இரட்டையர்கள்
இரட்டையர்கள்
இரட்டையர்கள்
சேது,சாது என்று இரட்டையர்கள்,நன்றாக படித்து வந்தார்கள்.இருவருமே முதல் மார்க் வாங்கும் மாணவர்கள்.
பள்ளி வகுப்பு முடிந்து கல்லூரியில்
சேர்ந்து படிக்க வேண்டும்.ஆனால் அவர்களது பெற்றோர்களுக்கு ஒருவரை மட்டும் தான் படிக்க வைக்க வசதி இருந்தது.
சேது மூத்தவன்,தம்பி சாது படிக்கட்டும் என்று சொல்லி விட்டு,பக்கத்து ஊரில் உள்ள பனியன் கம்பனிக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டான்.
சேது சொன்னது போல பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் சாதுவை சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்தனர்.
இருவரும் ஒரே நேரத்தில் பஸ் பிடித்து அண்ணன் வேலைக்கும்,
தம்பி கல்லூரிக்கும் சென்று கொண்டு இருந்தார்கள்.
பஸ்ஸில் சாது கூட படிக்கும் ஒரு பெண்ணும் நடு வழியில் ஏறி வந்து கொண்டு இருந்தாள்.அவளும் சாது படிக்கும் வகுப்பில் தான் படித்து கொண்டு இருந்தாள்.அவள் பெயர் அழகி.வருடங்கள் ஓடின,படிப்பு முடிந்து சாது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.மாதம் நாற்பதாயிரம் சம்பளம்.சென்னையில் வேலை,அதனால் அங்கு சென்று தங்கி வேலை பார்த்து வந்தான்.
சாது கூட படித்த அந்த பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள்.
சாது வேலைக்கு சேர்ந்து நிறைய சம்பளம் வாங்கியதும் ஆடம்பரமாக வாழ தொடங்கினான்.ஊருக்கு சரியாக போவது இல்லை.
பெற்றோர்களுக்கு எந்த பண உதவியும் செய்யவில்லை. சேது சென்னை வந்து தம்பியை பார்க்க அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் வாயிலில் காத்து இருந்தான்.
பணி முடிந்து,சாது வருவான் என்று காத்து இருக்க,அழகி வெளியில் வந்தாள். சேது காத்து இருப்பதை பார்த்து,அவனை நோக்கி சென்று அவனை கூப்பிட்டு வணக்கம் சொன்னாள்.
சேது பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு,நீங்களும் இங்கு தான் பணி செய்கிறீர்களா என்று கேட்டான்.கேட்டு விட்டு சாது வை பார்க்க வந்தேன் என்றான்.அதற்கு அவள்,சாது இன்றைக்கு வேலைக்கு வரவில்லை.ஏதாவது அவசரமா என்று அழகி கேட்க,இல்லை என்று இழுத்தான்.அழகிக்கு சேதுவை பற்றி நன்கு தெரிந்து வைத்து இருந்தாள்.
அவனுடைய கடின உழைப்பு பற்றி அறிந்து வைத்து இருந்தாள்.
சாது பெற்றோர்களையும்,சகோதரனையும் மறந்து விட்டு,இங்கு பெண் நண்பர்களுடன் ஊர் சுற்றி கொண்டு இருக்கிறான்.அழகியிடம் கூட,தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தான்.ஆனால் அவள் பதில் எதுவும் கூறவில்லை.அவனுடைய நடத்தை பற்றி நன்கு அறிந்து இருந்ததால்,அவளுக்கு உள்ளூர விருப்பம் இல்லை.
சாது இல்லை என்று தெரிந்த பிறகு நாளை வருவானா, என்று அவளிடம் கேட்க,அவனுடைய நம்பர் உங்களிடம் இல்லையா என்று கேட்டாள்.அதற்கு சேது நான் கூப்பிட்டால் பதில் பேச மாட்டான்.அம்மாவிற்கு உடல்நலம் சரியில்லை,அவனை பார்க்க மிகவும் ஆசை படுகிறார்கள்.அதை அவனிடம் சொல்லி அழைத்து செல்ல தான் வந்தேன்.நாளை வருவான் என்றால்,காத்து இருந்து பார்த்து செல்கிறேன் என்று சொன்னான்.
