STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

காதல்

காதல்

4 mins
450

காதல் என்பது காமதிற்கான ஈர்ப்பு அல்ல.அது ஒரு பரஸ்பர நம்பிக்கை. அந்த நம்பிக்கை தான் ஒருவருக்கொருவர் பற்றுதல் உடன் வாழ்கையை நடத்த வழி காட்டுகிறது. ஸ்வேதா ஒரு கட்டுமான நிறுவனத்தின் ஆலோசகர் ஆக வேலை செய்து வந்தாள்.சேர்ந்து இரண்டு வருடம் ஆகிறது.குறிகிய காலத்தில் வேலை கற்று கொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டாள்.அவள் திறமையை பார்த்து நிர்வாகம் அவளை விற்பனை பிரிவில் முக்கிய பொறுப்பை கொடுத்தது. அதுவும் அவளுக்கு இனி ஒரு சவாலாக எடுத்து கொண்டு அதிலும் தன் திறமையை தடம் பதித்தாள்.


அன்று மாலை தன் இருப்பிடத்திற்கு சற்று சீக்கிரமாக போய் சேர்ந்தாள்.அவளுக்கு சில பொருள்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டி இருந்தது. அவள் தங்கி இருந்த இடம் ஒரு PG ஹாஸ்டல்.அவள் இருவர் தங்கும் அறையை எடுத்து அவள் மட்டும் தங்கி இருந்தாள்.அவளுக்கு எப்போதும் சற்று தனிமையை விரும்புவாள். தனிமையில் இருக்கும் போது அவளுடைய கன வுலக வாழ்க்கையே வேறு.அதற்கு அவளுக்கு தனிமை வேண்டி இருந்தது.செலவு அதிகம் தான், இருந்தாலும் வேறு ஒருவரை கூட தாங்க அனுமதிக்கவில்லை.


தன்னுடைய ஹாஸ்டல் வந்ததும் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு,வரவேற்பை தாண்டி முதல்

தளத்தில் உள்ள தன்னுடைய அறையை நோக்கி போக மாடிப்படியில் காலை வைத்தாள்.

அப்போது வரவேற்பு மேஜையில் இருந்த பெண், மேம் ஒரு நிமிஷம் என்று கூப்பிடுவது கேட்டு திரும்பி மேஜையை நோக்கி வந்தாள்.என்ன என்று கேட்க, உங்களிடம் ஒரு உதவி,இதோ வந்து இருக்கும் இந்த மேம் ரூம் கேட்டு வந்து உள்ளார்.அவருக்கு அடுத்த வாரம் தான் ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்.303அறையில் இருக்கும் ஒரு மேம் வேலை மாற்றல் ஆகி போகிறார்.இவஙக உடனடியாக வேலையில் சேர வேண்டும் என்று புறப்பட்டு வந்து விட்டார்கள்.ஒரு நான்கு நாட்கள் உங்களுடன் தங்க வைத்து கொள்ள முடியுமா என்று manager உங்களிடம் permission கேட்க சொன்னார், என்று கூறி அவள் பதிலுக்கு அந்த பெண் காத்து இருந்தாள்.


அப்படியா நான் அந்த மேம் கூட பேசி விட்டு சொல்கிறேன் என்று அந்த பெண் அமர்ந்து இருந்த இருக்கையில் தள்ளி அமர்ந்தாள் ஸ்வேதா.அந்த பெண் இந்திரா ஸ்வேதா வயது தான் இருக்கும்.இந்திராவிடம் அவளை பற்றிய விவரம் கேட்டு அறிந்தாள்.

தனக்கு எது பிடிக்கும் பிடிக்காது விளக்கி கூறி,உங்களுக்கு இது சம்மதம் என்றால் நான்கு நாட்கள் மட்டும் தங்க அனுமதி கொடுக்கிறேன்.அப்புறம் உங்களுக்கு ஒதுக்க படும் அறைக்கு சென்று விட வேண்டும் என்று சற்று கண்டிப்புடன் கூற,இந்திராவும் நான்கு நாட்கள் பல்லை கடித்து நாட்களை ஒட்டி விடலாம் என்று எண்ணி சம்மதம் சொன்னாள்.

இந்திரா பாண்ட் டீ ஷர்ட்,ஷூ போட்டு இருந்தாள்.பார்க்க ஒரு ஆண் போல தோற்றம் இருந்தது.முடியும் ஆண்களை போல இருந்தது.பார்த்தால் ஒரு ஆண் என்று தான் சொல்ல வேண்டும்.


வரவேற்பில் சொல்லிவிட்டு தன்னுடைய பெட்டிகளையும் பைகளையும் எடுத்து கொண்டு இந்திரா,ஸ்வேதா அறைக்கு சென்று அங்கு காலியாக இருந்த கட்டிலில் பெட்டிகளை வைத்து விட்டு,ஸ்வேதா முகத்தை பார்த்த படி அமர்ந்து இருந்தாள்.

ஸ்வேதா,நான் இப்பொது ஷாப்பிங் போகிறேன்.சாப்பிட்டு விட்டு தான் வருவேன்,என்னிடம் வேறு சாவி உள்ளது, பூட்டி விட்டு நீங்க தூங்கலாம் என்று கூறி விட்டு,வெளியில் புறப்பட்டு சென்றாள்.மீண்டும் ஒரு முறை இந்திராவை பார்த்தாள்,உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டு கொண்டு,பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி சென்றாள்.இந்திரா வந்த களைப்பு நீங்க ஒரு குளியல் போட்டு வீட்டு,ஏழு மணிக்கு டின்னர். சாப்பிட்டு விட்டு அறைக்கு வந்து பூட்டி விட்டு படுத்து கொண்டாள்.


