எதிர்ப்பு சக்தி
எதிர்ப்பு சக்தி
மூர்த்தி பேருந்தில் நடத்துநர் ஆக வேலை பார்த்து வந்தார்.முப்பது வயது.இளங்கன்று பயம் அறியாது
என்று கொரோனா காலத்தில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் வேலை செய்து வந்தான.ஒரு நாள் லேசாக இருமலும் காய்ச்சலும் இருந்தது. மாத்திரை சாப்பிட அதுவும் குணம் ஆகி விட்டது.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற போது அப்பாவும் அம்மாவும் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டனர்.மூச்சு விட கஷ்ட பட்டனர். மருத்துவ மனையில் சேர்த்தும் பலன் அளிக்கவில்லை.
இரண்டு நாளில் இருவரும் இறந்து போய் விட்டார்கள்.
அவனுடைய கவனம் இன்மை
காரணம் கொரோனா அவனிடம் இருந்து பெற்றோருக்கு பரவி உள்ளது.அவனுக்கு பெரிய பாதிப்பு வரவில்லை.
பட்டால் தான் தெரியும் என்ற
பழ மொழிக்கு ஏற்ப அவனுக்கு வந்த அந்த இழப்பு காரணம்
யாரை பார்த்தாலும தடுப்பு ஊசி போட சொல்லுவான்.முக கவசம் அணிய சொல்லுவான்.
பேருந்தில் முக கவசம் இல்லாமல் வந்தால் கையில் இருக்கும்
முக கவசம் கொடுத்து அணிய சொல்லுவான்.
