காற்றாலை
காற்றாலை
பீட்டர்,வெகு தூரத்தில் இருந்து மூன்று நாள் பயணம் செய்து தன் மாமா வீட்டிற்கு வந்து இருக்கிறான்.
வீடு என்று சொல்ல முடியாது.பெரிய பண்ணை,முன்னூறு ஏக்கர் நிலம்.
பால் கறக்கும் பசுக்கள். கறிக்கு வெண்டி வளர்த்த படும் செம்மறி ஆடுகள்.முட்டை வைக்கும் கோழிகள் என்று அந்த பண்ணை முழுவதும் நிறைந்து காண பட்டது.
அவனுடய கிராமத்தில் மின்சாரம் கிடையாது.இங்கே வந்த பிறகு தான் மின்சார விளக்கை பார்த்தான்.
அவனுடைய அம்மா வேலை கற்று கொள்ள இவனை மாமாவிடம் அனுப்பி உள்ளார்.
வந்து ஒரு மாதம் ஆகி விட்டது.குதிரை மீது அமர்ந்து ஆடு மாடு மேய்ப்பது,பணிக
ளை செய்து கொண்டு இருந்தான்.
மாமா அவனை இன்னும் காற்றாலை பக்கம் விடவில்லை.
ஆனால் அது எப்படி இயங்கும் என்பதை அறிய மிகவும் ஆவல் கொண்டு இருந்தான்.
இன்னும் நாட்கள் செல்ல,மாமா அவனை காற்றாலைக்கு அழைத்து சென்று அது எப்படி இயங்கி வருகிறது என்று சொல்லி கொடுத்தார்.
அதன் மூலம் ஒடும் தண்ணீரை எப்படி இறைத்து தொட்டியில் சேகரிப்பது, காற்று அடிக்கும் போது எப்படி மின்சாரம் உற்பத்தி ஆகிறது என்றெல்லாம் தெரிந்து கொண்டு,தானும் ஒரு நாள் இது போல வசதி படைத்தவன் ஆக வேண்டும் என்று கனவு கண்டான்.
எதிர்காலத்தில் அதை நிறைவேற்றியும் காண்பித்தான்.