எந்த பருவமும்
எந்த பருவமும்
எந்த பருவமும்
பொதுவாக ஒரு பழமொழி உண்டு.எதையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று.
அதாவது இது ஒரு கட்டுப்பாடு.இந்த பழமொழி பல இடங்களில் பொருந்தி வரும்.
ராமு,கல்லூரியில் படிக்கும் மாணவன்.தொடக்க பள்ளி நடுநிலை பள்ளி,உயர்நிலை பள்ளி,கல்லூரி இப்படி படிக்கும் ஒவ்வொரு பருவத்திலும் இரு பாலரும் சேர்ந்து படிக்கும் கல்வி கூடங்களில் தான் படித்து வந்தான்.இப்போதும் படிக்கிறான்.
பொதுவாக பெண்கள் மீது அவனுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.இந்த காலத்தில் பெண்களை போக பொருள்,காட்சி பொருள்,என்று நடத்தி கொண்டு இருக்கும் ஆண்கள் நடுவே அவன் வித்தியாசமான பையன்.அம்மா ஒரு குழந்தைக்கு எல்லா பருவத்திலும் தாயாக இருக்கிறாள்.அக்கா அல்லது தங்கை அவளும் எல்லா பருவத்திலும் சகோதரி தான்.ஆனால் ஒரு ஆண் வாலிப பருவத்தை அடையும் போது இந்த இரு உறவுகள் அல்லாத வேறு ஒரு உறவை தேடுகிறான்.அது தப்பு இல்லை.அந்த உறவு சரியாக இருக்கும் வரை.ராமுவை பார்த்து பலரும் கிண்டல் செய்வார்கள்.ஒரு பெண் சிநேகிதி கூட இல்லாதவன்,எதற்கும் லாயக்கு இல்லாதவன் என்று.ஆனால் அவனுக்கு தெரியும்.ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மனைவி என்று ஒரு பெண் வாழ்கையில் துணைக்கு வருகிறாள்.வந்த பிறகு வாலிபம் முதல் வயோதிக பருவம் வரை அவள் அவனுக்கு துணையாக நிற்பாள்.பெண்ணுக்கு மட்டும் பல பருவங்கள் கடந்து வர வேண்டி உள்ளது.அதில் அவள் தடம் மாறும் போது தான் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.ஒரு குழந்தையாக இருந்து,ஒரு கன்னி பருவத்தை அடைந்து,உடலில் மாற்றங்கள் வந்த பிறகு அவள் இல் வாழ்க்கைக்கு தயார் ஆகிறாள்.இதில் பிறரது ஆதிக்கம்,அல்லது தூண்டுதல் காரணம் பாதை மாறி போய் விட்டால் அவள் வாழ்க்கையே கேள்வி குறி ஆகி விடுகிறது.அப்படி அவளுக்கு வரும் துன்பங்களுக்கு ஒரு ஆண் தான் காரணமாக இருப்பான் என்பது ராமுவின் கருத்து.பருவ வயதில் ஒரு பெண்ணுடன் பழகி அவள் மனதை குழப்ப. கூடாது என்று நினைத்து அவன் எந்த பெண்ணுடன் அந்த அர்த்தத்தில் பழக வில்லை.இப்போது அவளை ஒரு சகோதரியாக பார்க்க வேண்டிய நேரம்.இதுவே தன்னுடைய சகோதரி இந்த பருவத்தில் ஒரு ஆணுடன் பழகுவதை எந்த சகோதரனும் விரும்ப மாட்டான்.அப்படி இருக்கும் அந்த சகோதரன் மற்ற பெண்களையும் ஒரு சகோதரியாக தானே பார்க்க வேண்டும்.ஏன் ஒரு காம பொருளாக பார்க்கிறான்.
வைக்க வேண்டிய இடத்தில் வைத்து அந்த பெண்ணை பார்த்தால் தவறான எந்த எண்ணமும் ஒரு ஆணுக்கு வராது.மனித வாழ்வு ஆகட்டும் காலநிலை ஆகட்டும் ஒவ்வொரு பருவத்தை கடந்து வருகிறது அதை மதித்து நடக்கும் எந்த ஒரு ஆணும் மதிக்க பட வேண்டியவன் என்று எல்லோருக்கும் கருத்து கூறி வந்தான் ராமு.
முற்றும்.