இதை கேட்ட அழகி சாது வை போனில் அழைத்து,நாளை வருவாயா,உன்னை பார்க்க ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார்,
என்று சொல்ல,என்ன பார்க்க யார் வருவார்.நாளை வருகிறேன் என்று சொல்லி விட்டான்.
சேதுவை பார்த்து,காலை வரை எங்கு தங்குவீர்கள் என்று அவள் கேட்க,இனி மேல் தான் யோசிக்க வேண்டும்.,ரயில்நிலையம் அல்லது பஸ் ஸ்டண்ட் எது பக்கமோ அங்கு தங்கி கொள்கிறேன் என்று அவன் கூற,அவளுக்கு அவனை பார்க்க பரிதாபமாக தெரிந்தான்.
உடனே பக்கத்தில் இருந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட் ஒன்றை புக் செய்து அவன் தங்க ஏற்பாடு செய்தாள்.
மறக்காமல் அவனுடைய நம்பரை வாங்கி கொண்டு,அவனை அங்கு அனுப்பி விட்டு,தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.
வீட்டிற்கு போனதும் தன் பெற்றோரிடம்,தனக்கு ஒருவனை பிடித்து இருக்கு,திருமணம் செய்து கொள்ள சம்மதம் தருவீர்களா என்று கேட்டாள்.
பையனை பற்றி தெரியாமல் எப்படி என்று பெற்றோர் கூற,சேதுவை பற்றிய விவரங்களை கூறினாள்.
அதற்கு பெற்றோர்கள்,இரு முறை யோசித்து முடிவு செய்து கொள்,உன்னுடைய வாழ்க்கை என்று சொல்லி விட்டார்கள்.
அடுத்த நாள் சாது வர,சேதுவை பார்த்து திட்ட தொடங்கினான்.தான் வர போவதில்லை என்று திமிராக பேசினான்.
அழகி சேதுவிடம் நான் அவனை அழைத்து வருகிறேன், என்று உறுதி கூற சேது ஊர் திரும்பினான்.
அழகி சாதுவிடம்,உங்க அம்மாவிற்கு நான் மருமகள் ஆக வேண்டாமா என்று கேட்க,இவனும் ஆமாம் என்று தலையாட்ட,இருவரும் ஊருக்கு கிளம்பி சென்றனர்.
சாது வை பார்த்த,அவனுடைய அம்மா,மகிழ்ச்சியோடு உயிர் நீக்க,வேறு வழியின்றி வீட்டில் தங்கினான் சாது.
அழகி யைப் பார்த்து பெரிய உதவி செய்தீர்கள்,பதிலுக்கு நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை என்று கூற,நான் கேட்டால் மறுக்க மாட்டீர்கள் தானே என்று அவள் கேட்க,இவனும் ஆமோதித்து தலையை ஆட்ட,தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவள் கேட்க,அவன் எப்படி முடியும்,படிக்காதவனை எந்த பெண்ணாவது திருமணம் செய்து கொள்ளுவாள,வேறு ஏதாவது கேளுங்கள் என்று கூறினான்.
நீங்க சம்மதம் சொல்லாதவரை இந்த ஊரை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க,வேறு வழி இன்றி சேது சம்மதம் சொன்னான்.
அதை கேட்டு கொண்டு இருந்த சாது,என்னை தானே திருமணம் செய்வதாக சொன்னாய்,இப்போது உன் முடிவு வேறு விதமாக இருக்கிறது என்று அவளை பார்த்து கேட்க,அதற்கு அவள் உன் அம்மாவிற்கு நான் மருமகளாக வருவதாக தான் சொன்னேன்,உன்னை திருமணம் செய்வதாக அல்ல என்று சொல்ல,அவள் சாதுறியத்தை பார்த்து வியந்தான். தன் மீது தான் தவறு,அம்மாவை அடிக்கடி வந்து பார்த்து இருந்தால்,அம்மா உயிர் போய் இருக்காது.அம்மா சாக தான் தான் என்று வருத்த பட்டான்.
திருமண செலவை நானே ஏற்று கொண்டு அண்ணன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்று சாது வாக்கு கொடுத்தான்.
அவனும் இப்போது திருந்தி, வாழ உறுதி எடுத்து,மாத மாதம் ஊருக்கு வந்து அண்ணன் குடும்பத்தையும்,அப்பாவையும் பார்த்து செலவிற்கு பணம் கொடுத்து சென்று கொண்டு இருக்கிறான்.
