Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

இ-மெயில்

இ-மெயில்

2 mins
216



போனை நோண்டி கொண்டு இருக்கும் போது மெயில் ஒன்று புதிதாக வந்தது.அது ஒரு புரோமோசனல் மெயில்.அதனால் அவன் கவனத்தை ஈர்க்கவில்லை.

போனை மூடி விட்டு சாப்பிட சென்று விட்டான்.

அடுத்த நாள் காலையில் போனை எடுத்து பார்த்த போது அதே மாதிரி செய்தி பத்து வந்து இருந்தது.அது ஒரு ஆன்லைன் சூதாட்டம் பற்றியது.


அவனுக்கு அந்த விளையாட்டை ஆடி பார்த்தால் என்ன என்று தோன்றியது.

அந்த மெயிலை திறந்து அதன் உள்ளே செல்ல,அதில் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு இலவசம் என்று வர,அதை ஆட தொடங்கினான்.அவனுக்கு கூட ஆயிரம் கிடைத்தது.மீண்டும் அடினான்,மீண்டும் ஆடினான்.இறுதியில் அவன் கையில் பத்தாயிரம் இருந்தது.ஒன்றுமில்லாமல் விளையாடி பத்தாயிரம் கிடைத்தது, என்று அடுத்த கையில் இருந்த ஐயாயிரம் சேர்த்து பதினையாயிரம் கட்டி விளையாட இருபது ஆயிரம் கிடைக்க,அடுத்த நாள் கூட பத்தாயிரம் பிட்டு முப்பது ஆயிரத்திற்கு விளையாடினான்.அன்று முழுவதும் நஷ்டம் .மீண்டும் ஐயாயிரம் கடன் வாங்கி ஆட பத்தாயிரம் கிடைக்க,இப்படி ஆட கிடைக்க,பணம் போக என்று ஆடி மாத இறுதியில் அவனுடைய கடன் முப்பது ஆயிரம்.

அடுத்த மாதம் சம்பளம் இருபது ஆயிரம் கிடைக்க அதை முழுவதும் கட்டி ஆட,முழு தொகையும் இழந்து விட்டான்.கையில் இருந்த மோதிரம் அவன் மனைவி வீட்டில் போட்டது.அதையும் அடகு வைத்து ஆடி விட்டான்.மொத்தத்தில் இப்போது அறுபது ஆயிரம் கடன்.அதுவும் ஒரு மாதத்தில்,அவன் வாங்கும் சம்பளத்தில் குடும்ப செலவிற்கு போதாது.அவன் எப்படி கடனை திருப்பி அடைக்க முடியும்.

சம்பள நாள் வெறும் கையுடன் வீட்டிற்கு போனான்.வீட்டில் அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

மனைவி என்ன கேட்டும் அவன் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.

அடுத்த நாள் காலை அந்த வீடு ரொம்ப நேரம் திறக்க படவில்லை.

காவல் துறை அதிகாரிகள் கதவை உடைத்து கொண்டு இருந்தனர்.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract