Madhu Vanthi

Drama Action Fantasy

4.5  

Madhu Vanthi

Drama Action Fantasy

ஏலியன் அட்டாக் - 15

ஏலியன் அட்டாக் - 15

5 mins
273


இதயமே கழண்டு வெளியே வந்து குதித்து விடும் அளவிற்கு முகிலனின் ஹார்ட் பீட் ஏற....., அவனின் சகோதரியும், அவளின் தோழியும் கத்திய கத்தில்.., தன் காதுகள் கேட்க்கும் திறனை இழந்துவிடுமோ என்ற பயத்தில் இரு உள்ளங்கைகளை செவிகளில் அழுத்தி மூடி இருக்க.... சொஹாராவோ, "மன்னிப்பு கேக்க ஹேன்ட் ஷேக் தானடா குடுத்தேன்...., அதுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்....", என்ற ரெஞ்சிர்க்கு விழித்துக்கொண்டு இருந்தான். அனுவும் மாயாவும் இன்னுமும் அவர்களின் குரல்வளைக்கு ஓய்வு குடுத்தபாடில்லை....,

இதற்கு முடிவு கொண்டுவர நினைத்த ஃப்ரீ பர்ட், தன் பந்து போன்ற உருவத்தில் இருந்து ஒரு சைரனை வெளியே நீட்டி தன் பங்கிற்கு அலரவிட்டது....., அந்த சைரனோ.... அவர்களுக்கு மேல் அலறியது..., "என்னடா இது?... நம்ம சௌண்டுக்கு மேல ஒரு சத்தம் கேக்குதே" ,என்று அலறலை ஆஃப் செய்து விட்டு பார்த்த அனுவிர்க்கும் மாயாவிற்கும் , " ஷேக் ஹேன்ட் இல்லையா?",என்பது போல் அப்பாவியாக இன்னும் நீட்டிய கையை மடக்காமல் நின்ற சோஹாரா தான் தெரிந்தான்.... , அவனை கண்டு அதிர்ந்த இருவரும் பின்னோக்கி நகர.... முகிலன் மட்டும் காதை மூடிக்கொண்டு அங்கேயே நிற்க...., அனு அவனை பிடித்து தங்களுடன் சேர்த்து இழுத்து கொண்டு பின் சென்றாள்..., " ஏ அனு வில்சன் சார் க்கு கால் பண்ணு.... இத அவர்கிட்ட சொல்லிடலாம்....", என்று மாயா தன் யோசனையை சொல்ல.... " போன் உள்ள இருக்கு டி.... எடுத்துட்டு வரல", என்று அனு மாயாவை பார்த்து அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பதிலளித்தாள்.

"அடி கூறுகேட்டவலே..... கண்ட நேரத்துல, கண்ட இடத்துக்கு போன கொண்டுகிட்டே போவ.... இப்ப மட்டும் ஏன் டி வச்சுட்டு வந்த.... லூசு லூசு", என்று கரித்து கொட்ட... அவளோ, "இப்டி நடக்கும்னு நா என்ன கனவா கண்டேன்.....", என்று பீதி அடைந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள்.

அதன் பின்பே தன்னை கண்டு மூவரும் அச்சப்படுவதை கவனித்து சொஹாரா..., "பயப்டாதிங்க.... நானும் உங்கள மாதிரி சாதாரண மனுஷன் தா... "என அவன் அவர்களுக்கு தைரியம் கூற.... , "எந்த ஊருல மனுஷனுக்கு கை இவளோ தூரம் வருதாம்....", மாயா அவனின் பதிலுக்கு எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனிடம் எதிர்கேள்வி கேட்டாள்...

" ஓஓ..... இதுக்காக தான் இப்படி கத்துநீங்களா...., அது எங்க ஊரு மனுஷங்களுக்கு இப்படித்தான் இருக்கும்.... ஏன்னா எங்களுக்கு "செயின் போன்"...., எவ்வளவு தூரம் வேணாலும் நாங்க இழுத்துகுருவோம் எவ்வளவு சின்னதா வேணும்னாலும் மாத்திகுருவோம்..... ஏன்னா எங்களுக்கு எக்ஸ்பாண்டபுள் போன்....", என அந்த மெல்லிய பெண் குரலில் கூறி முடிக்க....,

"என்னது உங்க ஊரு மனுஷங்களா?..., நீ எந்த ஊரு டா... மொதல்ல நீ மனுஷன் தானா... , அத நாங்க எப்டி நம்புறது..... உன் வாய்ஸ் ஏன் இப்டி இருக்கு... நீ சொன்ன ஒடனே நம்புறதுக்கு நாங்க என்ன லூசா?...", என அனு கேள்விகளை அடுக்கி வைத்து கொண்டே போக...,

"கொஞ்சம் கேப் விட்டு கேட்டா பதில் சொல்ல வசதியா இருக்கும்", என்று சொஹாரா புருவத்தை உயர்த்தி அவர்களை பார்த்தான்.... , அவன் கூறியதை கேட்ட அனுவோ கூட்டத்தில் காணாமல் போன குழந்தை பொல் விழித்தாள்....

