கால இயந்திரம்
கால இயந்திரம்
அன்று அதிகாலை ஒரு மிக பெரிய கடிகாரம் ஒன்றை தன் வீட்டின் பின்புறமுள்ள கிணற்றின் அருகில் கண்டான் முத்து.
அவனுக்கு என்ன செய்வது என தெறியாமல் நின்றுக் கொண்டு இருந்தான். அப்போது அதில் ஒரு வாசகம் இருந்ததை கண்டான். "இந்த இராண்டாவது எண்ணை அழுத்தவும் என எழுதி இருந்தது.
அவனும் அதை அழுத்தினான், உடனடியாக ஒரு சப்தம் அங்கிருந்து அவன் திடீரென மாயமான். ஒரு வீட்டின் உள்ளே இருந்ததை உணர்ந்தான்.
பார்த்தால், அது அவனின் பழய வீடு, அவன் சிறு பிள்ளையாக இருந்தபோது வாழ்ந்த வீடு.
ஆனால், ஒரு விச்சிதிரமான விஷயம், என்னவேன்றால் அங்கு அவன், அவனின் பெற்ரோரும் அங்கு மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அதை பார்த்து முத்துவின் மனம் மகிழ்ந்தது. திடீரென யோசிக்க, என்ன இது நமக்கு வயது முப்பது ஆனா என்ன இது இங்கு ஐந்து வயது பிள்ளையாக இருக்கிறேன் என எண்ணினன். அப்போது புரிந்தது அவன் இப்படி அவன் அம்மாவும் அப்பாவும் சிரித்ததை பார்த்து. மனதில் வருத்தம் கொண்டான். இனி எப்படி அவர்களை முன்புபோல சிரிக்க வைக்கிறது என எண்ணினான்.
அங்கு இருந்த இன்னொரு வாக்கியத்ததை படித்தான். "எண் ஒன்றை அழுத்தி நீங்கள் நினைக்கும் காலத்திற்கு உங்களை கொண்டு செல்லும்". அவனும் அதை செய்தான். அவன் இப்போது இருப்பது அவன் வீட்டின் பின்புறம்.
சற்றும் தாமதிக்காமல் அம்மா, அப்பா வாருங்கள் நாம் இன்று ஒன்றாக உணவு உண்ணலாம் என கூறினான்.
அப்போது அவர்களுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருந்ததை முத்து பார்த்தான்.
அன்று புரிந்தது முத்துவுக்கு காலத்தின் அருமை. அவன் அந்த கடிகரத்தை மறுபடியும் அழுத்தினான். இப்போது அந்த கால இயந்திரம் முத்துவை எங்கே கொண்டு சென்றது. எங்கு போனாலும் அவன் செய்ய நினைப்பதை நிச்சயம் செய்வான்.