அடுத்த நாள் ,ஞாயிறு விடுமுறை.காலையில் எழுந்து பார்க்கும் போது ஸ்வேதா குளித்து விட்டு டீ ஷர்ட், ஹாஃப் பாண்ட் போட்டு தலையை காய வைத்து கொண்டு இருந்தாள்.இந்திரா எழுந்ததை பார்த்து,kettle இருக்கு காஃபி போட்டு குடிங்கஎன்று சொன்னாள்.இந்த்ராவும் பல் தேய்த்து முகம் கழுவி விட்டு,காபி போட்டு குடித்தாள் கூடவே அரை கப் ஸ்வேதா விடமும் கொடுத்து குடிக்க சொன்னாள்.


நன்றி சொல்லி விட்டு,சரி உங்களை பற்றி முழு விவரமும் சொல்லுங்க என்று ஸ்வேதா கேட்க இந்திரா தான் சமீபத்தில் விவாக ரத்து வாங்கியவள், தனக்கு விருப்பம் இல்லாத திருமணம்,நான் வேண்டாம் என்று கூறியும் செய்து வைத்து விட்டார்கள்.உண்மையில்  நான் ஒரு shemale என்றாள்.முதல் இரவு அன்று கணவனிடம் உண்மையை எடுத்து கூற,சரி இதை இப்ப பெரிது படுத்த வேண்டாம்.எனக்கும் ஒரு affair இருக்கு. parents compell பணினாங்க ok,we will sort it out என்று கூறி ஒரு டாக்டரிடம் என்னால் குழந்தை பெற்று கொள் முடியாது என்று certificate வாங்கி அதை வைத்து mutual divorce வாங்கி கொண்டு வந்து விட்டேன்.


நான் shemale என்று யாருக்கும் தெரியாது நீங்களும் யாரிடமும் கூற கூடாது என்று கேட்டு கொண்டாள்.அப்படியே சொன்னாலும் ஒரு கவலையும் இல்லை.சரி இது அப்பா அம்மாவிற்கு தெரியுமா என்று கேட்க,அம்மாவிற்கு மட்டும் சொன்னேன்,சரி இனியாவது கவனமாக இரு என்று சொன்னார்கள்.உங்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லையே என்று ஸ்வேதா வை பார்த்து கேட்க

என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.உங்க கஷ்டம் புரியுது,ஒன்று செய்யலாம்,நீங்க என்கூடவேதங்கிகொள்ளுங்கள்,வேறு அறைக்கு சென்றால் உங்களுக்கு பிரச்சினை,என்று சொல்ல இந்திரா சரி என்று சம்மதம் சொன்னாள்.அது சரி உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகில்லை என்று ஸ்வேதா வை பார்த்து கேட்க, என்னமோ தெரியல ஆண்களை பார்த்தால் வெறுப்பு அதிகமாக இருக்கு,எப்பவும் sex தான் வேணும் என்று சொல்லி கொள்கிறார்கள்.


இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. ஆன எனக்கு sex வேணும் அதை யாரிடம் கேட்பது என்பது தான் கவலை.

இப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஆறு மாதம் ஓடி விட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகம் ஆகி விட்டது.இந்திரா ஒரு boyfriend போல் பழக,ஸ்வேதா விற்கு,இந்திரா வை ரொம்ப பிடித்து விட்டது.இரண்டு வருடம் ஓடி விட்டது.அந்த அறைக்குள் இருவரும் காதலர்,கணவன் மனைவி இப்படி பழகி கொண்டு இணை பிரியா ஜோடியாக இருந்து வந்தார்கள்.


வெளி உலகிற்கு இருவரும் நெருங்கிய தோழிகள்.அந்தரங்கத்தில்அவர்கள் உலகம் வேறு.ஹாஸ்டல் வர வர சலிப்பு தட்ட,இருவரும் ஒரு அப்பார்ட் வீடு எடுத்து மகிழ்சியாக இருந்து வருகிறார்கள்.இருவர் வீட்டிலும் உண்மையை கூறி விட்டு,

தேவை படும் போது அவர்களும் வந்து இவர்களுடன் தங்கி ஒரு சாதாரண குடும்பம் போல வாழ்ந்து வருகிறார்கள்.வெளி உலகில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்று மட்டுமே தெரியும்.இப்போது சொந்தமாக ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.ஸ்வேதா திருமணம் இல்லாமல் அவள் விரும்பிய வாழ்க்கை கிடைத்தது என்று மகிழ்வுடன் வாழ,இந்திரா எதிர்காலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கவலை போக,எப்போதும் போல இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிராள் (ன்).


இது இவர்களை இவ்வளவு தூரம் நிம்மதியாக இருக்க காரணம்,பொருளாதாரம் அது அவர்களை நன்கு காப்பாற்றி வருகிறது.இருவருமே, வசதி உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள்.அது அவர்களை நன்றாக காப்பாற்றி பாது காப்பை கொடுத்தது.இதுவே வசதி இல்லாதவர்களை நினைத்து பார்த்தால்,கடவுளே யாருக்கும் இப்படி ஒரு துன்பத்தை கொடுத்து 

விடாதே என்று கேட்க தான் தோன்றும்.சமுதாயம் இவர்களை எப்போது புரிந்து கொள்ளும் 

அந்த இறைவனுக்கு தான் தெரியும்.

முற்றும்...



Rate this content
Log in

Similar tamil story from Abstract