"சரி... சரி.... ஒன்னு ஒன்னாவே கேக்குரோம்.... மொதல்ல நீ யாரு..., அத சொல்லு..." , என்று முகிலன் முதல் கேள்வியை கேட்க...

"நா சொஹாரா..., பிளானட் க்ளவுட் - ல (planet cloud) இருந்து வரேன்... உங்க உலகத்துல இருந்து எங்க உலகத்துக்கு போர் அறிவிப்பு வந்து இருந்துச்சு... அத தடுக்குறதுக்கு அமைதி தூதுவனா என்ன இங்க அனுப்பி இருக்காங்க... இது டாக்டர். கண்ணனோட இடம் தானே.... நீங்க அவருக்கு தெரிஞ்சவங்கலா?... அவர் எங்க.... நாங்க அவர கம்யூனிகேட் பண்ணி ரொம்ப நாள் ஆச்சு....", என்று அனுவிர்க்கு மேல் பேசிக்கொண்டே போனான்...

" டேய்.. டேய்... என்ன கேப் விட்டு பேச சொல்லிட்டு... நீ இப்டி நான் ஸ்டாபப்பா பேசிகிட்டே பொரியே...., கொஞ்சம் கொஞ்சமாக பேசு டா", இப்போது அனு அவனிடம் கதறினாள்...

"ஹி ஹி ஹி... சாரி", என்று மறுபடியும் அவன் கையை நின்ற இடத்தில் இருந்து அவர்களை நோக்கி நீட்ட.... இம்முறை மூவரும் சற்று தயக்கத்துடன் அந்த ஷேக் ஹேன்டை ஏற்றுக் கொள்ள.., அவனோ மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை கண்டு ஆனந்தத்தில் குதித்தான்...

அப்போதே ஒரு விஷயத்தை கவனித்த மாயா, " என்ன சொன்ன...?, எங்க உலகத்துல இருந்து போர் அறிவிப்பு வந்துச்சா...?", என்று அதிர்ந்து போய் கேட்க... மற்ற இருவரும் அதே அதிர்ச்சியை முகத்தில் காட்டி அவனை நோக்கி திரும்பினார்கள்....

"ஆமா... நாலு நாள் முன்னாடி வந்துச்சு..., எங்க ஊருல உள்ள மக்களுக்கு நாங்க இன்னும் சொல்லல...., மொதல்ல உங்கள்ட்ட சமாதானம் பேசி பாக்கலான்னு தா என்ன இங்க அனுப்பி வச்சு இருக்காங்க...., யாருகிட்ட போகனும்னு எனக்கு தெரியல...., அதான் டாக்டர். கண்ணனோட வீட்டுக்கு வந்தேன்...., ஆனா நா தேடி வந்தவங்களே இங்க இருப்பீங்கனு நா எதிர்பார்க்கவே இல்ல...", என்று அதிற்சிக்கு மேல் அதிற்ச்சியை அள்ளி அள்ளி கொடுக்க... இவர்களோ, " என்னடா.... நீ ஒரு புது கதைய சொல்ற", என்ற ரெஞ்சிற்க்கு விழித்துக் கொண்டிருந்தார்கள்...

என்ன ஆச்சு.... ஏன் இப்டி பாக்குறீங்க... நம்பிக்க வராலயோ..?, என்று கேட்டதற்கு.... "ஆமா" என்பதை மௌனத்திலேயே மூவரும் பதிலளித்தனர்...

"சரி... நா நிருபிக்குறேன்...ஃப்ரீ பர்ட்.... அத பிளே பண்ணு", என்று சொஹாரா

ஃப்ரீ பர்டை பார்த்து கூற... " தன் ஸ்கிரீனை புரஜக்டராக மாற்றிய ஃப்ரீ பர்ட், ஒரு காட்சியை ஒளிர விட தொடங்கியது...

அதில்.....

நம் சொஹாராவும் மற்றொருவரும் ( தலைவர் உருவம்), நின்று கொண்டிருக்க.., அவர்களுக்கு முன் இருந்த ஸ்க்ரீனில் ஒரு முகமூடி அணிந்த மனிதன் இருந்தான்...., "நம்ம ஒப்பந்தத்தை நீங்க மீரிட்டிங்க...., இனி உங்க உலகத்த யாராலயும் காப்பாத்தவே முடியாது.... போர் நடக்க போறது நிச்சயம்.... சீக்கிரமா களத்துல சந்திப்போம்.... என் முன்னால் நண்பர்களே....", என்று கூறிவிட்டு வில்லத்தனமான சிரிப்பயும் இலவசமாக கொடுத்துவிட்டு..., மறைந்தது...., சொஹாறாவும் மற்றொரு உருவமும் குழப்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்....

