காதல் விளையாட்டு
காதல் விளையாட்டு
அது ஒரு இரு பாலர் படிக்கும் கல்லூரி.நாகரீகமான உடை அணிந்து ஆண்களை கவர்ந்து இழுக்கும் வண்ணத்தில் பெண்கள் சுற்றி திரிந்தனர்.தினமும் ஒருவன் தன் காதலை சொல்வதை கேட்டு சலித்து போன பெண்கள்.அவர்களுக்கு தெரியாத யாரை தேர்ந்து எடுத்தால் வாழ்க்கை இனிக்கும் என்று.முதலாவது வசதி,வாகனம்,செலவு செய்ய போதுமான பணம்.இத்தனையும் உள்ள பையன்களுக்கு முதல் உரிமை.அறிவு அழகு எல்லாம் அடுத்தபடி.அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டு இருந்தாள், அவளுடைய பெயர் லேகா.அவளை கண்டால் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தாள்.வசதியான பெண்,தினமும் காரில் வந்து இறங்குவாள்.ஆண்கள் பக்கத்தில் செல்ல பய படுவார்கள்.
அந்த கல்லூரியில் அந்த ஆண்டு தான் சேர்ந்து இருந்தான்,முரளி.
அவனை சுற்றி உள்ள மூத்த மாணவர்கள் அவனை கேலி செய்யும் பொருட்டு,அவள் வரும் போது,அவளிடம் சென்று காதலை சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினர்.அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. தங்கும் விடுதி யில்
ரகளை செய்வார்கள்.
அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு லேகா காரில் வந்து இறங்க,அதை எதிர்பார்த்து பக்கத்தில் காத்து இருந்தான் முரளி.
அவளும் கதவை திறந்து இறங்க,அந்த சமயம் அவள் கையில் இருந்த கைபேசி கீழே விழுந்து காருக்கு அடியில் போய் விட்டது.
உடனே முரளி காருக்கு அடியில் குனிந்து,அதை எடுத்து கொடுக்க அவளும் சிரித்த படி வாங்கி கொண்டு சென்று விட்டாள்.அவனும்
அவளிடம் தன் காதலை சொல்ல அவளும் ஒன்றும் சொல்லாமல் சிரித்த படி சென்று விட்டாள்.சக மாணவர்களுக்கு ஒரே வியப்பு.அவனுக்கு கன்னத்தில் அறை விழும் என்று எதிர்பார்த்த
மாணவர்களுக்கு பெரிய ஏமாற்றம்.
நடந்தது என்னவென்றால்,குனியும் போது, ஒரு விளையாட்டிற்கு ஒன்று சொல்வேன்,கோபித்து கொள்ள வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொண்டான்.அதனால் லேகா வும்
அதை பொருட்டாக எடுத்து கொள்ள வில்லை.சகஜமாக கேட்டு கொண்டு சென்று விட்டாள்.
சில நாட்கள் கழித்து,லேகா வந்து இறங்கும் போது,முரளி தென்பட,அவனுக்கு காலை வணக்கம் சொன்னாள்.முரளியும் பதில் வணக்கம் சொல்ல,அந்த நட்பு
ஆழ்ந்த நட்பாக மாறியது.
ஒரு நாள் லேகா, முரளியிடம் அன்று என்ன சொன்னீர்கள்,திரும்ப சொல்லுங்க என்று கேட்க,அவனும் உங்களை விரும்புகிறேன் என்று சொல்ல,ஏன் காதலிக்க மாட்டீர்களா என்று பதிலுக்கு லேகா கேட்டாள்.
எனக்கு இன்னும் ஒரு முறை சொல்ல விருப்பம் தான்.உங்கள் விருப்பம் தெரியாமல் சொல்ல கூடாது அல்லவா என்று சொன்னான்.
லேகா,எனக்கும் விருப்பம் தான் ஆனால் படிப்பு முடிந்து,வேலைக்கு சென்று சம்பாதித்த பிறகு யோசிப்போம் என்றாள்.விளையாட்டில் ஆரம்பித்த காதல்,உண்மையாக மாறுவதை நினைத்து முரளி மகிழ்ச்சி அடைந்தான்.
