என்னுடைய நகரத்து வாழ்க்கை
என்னுடைய நகரத்து வாழ்க்கை
என்னுடைய நகரத்து வாழ்க்கை.
கிருஷ்ணன் அடிப்படையில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்.பட்டப்படிப்பிற்கு,
அருகில் இருந்த ஒரு ஊருக்கு சென்று வருவான்.அதை விட்டால் அவனுக்கு பெரிய நகரம் பற்றிய விவரம் எதுவும் தெரியாது.
பட்டபடிப்பு முடிந்த பிறகும்,சரியான
வேலை கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள ஒரு அரிசி மொத்த வியாபாரம் செய்யும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்தான்.ஆனால் விடுமுறை அல்லது ஓய்வு என்பது எதுவும் கிடையாது.
அந்த அலுவலகத்தில் தங்கி,உண்டு உறங்கி வேலையை செய்து வந்தான்.
அப்போது தான் லாரியில் அரிசி மொத்தமாக வெளியூர் செல்லும்,அப்போது சில நகரங்களை பார்த்த அனுபவம்,அதுவும் சில மணி நேரங்களில் முடிந்து விடும்.
நாட்கள் செல்ல,இந்த வேலை வாழ்க்கையில் முன்னேற உதவாது என்று நினைத்து,ஒரு நண்பரின் தயவால்,கோயமுத்தூரில் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
அதில் சேர்ந்த போது,சம்பளம் மிக குறைவு தான்.ஆனால் செலவிற்கு போதுமானதாக இருந்தது.அந்த சம்பளத்தில் மிச்சம் பிடித்து சிறு தொகை பெற்றோருக்கு கொடுத்து வந்தான்.
ஆனால் நாற்பது ஆண்டுகள் வேலை செய்து முடிக்கும் போது,கிருஷ்ணனுக்கு கிடைத்த அனுபவங்கள் ஏராளம்.
அவன் கோயமுத்தூர் வந்து, நாற்பத்தியெட்டு ஆண்டுகள் ஆகியும் அவனுக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் இல்லை.
வேலை குடும்பம் என்று தான் வாழ்க்கை போய் க்கொண்டு இருந்தது.கோயமுத்தூரில் பெண் கிடைக்க திருமணம் செய்து நிரந்தரமாக அங்கு தங்கி விட்டான்.
கடுமையான உழைப்பாளி,நேர்மை தவறாமல் வேலை செய்து முடிக்க,அவனுக்கு உயர்ந்த இடத்திற்கு வர மற்றவர்கள் சிரமப்பட,அவனுக்கு அது எளிதில்
சாத்தியமாகி விட்டது.
நண்பர்கள் அமையாமல் போகக் காரணம்,பழகிய நபர்கள் ஏதாவது பிரதி பலன் எதிர்பார்த்தார்கள்.அது அவனுக்கு பிடிக்கவில்லை.
பணியில் இருந்த போது ஓரிரு நண்பர்கள் நட்பில் இருந்து வந்தார்கள்.
ஆனால் கிராமத்தில் இருந்த மகிழ்ச்சி,கிடைத்த நண்பர்கள் இங்கு கிடைக்கவில்லை.எதுவும் ஒரு வியாபார நோக்குடன் தான் கடந்து போனது.
அதை எண்ணி அவன் வருத்தப்படவும் இல்லை.யாரும் இல்லாமல் அவனால் நேரத்தை செலவழிக்க முடிந்தது.
நகரத்தில் ஒரு முன்னறிவிப்பு இன்றி யாரையும் சென்று பார்க்க முடியவில்லை.அப்படி சந்தித்தாலும்,குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சந்திப்பை முடிக்க வேண்டும்.ஒரு உறவினர் அல்லது நண்பர் குடும்பத்தை சென்று பார்க்க,தின்பண்டம் அல்லது பழங்கள் வாங்கவே குறைந்தது ஐநூறு ரூபாய் அவனுக்கு தேவைப்பட்டது.இந்த சுமையே
அவனை மிகவும் யோசிக்க வைத்தது.நட்பு அல்லது உறவு தொலைபேசியில் மட்டும் தொடர்ந்தால் போதும் என்று நினைக்க ஆரம்பித்தான்.இது அவனுக்கு மட்டுமல்ல,நகரத்தில் வாழும் அத்தனை பேருக்கும் பொதுவாக தான் இருக்கிறது.
அது மட்டுமா,சொந்த ஊரில் உள்ள பெற்றோர் களை குடும்பத்துடன் சென்று பார்க்க குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் தேவை பட்டது.
மனது விரும்பினாலும் பொருளாதாரம் விரும்பவில்லை.நகரத்தில் நாகரீகமாக இருக்க முடிந்ததே தவிர நாணயமாக அவனால் இருக்க முடியவில்லை.ஏதோ ஒரு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்,கூடிக்கொண்டு இருந்தது.ஆனால் அதை கஷ்டப்பட்டு அடக்கி வைத்து வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.
