காட்டு வழியிலே
காட்டு வழியிலே
அந்த காடு நிலா வெளிச்சத்தால் மட்டும் ஒளி பெற்று அந்த இரவை கடத்தி கொண்டிருந்தது.
மரத்தின் மேல் 2 பேர் அமர்ந்து இருக்க கீழே ஒவ்வொரு மரத்தின் வெளியில் இருக்கும் வேரில் 3 பேர் அமர்ந்து இருந்தனர்.
அப்பொழுது கீழே இருந்த ஒருவர்,நம்ம திட்டப்படி அதிகாரி போற மாட்டு வண்டிய நிறுத்தனும் அந்த அதிகாரி சுதாரிக்கறுத்துக்கு உள்ள பிடிச்சு கொண்டு போனும்.
சொல்லி கொண்டு இருக்கும் போது மேலே ஒருவன் மரத்தின் மேலேயே தூங்கி விடுகிறான்.
கீழே இருந்த மற்ற மூவரும் சாப்பாடு கொண்டு வந்த தூக்கு வாலியை திறந்து உண்டு விட்டு மர பாத்திரத்தில் இருந்த தண்ணீரை குடித்தனர்.
பின்பு மேல் இருந்த இருவர் கீழே வந்து சாப்பிட இன்னொரு இருவர் மேலே சென்று பாதையை கவனித்து கொண்டனர்.
வண்டி நெருங்கி வர ஐவரும் ஒளிந்து தாக்க தயாராகினர்.
இருவர் முன்னே பின்னே சென்று வழியை மறிக்க ஒருவன் மட்டும் மரத்தின் மீது வில் அம்புடன் காத்திருந்தான்.
மாட்டு வண்டிக்காரன் இவர்களை பார்த்தும் மாட்டை விரட்ட அது இன்னும் வேகமாக ஓடியது.
தீடீரென மாடு வண்டியை விட்டு கழண்டு வேறு திசையில் ஓட அதை பிடிங்க என இருவரை அனுப்புகிறான் அந்த கூட்டத்தில் ஒருவன்.
தடம் புரண்டு கிடந்த வண்டியில் இருந்த மாட்டு வண்டிக்காரன் இவர்களை எதிர்க்க வர அங்கு இருந்த இருவர் அவனை ஒன்றாக அடித்து மயக்கமடைய வைக்கின்றனர்.
பின்பு அந்த அதிகாரியை இருவரும் தேட அவன் ஒரு மரத்தின் அடியில் வேருடன் படுத்து வழியில் முனகிக் கொண்டிருந்தான்.
அந்த மரத்தில் இருந்த நபர் இறங்கி அம்பை குறி வைத்து கொண்டே நடக்க கழுதை புலிகள் சத்தம் கேட்டு அவன் மெல்ல நடந்து படீரென்று ஒரு மரத்தில் மேல் ஏறுகிறான்.
மாட்டை துரத்தி சென்ற இருவரும் அதை பிடிக்க போராட்டம் நடத்தினர்.
அந்த அதிகாரி மூச்சு வாங்கி திரும்ப அவனை தேடி வந்த இருவர் அவனை பார்த்து சிரிக்கின்றனர்.
பின்பு அதிகாரியை இழுத்து கொண்டு வண்டி பக்கம் செல்ல கழுதை புலிகள் சுற்றி வளைக்கிறது.
அதிகாரி கால் காயத்தால் அங்கேயே மாட்டி கொள்ள மற்ற இருவரும் தப்பி வருகின்றனர்.
அடுத்த நாள் காலை, அந்த வண்டிக்காரன் அழுத வண்ணம் இருக்க அந்த ஐவரும் உதிக்கும் சூரியனின் திசையை வைத்து ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.
