எனது ஆசிரியர்கள்
எனது ஆசிரியர்கள்
எங்க ஊரு ஒரு நடுத்தர கிராமம்.ஒரு நாளைக்கு இரண்டு வேளை பஸ் போக்குவரத்து.ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு சின்ன நகரம்.அங்கு தான் உயர்நிலை பள்ளி.
என்னுடைய கிராமத்தில் இருந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே.உயர்நிலை வகுப்பிற்கு பக்கத்து நகரம் செல்ல வேண்டும்.
ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு.அந்தோனிமுத்து அவர்கள்.அவர் போதித்த ஆங்கிலமும் கணக்கும் இன்னும் என்னை வாழ வைத்து கொண்டு இருக்கிறது.அடுத்து குமாரி லட்சுமி டீச்சர்.தமிழ் சொல்லி கொடுத்த அன்னை.
இன்று அவர்கள் உயிருடன் இல்லை.காரணம் எனக்கே வயது 72.
அவ்வளவு அக்கறை எடுத்து சொல்லி கொடுப்பார்கள்.நன்றாக படிக்கும் மாணவர்களில் நானும் ஒருவன்.
ஏழாம் வகுப்பு முடிந்து மாற்று சான்றிதழ் வாங்கி பக்கத்து நகரத்தில் உள்ள,உயர்நிலை பள்ளியில் சேர வேண்டும்.அதை வாங்க நான் அப்பாவுடன் திரு.அந்தோனிமுத்து தலைமை ஆசிரியரை பார்க்க போனோம்.
என்னுடைய அப்பா,அந்த சான்றிதழை வாங்கும் போது.தலைமை ஆசிரியர் காலில் விழுந்த வணங்கி கையில் வாங்க சொன்னார்.அன்று அவர் தந்த ஆசிகளினால் தான் நானும் ஒரு மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
அடுத்து உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை.அங்கு போதித்த ஆசிரியர்கள் இன்றும் நினைவில் இருக்கிறார்கள்.கணக்கு போதித்த தலைமை ஆசிரியர் Fr.இம்மானுவேல்,ஆங்கிலம் போதித்த திரு.ததையுஸ்,சமூக பாடம் சொல்லி கொடுத்த திரு.சாகுல் அமீது,விஞ்ஞானம் போதித்த திரு.தங்கப்பன் சார்,மற்றும் ஒன்பதாவது வகுப்பில் ஆங்கிலம் சொல்லி கொடுத்த ருக்மணி டீச்சர்,கணக்கு சொல்லி கொடுத்த திரு.பிலோமின் ராஜ்
PT மாஸ்டர் திரு.ஸ்டீஃபன், நாகர்கோயிலில் இருந்து வந்த தமிழ் ஆசிரியர்,குரல் மணியோசை போல இருக்கும், மற்றும் ஹிந்தி பண்டிட்,
இவர்கள் சொல்லி கொடுத்த பாடங்கள் தான் என்னை முதல் மாணவன் ஆக்கியது.
இன்னும் அந்த பள்ளிகள் அங்கு செயல்பட்டு வருகிறது.மறக்க முடியாத வகுப்பு அறைகள்,மறக்க முடியாத பள்ளி கட்டிடம்,மறக்க முடியாத பாடங்கள்,என்னை மனிதனாக மாற்றியதில் பெருமை படுகிறேன்.
