என் மனைவி
என் மனைவி
என் வளர்ச்சிக்கு காரணம் என் மனைவி தான்.ஒரு ஆண் ஒரு தொழிலில் அல்லது பணியில் முழு நேரம் ஈடுபடும் போது,குடும்ப வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் ஏற்படும்.அது ஏற்படாத வாறு
சமாளிப்பது பெண்.
அப்படி ஒரு இடத்தை நிரப்பியது என் மனைவி தான்.
என் பணி சுமையை புரிந்து கொள்வது,வீடு பராமரிப்பு,திட்டமிடுதல்,விழாக்களில் பங்கு பெறுவது போன்ற பல விடயங்களில் அவளுடைய
பங்களிப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று.
எதற்கும் முகம் சுளிக்காமல் கணவனுடன் சேர்ந்து செயல் படுவது லேசான காரியம் அல்ல.
என்னையும்,குடும்பத்தையும் கவனித்து கொண்டு,அவள் வேலைக்கும் சென்று,ஆசிரியர் பணியை செம்மையாக முடித்து
யார் முகமும் கோணாமல்
என்னுடன் ஆதரவாக இருந்து வரும் என் மனைவியை சிறந்த பெண்மணியாக கருதுகிரேன்.
