எல்லாவற்றுக்கும் ஒரு விலை உணடு
எல்லாவற்றுக்கும் ஒரு விலை உணடு
டிசம்பர் 9, 2019
‘ இது வரை நான் பொறாமை பட்டதே இல்லை! ’
என்று சொல்லும் தகுதி வாய்ந்த ஒரே ஒருவர் உண்டு! அவர் வேறு யாருமல்ல! நம் வாழ்க்கையில் நாம் நிம்மதியாய் இருப்பதற்கு காரணகர்த்தாவாய் இருந்து நம்மை வழி நடத்தும் அந்தக் கடவுள்தான்!
நான் என் வாழ்நாளில் பல முறை பொறாமை பட்டிருக்கிறேன். பள்ளியில், பேச்சுப் போட்டியில் அடுத்த பையன் முதல் பரிசை தட்டிச் சென்றபோது அவன் மீது பொறாமைப் பட்டிருக்கிறேன்.. நண்பன் ராமன் முதன் முதலில் ஃபேஷனாய் வந்த (knitted) நிட்டெட் பேண்டை, சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்று, வாங்கி, தைத்து போட்ட போது பொறாமை பட்டிருக்கிறேன். தீபாவளிக்கு பக்கத்து வீட்டில் 'சர(ம்)'மாரியாக பட்டாஸ் விட்ட போது நான் விட முடியவில்லயே என்று பொறாமைப் பட்டிருக்கிறேன், ஆனால் அவை எல்லாம் காலப்போக்கில் (சில நிமிடங்களில் – சில மணித்துளிகளில் – சில நாட்களில்) மறைந்து போனவை. எனவே இந்த வகை பொறாமைகள் நிலையற்றவை. இவைகளை ‘ஆதங்கம்’ என்று சொல்லலாம்.
தங்கள் குழந்தைகளும் பேரன்/பேத்திகளும் வெளி நாட்டில் வாழ்ந்தால் சிலர்/பலர் பெருமைப் படுவார்கள். மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்களுள் பலர் - நம் நாட்டிலேயே தங்கள் குழந்தைகளுடன் பேரன்/பேத்திகளை (பிரச்சினைகள் இருந்தாலும்) கொஞ்சிக் கொண்டு (குறைந்த பொருளாதாரமானலும்) சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பார்த்தால் பொறாமை கொள்வார்கள்!
அதில் நானும் ஒருவன்!