STORYMIRROR

Saravanan P

Abstract Fantasy Thriller

4  

Saravanan P

Abstract Fantasy Thriller

ஏலியன் நண்பன்

ஏலியன் நண்பன்

1 min
244

ஷெர்வின் தனது படுக்கையில் படுத்து அன்று அவன் எழுதிக்கொண்டிருந்த பழி வாங்கும் கதையை பற்றி யோசித்து கொண்டே இருக்க நித்திரை அவனை ஆட்கொண்டது.

கண்களை மூடி இருந்த அவன் மீது ஒளி படர்வதை கண் முழித்து பார்க்கும் அவன் அந்த ஒளியை கண்களால் பார்க்க முடியாமல் கண்களை மூடுகிறான்.


திடீரென ஒரு விசை அவனை மேல் நோக்கி இழுக்க அவன் அந்த ஸ்பெஸ் ஷிப்பின் உள்ளே செல்கிறேன்.

ஷிப்பை பார்த்து கொண்டிருந்த ஷெர்வினை நோக்கி ஒரு ஸ்பெரே அடிக்க பட அவன் மயங்கி விழுந்துவிடுகிறான்.

ஒரு ஏலியன் அவனுக்கு ஸ்பெஸ் ஸுட்டை போட்டு விட‌ ஒரு ரொபோட் உதவி செய்கிறது.

பூமியிலிருந்து 60 லைட் யெர் தூரம் உள்ள சினிபீலா கிரகத்தை அடைகிறது அந்த ஸ்பெஸ் ஷிப்.

அங்கு நடந்து வரும் ஷெரீவன் கும்பலாக ஆங்காங்கு நின்று கும்பலாக சிலர் முறைத்து பார்த்து கொண்டிருந்தனர்.

அங்கு வரும் மூன்று ஏலியன்கள் அவனை வரவேற்று அவனுக்கு எந்த மொழியையும் புரிந்து கொள்ளும் கருவியை தருகின்றனர்.

ஷெர்வின் என்னை எதற்கு இங்கு கூட்டிட்டு வந்தீங்க என கேட்க,அதில் ஒரு ஏலியனான டிங்கு சினிபீலா கிரகத்தில் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் குறும்படம் விழாவிற்கு கதை மற்றும் படம் இயக்க ஆள் வேண்டும் என்று அவனை பூமியில் இருந்து அழைத்து வந்த காரணத்தை கூறி, தங்களது செயலுக்கு மன்னிப்பு கேட்டனர்.

ஷெர்வின் அந்த உதவியை செய்வதாகவும் அவனை பத்திரமாக பூமியில் கொண்டு சேர்த்து அவன் குறும்படத்தில் நடிக்க டிங்கு பூமிக்கு வர வேண்டும் என கூறினான்.

டிங்குவும்,ஷெர்வினும் கை குலுக்கி பட வேலையை ஆரம்பித்தனர்.

அந்த படம் மூன்றாவது இடத்தை பெற,டிங்கு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.

இறுதியில்,ஷெர்வின் ஒரு மணல் திட்டில் கற்களை சேகரிக்க டிங்கு அங்கு ஸ்பெஸ்ஷப்பில் வர,டிங்கு என்ன செய்ற என கேட்க "இந்த கல்லுக்கு பூமியில வைரம்னு பேர் ரொம்ப காஸ்ட்லி" என சொல்ல,

டிங்கு "மதிப்பு,மரியாதை எல்லாம் இடத்தை பொறுத்துதான்",ஷெர்வின் சீக்கிரம் என டிங்கு கூற ஷெர்வின் சேகரித்த கற்களுடன் ஸ்பெஸ்ஷிப்பில் ஏறினான்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract