Vadamalaisamy Lokanathan

Romance

4  

Vadamalaisamy Lokanathan

Romance

காதல்

காதல்

3 mins
374


காதல் 


அந்த ஊரில் உள்ள பிரபல மருத்துவ மனை வரவேற்பு ஹாலில் அமர்ந்து இருந்தான் ராஜா.

அவனுடைய மனைவிக்கு பிரசவம்.அதுவும் தலை பிரசவம்.அவன் கூட யாரும் இல்லை.நேற்று ராத்திரி பிரசவ வேதனை என்று அதி காலை ஒரு மணிக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

இன்னும் பிரசவம் ஆகவில்லை. சேரில் உட்கார்ந்து அரை தூக்கத்தில். இருந்தான்.அந்த தூக்கத்தில் கனவு போல கடந்த கால நினைவுகள் நினைவிற்கு வந்தது.

அவனுக்கு வயது 23 தான் ஆகிறது.இப்போது தான் நிரந்தர வேலை.இரண்டு வருடமாக தான் வேலைக்கும் சென்று வருகிறான்.கார் விற்கும் ஷோ ரூமில் விற்பனை பிரதிநிதி,சம்பளம் 15000 ரூபாய்..

வேலைக்கு சேர்ந்த ஒரு வருடம் கழித்து அங்கு விஜி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தாள்.வேலை விசயமாக அந்த பெண்ணிடம் அடிக்கடி பேச வேண்டி இருந்தது.அவள் பிளஸ் டூ முடித்து விட்டு கம்யூட்டர் பில் எடுக்கும் வேலைக்கு தான் சேர்ந்தாள்.அவளுக்கு சம்பளம் 8000 ரூபாய். கார் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் இரவு எட்டு மணி வரை வந்து கொண்டு இருப்பார்கள்.ஆகையால் இருவருமே வேலை முடித்து வீடு திரும்ப எட்டு மணிக்கு மேல் ஆகி விடும்.இவன் இரு சக்கர வாகனம் வைத்து இருந்தான். அரை மணி நேரத்தில் வீடு சென்று சேர்ந்து விடுவான்.இவன் போகும் வழியில் அவளை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டு செல்வான்.இவன் தயங்கினாலும்,அவளாக வந்து இவனுக்கு காத்து இருப்பாள்.

இவனுக்கு ஒரு அக்கா இருந்தாள்.அவளுக்கு திருமணம் ஆகவில்லை.மாப்பிள்ளை தேடி கொண்டு இருந்தார்கள்.அவளுடைய திருமண செலவு இவன் தான் ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை.அவனும் தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் இரண்டாயிரம் மட்டும் எடுத்து கொண்டு,மீதியை வீட்டில் கொடுத்து விடுவான்.

அக்கா திருமணம் முடியும் வரை அவன் தன்னை பற்றி யோசிக்கவில்லை. அக்கா திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகி விட்டது.இன்னும் கொஞ்சம் கடன் உள்ளது.அதை இன்னும் ஆறு மாதத்தில் கட்டி முடித்து விடலாம்.

ராஜா தினமும் விஜியை பஸ் நிறுத்தத்தில் இறக்கி விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தான்.ஒரு நாள் பஸ் வராததால் வீட்டில் இறக்கி விடும் படி கேட்டாள்.அவனும் கொண்டு போய் இறக்கி விட்டான்

வீட்டிற்குள் வந்து செல்லும்படி அவள் கேட்க இவன் மறுத்தும் வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்து சென்றாள்.அந்த வீட்டில் இருவரை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.அதை உணர்ந்த அவன் உடனே அங்கு இருந்து கிளம்பி விட்டான்.

அதற்கு பிறகு,அவன் சற்று சீக்கிரம் புறப்பட்டு செல்ல தொடங்கினான்.அதை கவனித்த அவள் என்னை ஏன் தவிர்த்து கொண்டு இருக்கிற.நான் உன்னை காதலிக்கிறேன் என்று அவள் சொன்னாள்.இவனுக்கு வேர்த்து கொட்டி விட்டது.இவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை.ஆனால் அவள் அதில் தீவிரம் காட்டி எல்லோருடைய முன்பும் ராஜாவும் நானும் காதலிக்கிறோம் என்று கூறி வந்தாள்.


இதை புரிந்து கொண்டு அவன்,அந்த வேலையை விட்டு விட்டு வேறு பக்கம் வேலை தேடி போனான்.

அதற்கு பிறகு அவளை சந்திக்க வில்லை.ஒரு நாள் அவளுடைய தாயார் அவனுடைய வீட்டிற்கு வந்து ராஜாவின் பெற்றோரிடம் ராஜா தன் மகளை காதலித்து வந்ததாகவும் இப்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் கூற,விசயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போக,பிரச்சினை பெரிதாக,குடும்ப கௌரவம் காப்பாத்த,அவளை திருமணம்,செய்து கொள்ள ஒப்பு கொண்டான்.

இதை ராஜாவின் அக்கா வின் கணவர் எதிர்ப்பு தெரிவிக்க,ராஜாவின் பெற்றோர் அவனை வீட்டை விட்டு விலக்கி வைத்து விட்டார்கள்.திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் விஜியின் அம்மா மாரடைப்பால் காலமாக,விஜி அனாதை ஆகி விட்டாள்.ஏற்கனவே பல உறவினர்கள் அவளை விட்டு விலகி இருக்க,இந்த திருமணத்திற்கு பிறகு யாரும் பக்கத்தில் கூட வரவில்லை.

திருமணம் செய்து கொண்டு,தனி குடித்தனம் இருந்து கொண்டு, தன் குடும்ப செலவு,அக்கா திருமண கடனையும் கட்டி கொண்டு கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் போது விஜி கரு தரித்தாள்.ராஜா அதை கலைக்க சொல்ல அவள் மறுத்து விட்டாள்.

இப்போது இருக்கும் வருமானத்தில் குழந்தையை பராமரிப்பது சிரமம் என்று சொல்லியும் அவள் கேட்கவில்லை.

எப்படியோ சமாளித்து இன்று வரை வந்து விட்டான்.பிரசவத்திற்கு அறுபது ஆயிரம் கட்ட சொன்னார்கள்.அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவனிடம் அவ்வளவு பணம் இல்லை.யாரிடம் கேட்பது என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,இன்னும் பத்தாயிரம் கட்ட வேண்டும்.விஜி நிலைமை சற்று சிக்கலாக இருக்கிறது என்று சொன்னார்கள்.நான் அவளை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறேன்,அவளை அனுப்புங்கள் என்று கேட்டதற்கு,இப்போது பிரசவ அறையில் இருக்கிறாள்,இனி ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டனர்.செய்வது அறியாது திகைத்து நிற்க,அங்கு வந்த அவனுடைய சகோதரி அவனுக்கு யார்க்கும் தெரியாமல் உதவ வந்தாள். தன் தாலி கொடியை கழட்டி கொடுத்து,இதை அடமானம் வைத்து சமாளித்து கொள்,பிறகு பார்க்கலாம் என்று கூற,நிலைமையை எப்படியோ சமாளித்து விட்டான்.


ஒரு பெண்ணுக்கு உதவ போக,அதை அவள் காதல் என்று நினைத்து,எத்தனை குழப்பங்கள்.இளைஞர்களே,பெண்களிடம் பார்த்து பழக வேண்டும்.வெறும் பழக்கம் காதல் அல்ல.

நான் அதற்கு உதாரணம் என்று கூறி கொண்டு இருக்கிறான்.

முற்றும்.


Rate this content
Log in

Similar tamil story from Romance