கை வைத்தியம்
கை வைத்தியம்
செல்லம்மாள் அந்த கிராமத்தில்
கூலி வேலை செய்து பிழைத்து கொண்டு இருந்தாள்.அவளுக்கு
ஒரே மகன்.ராஜா பத்து வயது ஆகியது.பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த பையன் வயிற்று வலி என்று வந்து படுத்தான்.
செல்லம்மாள் ஒன்றும் புரியாமல்
கை வைத்தியம் செய்ய,வலி கொஞ்சம் குறைந்தது.
மெதுவாக அவனிடம் பள்ளியில் ஒழுங்கா கொண்டு போகும் சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறாயா என்று கேட்க,தயங்கிய படி அவன் சொன்னான்,பல நாள் அங்கு பட்டினியுடன் வேலை பார்க்கும் காவலாளி தாத்தாவிற்கு கொடுத்து விட்டு,இவன் பட்டினி ஆக இருந்து இருக்கிறான்.
அதை அறிந்த செல்லம்மாள்,இனி மேல் அப்படி இருக்காதே,பசிக்கு சுரக்கும் அமிலம் உன் வயிற்றில்
புண் செய்து வலியை உண்டாக்கும்.
பசிக்கும் வேளையில் கொஞ்சம் சாப்பிட வேண்டும்.
இனி மேல் சாப்பாடு அதிகம் போட்டு தருகிறேன்.நீயும் சாப்பிட்டு,தாத்திவிர்க்கும் கொடு.,
இருவரும் நலமாக இருப்பீர்கள் என்று எடுத்துரைத்து போதிய சாப்பாட்டை கொடுத்து அனுப்பினாள்.
