ஏழை சிறுவன்
ஏழை சிறுவன்
புது பட்டி கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவன் ராஜா.அவனுடைய அப்பா அம்மா இருவரும் விவசாயி கூலி வேலை செய்து வந்தார்கள்.ராஜாவிற்கு வயது வந்த இரு சகோதரிகள்.அவர்களை பாதி படிப்பில் நிறுத்தி, கூலி வேலை செய்யும் பையன்களுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு,அந்த கடனை எப்படி திருப்பி அடைப்பது என்று தெரியாமல் கவலை பட்டு கொண்டு இருந்தனர் அவனது பெற்றோர்கள்.
அங்கு உள்ள ஒரு கிறித்துவ பள்ளியில் ராஜா எட்டாவது படித்து கொண்டு இருந்தான்.ஆங்கிலம் நன்றாக படிப்பான்.ஆசிரியர் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லுவான்.
அந்த பள்ளிக்கு,ஒரு மதபோதகர் தான் தாளாளர்.அவருக்கு தெரிந்த வெளிநாட்டு கிறித்துவர்கள் அடிக்கடி அந்த பள்ளிக்கு வந்து,தேவையான
உதவிகளை செய்வது வழக்கம்.
ராஜாவின் அப்பாவும்,அந்த பள்ளி தாளாளரை சந்தித்து கை கடன் வாங்குவது வழக்கம்.அவனால் அதை திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும்,வற்புறுத்த மாட்டார்.
ராஜாவின் பெற்றோர்,அவனை இந்த ஆண்டோடு படிப்பை நிறுத்தி விட்டு,வேலைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.மேலும் படிக்க வைக்க அவர்களுக்கு இயலவில்லை,அவனும் வேலைக்கு போனால்,வரும் வருமானத்தை வைத்து வட்டி கட்ட உதவியாக இருக்கும் என்று எண்ணினான்,ராஜாவின் அப்பா.
இதை பள்ளி தாளாளரிடம் கூறிய போது,நன்றாக படிக்கும் ராஜாவை பாதியில் நிறுத்த அவர் விரும்ப வில்லை.அதே நேரத்தில் அவனுடைய அப்பா கடனை கட்ட முடியாமல் அவதி படுவதும் தெரியும்.
அந்த நேரத்தில் அந்த பள்ளிக்கு வந்த ஒரு வெளிநாட்டு தம்பதி, தத்து எடுத்து வளர்த்த ஒரு பையனை தேடி கொண்டு இருந்தார்கள்.
வெளிநாட்டவர் வரும் போது ராஜா தான் அவர்களுடன் ஆங்கிலம் பேசி
பள்ளியை பற்றிய விவரங்களை விளக்குவான்.அது போல அன்றும் ராஜா தான்,அவர்களுடன் பேசி கொண்டு இருந்தான்.அவனது திறமையை பார்த்த அந்த தம்பதி, தாளாளரிடம் அவர்கள் விருப்பத்தை கூற,அவரும் அவனுடைய பெற்றோர் விருப்பத்தை அறிந்து சொல்வதாக சொன்னார்.
தாளாளரும் ராஜாவின் பெற்றோரை
அழைத்து,பக்குவமாக எடுத்து கூற,இதன் மூலம்,உங்கள் கடன் அடைய வாய்ப்பு உள்ளது,அதே நேரம் அவனுக்கும் ஒரு வசதியான வாழ்க்கை கிடைக்கும்,எப்போது விரும்பினாலும் அவன் உங்களை வந்து பார்ப்பான்.வெளிநாட்டு தம்பதி,இந்தியாவில் தங்கி, பொதுசேவை செய்ய விரும்புகிறார்கள்.இந்தியாவில் ஏதாவது ஒரு கிராமத்தில் வசித்து கொண்டு சேவை செய்வார்கள்.அவர்கள் ராஜாவை நல்ல படி பார்த்து கொள்வார்கள்.
என்று எடுத்து கூற,ராஜாவின் பெற்றோரும் இரண்டு நாள் அவகாசம் கேட்டு வீடு வந்தனர்.
அடுத்த நாள் வார விடுமுறை,தன்னுடைய இரண்டு மகளையும் வர சொல்லி,ராஜாவையும் வைத்து இதை பற்றி பேச,எல்லோரும் அரை மனதுடன் ஒப்பு கொண்டனர்.கடனை அடைக்க வழி தெரியாமல் தான் இந்த முடிவிற்கு ஒப்பு கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு எல்லோரும் சென்று தங்கள் சம்மதத்தை தெரிவிக்க,மேற்கொண்டு சட்ட ரீதியாக ராஜாவை தத்து எடுக்கும்
பணி நடந்து முடிந்தது.அது ராஜாவின் பெற்றோரை ஒரு பெரிய இக்கட்டில் இருந்து காப்பாற்றியது
இப்போது ராஜா இன்னும் பெரிய பள்ளியில் வசதியாக படித்து கொண்டு இருக்கிறான்.ஆண்டுக்கு ஒருமுறை தன் பெற்றோர்,சகோதரிகளை சந்தித்து உதவிகளை செய்து கொண்டும் இருக்கிறான்.அவனது வளர்ப்பு பெற்றோர்,ஒரு அறக்கட்டளை தொடங்கி,ராஜாவை போல உள்ள
சிறுவர்களை கண்டு அறிந்து,அவர்கள் படிக்க உதவிகளை செய்து வருகிறார்கள்.
