள என்னடா ஆச்சு?

யாரும் எந்த பதிலும் சொல்லல, வீட்ட விட்டு வெளிய வந்தாரு மணி. பக்கத்து வீட்டுல இருந்த முத்து மணி அண்ணண கூபிட்டு, அண்ணே உனக்கு விசயம் தெரியுமா கெழடு கயிறு மாட்டிக்கிச்சாம்...

என்னடா சொல்லற? அட ஆமா ண்ணா. கெழவரு ஏதோ தான் சம்பாதிக்கற காச வச்சு சோறு பொங்கி தின்னுக்கிட்டு இருக்காரு. பொண்டாட்டி இருந்த வரைக்கும் கெழவரு எம்புட்டு அடிச்சாலும் வாங்கிக்கிட்டு பொங்கி போட்டுச்சு. இவனுங்க சோறும் போடமாட்டிக்கறானுங்க, காச மட்டும் புடுங்க பாக்கறானுங்க.

அவன் அவன் புள்ளைங்க தோளுக்கு மேல வளரந்து கண்ணாலம் பண்ணியும் இவனுங்க கெழவன் காச ஏன்டா புடுங்க அலையறானுங்க ச்சை, என்ன மனுசங்களோ... கேடுகெட்ட உலகம்.

காசு புடுங்க அலையற மாதிரி பாத்துக்கிட்டாலும்,பரவால்ல பாத்துக்க முடியாதாம் ஆனா காசு மட்டும் வேணுமாம் பாத்துக்கோ ண்ணா என தன் குமுறலை கொட்டினான் முத்து.

ஆம்பளைக்கு மதிப்பு பொண்டாட்டி இருக்க வரைக்கும் தான்டா முத்து. அவ போயிட்டா ஒரு நேர கஞ்சிக்குக்கூட கையேந்தி தான் நிக்கனும்.

பொண்டாட்டிக்கு முன்னாடியே போய் சேர்ந்தா தான்டா நமக்கு எல்லா நல்ல சாவு, இல்லைன்னா சீப்பட்டு தான் இப்படி நாண்டுக்கிட்டு சாவனும், மருந்து குடிக்கனும்.

(தாரை தப்பட்டை வேட்டு சத்தம் கேட்குது)

என்னடா முத்து அதுக்குள்ள எடுக்கறாங்க. எல்லா சடங்கும் முடிச்சாச்சா?

இல்லைங்க அண்ணா, கயித்துல வேற தொங்கிட்டாறா அதான் போலிஸ் கேஸ் ஆயிடும்னு உடனே தூக்கிட்டாங்களாம்.

என்தான் உலகமோ போடா...

(பின்னால் போனால் போகட்டும் போடா... கண்ணதாசனின் வரிகளில்)Rate this content
Log in

Similar tamil story from Tragedy