Vadamalaisamy Lokanathan

Drama

3.4  

Vadamalaisamy Lokanathan

Drama

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

1 min
183


ராஜா பட்டபடிப்பு முடித்து விட்டு வேலைக்காக காத்து இருக்கிறான்.வேலைக்கான தேர்வுகள் எழுதி விட்டு,முடிவுகளுக்கு காத்து இருந்தான். அவனுடைய கிராமத்தில்,அவனுடைய அப்பாவிற்கு,இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது.ஆனால் தண்ணீர் கிடையாது. மழை வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை.


ராஜா வேலை கிடைக்காத காரணத்தால்,அப்பாவிற்கு உதவியாக,நிலத்தில் வேலை செய்து வந்தான். அந்த நிலத்தை சுற்றி நிறைய கற்றாழை முளைத்து,நன்கு வளர்ந்து இருந்தது.கல்லூரியில் படிக்கும் போது,கூட படித்த பெண்கள்,நிறைய,கற்றாழை கலந்த அழகு சாதனங்களை வாங்குவதை பார்த்து இருக்கிறான்.நிறைய விலை கொடுத்து வாங்குவதையும்

கவனித்து உள்ளான்.


அதே கற்றாழை,அவனது நிலத்தில் நிறைய முளைத்து இருந்ததை பார்த்து,அதை ஏன் அதிகமாக விளைவிக்க கூடாது என்ற எண்ணம் தோன்ற,பக்கத்து நகரத்தில் சென்று,இயற்கை விவசாயம் பற்றியும்,கற்றாழையில் இருந்து,மதிப்பு கூட்டி என்ன பொருள்கள் தயார் செய்யலாம் என்பதை அறிந்து கொண்டு வந்து,அதை அவனே உற்பத்தியும் செய்ய ஆரம்பித்தான்.


அவன் கூட படித்த ஒரு பெண் பெரிய அளவில் அழகு சாதனம்,தயாரித்து விற்பனை செய்து வந்தாள். அவளை தொடர்பு கொண்ட போது,தனக்கு ஒவ்வொரு மாதமும் கற்றாழை நிறைய தேவை படுகிறது,அதை மூல பொருளாக வைத்து நிறைய பொருள்கள் தயார் செய்வதாக சொல்ல,ராஜாவும்,தான் நிலத்தில் விளைந்த கற்றாழையை அறுவடை செய்து தன் தோழிக்கு அனுப்ப,அவனுக்கு நிறைய பணமும் கிடைத்தது கூடவே பக்கத்து நிலத்தில் விளைந்து வீணாக போன கற்றாழையை கேட்டு வாங்கி அறுவடை செய்து,நகரத்திற்கு அனுப்ப, நிறைய பணம் கிடைத்தது.


அதை நாமே பயிர்ட்டு,அறுவடை செய்வது எப்படி என்று அறிந்து கொண்டு தான் வளர்ந்தது அல்லாமல்,பக்கத்து விவசாயி களுக்கும் சொல்லி கொடுத்து,இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகி விட,அவனது வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது.வேலையை விட விவசாயம்,செய்தால் முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாக செயல் பட்டு வருகிறான்.

சுபம்.


Rate this content
Log in

Similar tamil story from Drama