இந்திய தேசத்தோர் நாம்
இந்திய தேசத்தோர் நாம்
அந்தமான் ஜெயில்,1921
சுக்வீர்,தாமஸ்,சிவா,லால்,மூஷின் ஆகியோர் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் சிறைக்கு சென்றனர்.
சிறையில் முதல் முறை ஐவரும் சந்தித்தனர்.
நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்து இந்த சிறைக்கு வந்ததற்கான காரணம் அவர்கள் போராட்டத்தை தலைமை தாங்கியது தான்.
ஐவரும் ஒருவருக்கு ஒருவன் உறுதணையாக இருந்தனர்.
சரியான நல்ல உணவு கிடைக்காது,உடல்நிலை அங்குள்ள சுகாதாரமற்ற நிலையால் மோசம் அடைந்ததால் ஒருவர் இன்னொருவருக்கு உதவி இருந்தனர்.
1 வருடம் கழித்து அனைவரும் விடுதலை ஆகினர்.
அனைவரும் கடிதம் மூலம் சுதந்திரம்,போராட்டங்கள் பற்றி பேசிக் கொண்டனர்.
25 வருடங்கள் கழித்து இத்தனை இரண்டாம் உலக போரால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளான ஆங்கிலேயே அரசு அதனுடன் இந்திய மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் காட்டிய எதிர்ப்பை இனி தாக்குபிடிக்க முடியாது என பல காரணிகளால் சுதந்திரத்தல குடுத்தார்கள் இல்லை நாம் அதை பெற்றோம்.
2022,இந்தியா
ஜி.எஸ்.டி பங்கீடு பல மாநிலங்களுக்கு இடையே பிரச்சனையை உண்டாக்கியது.
கர்நாடகம்,தமிழகம்,கேரளா,ஆந்திரா நதிகள் இணைப்பு செய்யாமல் அணைகள் கட்ட முட்டி மோதிக் கொண்டது.
இந்தி மற்றும் பிற மொழிகள் எது பெரியது என போட்டியிட்டனர.
தெற்கில் உள்ள மக்களை கேலி செய்த பாலிவுட் படங்கள்.
தற்போது வடக்கன் என வடக்கு இந்திய மக்கள் கேலி செய்யபட்டனர் தெற்கில் உள்ளவர்களால்.
வேலைகள் ஒரு பகுதி தேசத்தவருக்கு கொடுக்கப்பட்டது பாரபட்சத்தால்.
இங்கு இருந்து அமெரிக்கா சென்ற கேரளா மாணவன் டி'சௌஷா,தமிழக மாணவன் பிரதாப், உத்தரபிரதேச மாணவர் அபினவ் ஆகியோர் அமெரிக்காவின் எம்.ஐ.டி யில் சேர்ந்தனர்.
அங்கு அந்த மூவரின் கண்ணும் தேடியது இந்த இடத்திற்கு நாம் பழகும் வரை அல்லது இருப்பதற்கு நமக்கு தெரிந்த அல்லது நெருக்கமான யாராவது இருப்பார்களா என்று தான்.
மூவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்தவுடன் ஒன்று சேர்ந்தனர், அங்கு இந்தி வரவில்லை, அவர்கள் எந்த மாநிலம் என முதலில் தோன்றவில்லை, இந்தியன் எனும் உணர்வே முதலில் மனதில் வந்தது இந்தியர் எனும் எண்ணம் தான்.
இந்தியன் என்பதை முன்னிறுத்துவோம்,அனைவரும் இந்தியன் என நினைத்தால் வேற்றுமை இல்லாமல் போகும்.
