ஏலியன் அட்டாக் - 2
ஏலியன் அட்டாக் - 2
காலை சூரியன் மெல்ல தன் கதிர்களை பரப்ப தொடங்கியது...... ,அனுவும் அவளது நண்பர்களும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. வானில் இருந்து வந்த அந்த பொருளை பார்த்தபடி வானொலி இருந்த அந்த அறையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை .
கல்லூரி படிப்புக்காக அனுவும் மாயாவும் தங்கள் ஊரை விட்டு ,பெங்களூருக்கு வந்திருந்தார்கள். செமஸ்டர் விடுமுறை என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னாள் தான் அணுவின் தம்பி முகிலன் பள்ளி விடுமுறையை களிக்க அங்கு வந்திருந்தான். அக்கம்பக்கத்தில் அதிகம் பழகம் இல்லாததால் இதுபற்றி யாரிடம் சொல்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்கள்.
"இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கறது..?, முகிலன் அங்கே நிலைத்த மௌனத்தை களைத்தான்.அனு தன் தம்பிக்கு பதில் சொல்ல மனமின்றி "இப்போ என்ன பண்ண சொல்ற முகில்..? நாம என்ன சூப்பர் ஹீரோஸ் - ஆ.?
ஏலியன்ஸ் கிட்ட இருந்து பூமிய காப்பாத்த.....அப்பறம் அந்த டாக்டர்.கண்ணன்..... அது யாருன்னு தெரியல...? அணுவின் மனம் என்ன சொல்வதென்று புரியாமல் இருந்தது.அந்த சமயம் மாயா திடீரென்று எதையோ கண்டுபிடித்தது போல "ஒருவேளை இந்த நியூஸ் பொய்யா இருந்த..?" என்றாள்
அனுவும் முகிலனும் மாயாவின் சொல்லுக்கான அர்த்தம் புரியாமல் அவளை பார்த்தார்கள் . "அது எப்படி பொய்யா இருக்கும்னு சொல்ற மாயா..?, நைட் இந்த பொருள் வானத்துல இருந்து விழுகுறப்போ நீயும் தானே பாத்த.., அப்பறம் என்ன..?, அனு கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து நின்றாள். வானத்துல இருந்து எதாவது வந்தா ஸ்பேஸ் செண்டர்ல கண்டுபிடிச்சு இருப்பாங்க அவங்க இந்நேரம் அத தேடி இங்க வந்து இருக்கணுமே..! ஆனா இன்னும் வரல, அப்படினா இது ஸ்பெஸ்ல இருந்து வரல...அவ்ளோதான்; ஆப்ரம் அந்த பேரு ...அது யாரோ கண்ணன்னு ஒருதவங்களோட ரிசர்ச்சா இருக்கலாம் ,அது இங்க வந்து விழுந்திருக்கலாம் இல்லிய....? இத தூக்கி போட்டுட்டு போய் வேற வேலை இருந்த பாருங்க..", மாயா நிதானமாக எழுந்தாள் . ஒருவேளை நீ சொன்னமாதிரி இல்லாம
ஸ்பேஸ் செண்டர்ல இருக்கிறவங்க இத பாக்காம இருந்தா..? அதுக்கும் வாய்ப்பு இருக்குல...? அனு மாயாவின் கேள்விக்கு பதில் கேள்வி கேட்டாள்.மாயாவிர்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .. சற்று நேரம் மூவரும் அமைதி காத்தனர்.......,பின் அனு மெல்ல எழுந்து ,"இதுக்கு ஒரு வழி தான் இருக்கு நாம ஸ்ரீஹரிகோட்டா ஸ்பேஸ் சென்டர் போகலாம்..அங்க நம்மக்கு பதில் கிடைக்கும்....",அனு தன் முடிவில் மாற்றம் இல்லை என்பது போல் இருவரையும் பார்த்தாள்.
_ தொடரும்.......
