காதலுக்கு முன்னும்பின்னும்
காதலுக்கு முன்னும்பின்னும்
பூஜா வின் வயது இப்போது நாற்பது.
திருமணம் அடுத்த வருடம் இதோ இந்த வருடம் என்று தள்ளி போய் இப்போது வயது நாற்பது.
இருபத்தி நான்கு வயதில் அவளை துரத்தி கொண்டு வந்த ஆண்கள் ஏராளம்.அப்படி ஒரு உடல்வாகு.அளவான நிறம்.அப்போது அவளுக்கு காதலில் நம்பிக்கை இல்லை.அதை பொய்யாக்க ரஞ்சித் வந்தான்.அவள் மீது அளவு கடந்த காதல் என்று சொன்னான்.இது ஒரு தலை காதல் என்று அவளும் சட்டை செய்யவில்லை.அவன் ஒதுங்கி விடுவான் என்று நினைத்து கொண்டாள்.ஆனால் அவன் அவளுக்காக காத்து இருந்தான்.
அவனுடைய காதல் உண்மை தானா என்று அறிந்து கொள்ள விரும்பினான்.அவனிடம் இருந்த போதை பழக்கங்களை விட்டு விட்டு வந்தால் ஏற்று கொள்கிறேன் என்றாள்.அவனும் அவள் சொன்ன நாளில் இருந்து அதனை அடியோடு விட்டு விட்டான்.இப்போது அவளுக்கு அவனுடைய காதல் உண்மை என்று புரிந்தது.
இருவரும் புரிந்து கொண்டு சில மாதங்கள் மனப்பூர்வமாக பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனர்.
ஒரு நாள் அவளுக்கு மார்பில் இனம் புரியாத வேதனை.பொறுத்து பொறுத்து பார்த்ததும் வேதனை விட்டு விட்டு வந்தது.மருத்துவரிடம் போகாமல் குணமாகாது என்று தெரிந்து மருத்துவரை பார்க்க,அவர் புற்று நோய் மருத்துவரை சந்திக்க சொன்னார்.
அவரையும் பார்த்து கேட்ட போது,குணப்படுத்த ஒரே வழி அறுவை சிகிச்சை.உடனே செய்ய வேண்டும் என்று கூற வேறு வழியில்லாமல் தன் இடது புற மார்பகத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டி வந்தது. அப்புறம் மருந்துகள் எடுத்த பிறகு,குணம் அடைந்தாள்.இரஞ்சிதிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டாள்.அதுவரை நீ இல்லாமல் நான் இல்லை என்று பாடி கொண்டு இருந்தவன்,அவள் கேட்டதற்கு பதிலும் கூறவில்லை,பேசுவதையும் தவிர்த்து கொண்டே இருந்தான்.
சந்தேகம் வர,பூஜா தன் தோழி மூலம் செய்தி அனுப்பினாள்.என்ன பிரச்சினை,என்னுடைய நோய் பிரச்சனையா என்று கேட்க,நோய் பிரச்சினை அல்ல,ஒரு புறம் மார்பகம் இல்லாத பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று தோழி மூலம் பதில் அனுப்பினான்.
இது தான் பிரச்சனையா,இந்த அழகு நிரந்தரம் கிடையாது இது கூட புரிந்து கொள்ள தெரியவில்லை.
இது நாள் வரை அவனுடைய காதல் தன் மார்பகத்தின் மீது என்று தெரிந்த போது அவளுக்கு கட்டுக்கு அடங்காத சிரிப்பு வந்தது.அவனுக்கு சுருட்டை முடி,இந்த முடி ஒரு நாள் வெளுத்து போகாதா,இல்லை உதிர்ந்து தான் போகாதா.முகத்திற்கு அழகு தருவதே அவனுக்கு அந்த முடி தான்.பூஜா கண்களுக்கு அவன் முடி தெரியவில்லை.அவனுடைய மனதை நேசித்தாள்.அவனோ உடல் அழகை மட்டும் நேசித்து இருக்கிறான்.அழகு குறைந்து விட்டது என்று தெரிந்ததும் காதலுக்கு விடை கொடுத்து அனுப்பி விட்டான்.நல்ல வேளை,வயதான பிறகு அல்லது ஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகு அவன் அந்த அழகை தேடி கிடைக்காமல் அவளை கை விட்டு விட்டு போய் இருந்தால் அவள் கதி நிர்கதி.அதுக்கு இது எவ்வளவோ தேவலை.
இனி அழகை தேடாத ஆண் மகனை தேடலாம் என்று நம்பி கொண்டு
இன்று வரை தேடி கொண்டு தான் இருக்கிறாள்.ஆனால் உண்மையை சொன்னால் ஏற்று கொள்ளும் பக்குவம் எந்த ஆண் மகனிடமும் இல்லை.அது இல்லாமல் எப்படி என்று கேள்வியுடன் கடந்து சென்று விட்டனர்.
இனி நாற்பது வயதில் யார் வர போகிறார்கள். பெண்களே புரிந்து கொள்ளுங்கள் காதல் என்றால் மனதால் ஒன்று பட வேண்டும்.உடலால் அல்ல.அது தெரியாமல் காதலித்து விடாதீர்கள்.
காதலிக்கிறேன் என்று சொன்னால் என்ன அடிப்படையில் காதல் செய்கிறீர்கள் என்று கேளுங்கள்.
உடலுக்கு வேண்டி காதல் செய்தால் அவன் மாதம் இரு காதலியை மாற்ற வேண்டி இருக்கும்.காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.காதலுக்கு கண் இருக்கிறது,அதனால் தான் எனக்கு இந்த நிலைமை என்று கூறினாள் பூஜா.
எவனொருவன் கல்யாணத்திற்கு பிறகு ஒரு பெண்ணை காதலிக்கிறான் அவனே சிறந்த காதலன்,கணவன்.
திருமணத்திற்கு பிறகு அதுவும் பெண்ணின் பிரசவத்திற்கு பிறகு அவளை காதலிக்கிறான் அவனே சிறந்த காதலன் என்று பூஜா எல்லா பெண்களிடமும் கூறி வருகிறாள்.

