இருளும் ஒளியும்
இருளும் ஒளியும்
மாலை 06:30 மணி
கருமேகங்கள் அந்த கிராமத்தின் வானத்தை ஆக்கிரமித்தது.
தன்வன் மற்றும் அவனது சிறப்பு காவல் படை அந்த கிராமத்தின் வழியே வந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் அவர்கள் சீருடையில் இல்லை,டீ குடிக்க ஒரு கடையில் இறங்கினர்.
தன்வனுடன் சேர்த்து மொத்தம் ஆறு பேர் தான்.
அப்பொழுது அதே கிராமத்தின் உள்ள ஒரு பகுதியில் கையில் குடையுடன் ஒரு ஆள் நடந்து சென்று கொண்ருந்தான் மிகவும் மெதுவாக.
மழை பெய்ய ஆரம்பிக்க குடையை விரித்த அந்த நபர் முகத்தில் ஒரு குரூரம் வெளிப்பட்டது.
அப்பொழுது மாலை பள்ளி முடித்து வந்த ஐந்தாம் வகுப்பு மாணவி பூங்கவள்ளி தனது சைக்கிளை நிறுத்தி விட்டு தன்வன் இருந்த கடை பக்கம் வந்து ஒரு மிட்டாய் வாங்கினாள்.
வாங்கி விட்டு குடுகுடுவென ஒரு வீட்டு பக்கம் போனாள் அந்த பெண்.
அப்பொழுது குடை பிடித்த அந்த நபர் வந்து பாட்டி தூங்கிருச்சு,தாத்தா நான் இருக்கேன்ல கோவிலுக்கு போலாம் வா என கையை பிடித்து குடைக்குள் பூங்கவள்ளியை சேர்த்து இழுத்து கொண்டு போனது.
தன்வன் இருக்கும் கடைக்கு வந்த பூங்கவள்ளி தாய் பிள்ளை வந்துச்சா என கேட்டுவிட்டு அந்த வீட்டிற்கு போயிருப்பாள் என மெதுவாக நடந்து சென்றாள்.
அங்கே அவள் போயிவிட்டு தலையில் அடித்து கொண்டு நடுரோட்டில் வந்து விழ தன்வனின் ஆபிஸர் சென்று அவளை தூக்கி நிற்க வைத்து அழைத்து வந்து தண்ணீர் கொடுத்து விசாரித்தான்.
கொட்டும் மழையில் அந்த பெண்ணின் கண்ணீர் தனியாக தெரிந்தது.
அனைத்தையும் கேட்ட தன்வன் அந்த அம்மாவை அமைதி காக்க வைத்து விட்டு தன் ஆட்களுடன் ஊரின் பல இடங்களில் போய் தேடினான்.
தேட தேட நேரம் சென்றது,மழை ஹோ வென்று வேகமெடுக்க ஆரம்பித்தது.
அப்பொழுது ஒரு சிதலமடைந்த வீடு ஒன்று தன்வன் கண்ணில் பட அதை பார்த்து விட்டு அங்கு குடித்து கொண்டு இருந்த அனைவரையும் ஒரு முறை கேட்டு விட்டு திரும்பினான்.
இரவு வந்தது.
பூங்கவள்ளியின் பெற்றோர்,சொந்தம், ஊர்மக்கள் தேடுதல் வேட்டையை தொடங்க இரவும் சென்றது.
பெய்த மழையால் தேங்கிய நீர் தேடுதல் வேகத்தை குறைத்தது.
வண்டிகள் மூலம் தேடியும் வழியில்லை.
அப்பொழது அங்கு குடையுடன் வந்த நபர் ( 50 வயது ஆள் பூங்கவள்ளியை உண்மையில் கடத்தியவன்) அவள் வீட்டிற்குள் வரவில்லை பள்ளி ஆசிரியர்கள் இடம் கேளுங்கள் காலம் கெட்டு போச்சு என சொன்னான்.
விடிந்து நேரம் போக போக பூங்கவள்ளியின் அம்மா மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பிட்டல் சென்று சேர்க்கபட்டாள்.
தன்வனின் மூளையில் அந்த சிதைந்த வீட்டின் மேல் இருக்கும் ஒரு சிறிய இடம் கண்ணை உறுத்த அவன் அங்கு தன் சிறப்பு படையுடன் செல்ல பூங்கவள்ளி சற்று கண்ணால் பார்க்க முடியாத நிலையில் மயக்கத்தில் இரத்ததுடன் இருந்தாள்.
உடனடியாக அவளை ஆஸ்பத்திரி தூக்க சென்ற தன்வன் அவனது சிறப்பு படையை ஊரின் இரு எல்லையில் நிறுத்திவிட்டு ஊர்மக்கள் அங்கு வந்தனர்.
எல்லாரும் நீ எப்படி கண்டுபிடுச்ச,நீ தான் இத பண்ணியா என கேட்க பூங்கவள்ளியின் அப்பா ஏய் என அனைவரையும் நிறுத்திவிட்டு அய்யா என தன்வனின் காலில் விழ போக அவன் அவரை தடுத்து நிறுத்தினான்.
பின்பு தன்வன் அந்த சன்னலின் மூலம் சூரியனை அன்னாந்து பார்த்தான்.
ஊரின் வெளிய சென்ற பஸ்ஸில் சென்ற அந்த 50 வயது மிருகம் பஸ்ஸில் ஏறிய தன்வனின் சிறப்பு படையை பார்த்து அஞ்சி நடுங்கி பஸ்ஸில் இருந்து தப்பித்து ஓட தயாராக இருந்தது.
