காதலும் கடக்கும்
காதலும் கடக்கும்
அந்த கல்லூரி விழாவில் மேடையில்
ஒரு பட்டி மன்றம் நடந்து கொண்டு இருந்தது.காதல் வேண்டும் என்று அணி தலைவன் ராஜா பேசி கொண்டு இருக்க,வேண்டாம் என்று அணி தலைவி ராணி பேச காத்து கொண்டு இருந்தாள்.
கண்டதும் காதல் உண்டாவதை பற்றி ராஜா வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான்.
அவன் பேச்சை உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்த ராணி
அடுத்து பேச ஒலிபெருக்கி முன்பு வர,கரகோஷம் அங்கு அதிர்ந்தது.
நண்பர்களே,
ராஜா அவர்கள் காதலை பற்றி பேசும் போது,அது என்னவோ சாலை ஓரம் வளர்ந்த புல் மாதிரி,யாரு வேண்டுமானாலும்,கடித்து சாப்பிடலாம் என்ற ரீதியில் பேசினார்.
பெண்கள் ஆண்களின் காதலுக்கு காத்து இருப்பது கிடையாது.ஒருவர் மீது கொள்ளும் அதீத அன்பு தான் காதலாக மாறும்,அப்படி இல்லாவிட்டால் அது அப்படியே கடந்து போகும்.ஒருவருக்கு ஒருவர் விரும்புவதை காதல் என்று சொல்லி விட முடியாது.ஒருவருக்கொருவர் பழகி,புரிந்து,அன்பை, பரிவை,பாசத்தை,பகிர்ந்து,அளவுகளை கட்டு படுத்தி,நிலைத்து நின்ற பின் தான் காதல் உருவாகும்.அதில் ஆயிரம் விசயங்கள் அடங்கி உள்ளது.வெறுமனே நான் காதலிக்கிறேன் என்று சொல்வது காதல் அல்ல.ஒரு நொடியில் காதல் வராது.கடந்து தான் போகும்.ஒரு செய்கையை வைத்து காதல் ஆரம்பிக்காது.அது உள்ளம் சார்ந்த
வெளிப்பாடு.அழகை நம்பி வருவது அல்ல.ஆடையை பார்த்து வருவது அல்ல.இதற்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வு.புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே என்று தன் உரையை முடித்து வந்து அமர,மீண்டும் கரகோஷம் விண்ணை பிளந்தது.