இதை பார்த்த மூவருக்குக்கும், "அப்போ பூமில இருந்து தா போர் அறிவிப்பு போய்ருக்கா என்று ஒரு நிமிடம் குழம்ப...., அதிலிருந்து முதலில் தெளிந்த அனு..., "அப்போ நேத்து நைட், வந்த வார்நிங் பொய்யா...., அதுல பூமி மேல தாக்குதல்ன்னு தானே இருந்துச்சு...., இப்போ யாரு தா இந்த போர ஆரம்பிச்சது...., ", என்று வழக்க பொல் நான் ஸ்டாப்பாக பேச..., ரெண்டுகும் வாய் ரொம்ப நீளம் என்பது போல் முகிலனும் மாயாவும் அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தனர்....

"என்ன சொல்ல வரீங்க.... கொஞ்சம் புறியிற மாதிரி சொல்லுங்களேன்", என்று சொஹாரா கேட்க..., மூவரும் சேர்ந்து நேற்று இரவு முதல் இன்று இரவு வரை நடந்ததை சுவாரசியம் குறையாமல் கூறி முடித்தனை...

அவர்கள் கூறியதில் அதிர்ந்து போன சொஹாரா... "நம்ப முடியல.... கண்டிப்பா எங்க உலகத்துல இருந்து இப்டி ஒரு செய்தி வர வாய்ப்பே இல்ல...,

"ஒன்ன மாதிரி நம்ப வைக்க எங்கல்ட்ட வீடியோ கிளிப் லாம் இல்லபா....", என்று முகிலன் கூற..., "பட் ஒன்னு இருக்கு..... அந்த மெஷின்... இருங்க நா போய் எடுத்துட்டு வரேன்...", என்று அனு உள்ளே நுழைய போனாள்....

"ஏ அக்கா நில்லு.... அது என் கிட்ட தான் இருக்கு....", என்று முகிலன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த மெஷினை எடுத்து சொஹாறாவிடம் கொடுத்தான்..., அதை பார்த்த சொஹாரா தன் ஒட்டு மொத்த குழப்பத்தையும் முகத்தில் வரவழைத்து , இது பிளானட் க்ளவுட் ல தயாரிக்கிறது தா ஆனா இது எப்டி இங்க?.... என்று கூறியவாறே அதிலிருந்த ஒரு பட்டனை அழுத்தவும் அதிலிருந்து நேற்று இரவு வந்த அதே எச்சரிக்கை குரல் ஒலித்தது....,

"ஹே....! , இது OTP மாதிரின்னு தானே அவர் சொன்னாரு...., இது என்ன மறுபடியும் சொள்ளுது...", என்று மாயா கூற, "அதானே", என்று மற்ற இருவரும் கோரஸ் பாடினார்கள்...

"இது அந்த மாதிரி இல்ல...., இது சௌண்ட் ரெக்கார்டர்....., பாக்குறதுக்கு எல்லாமே ஒரே மாதிரி தா இருக்கும்... ஆனா சின்ன சின்ன வித்யாசத்த வச்சு கண்டுபிடிக்கலாம்...", என்று அவர்களின் குழப்பத்திற்கு விளக்கம் அளித்தான் சொஹாரா...

"ஒஹ்...! அப்படியா....", என்று அவனின் சொல்லை புரிந்து கொள்ள..., அப்போதே அணுவிர்க்கு மூளையில் சொஹாராவின் வார்த்தைகள் பிளிங்க் ஆக..., " ஒரு நிமிஷம்......, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.... நீ தேடி வந்தவங்கள நேர்ல பாப்பேன்னு நெனைக்கலன்னு சொன்னியே.... அப்போ நீ எங்கள தா தேடி வந்தியா?...", என்று கேட்ட..., "ஆமால", என்று மாயாவும் அவளுக்கு ஜால்ரா போட...., முகிலனோ, "இவன் அப்டிலாம் சொன்னான?", என்பது பொல் இருவரையும் லுக்கு விட்டான்..

" ஆமா... அது....", என்று சொஹாரா எதோ கூற வருகையில், சொஹாரா.... சொஹாரா... என்று குரல் கேட்க.... குரல் வந்த திசை நோக்கி நால்வரும் திரும்பினார்கள்...

அங்கு அவனின் பெயரை ஏலம் விட்டுக்கொண்டிருந்தர்கள் நம் பல்லி பிராணிகளுக்கான, ஏலியன் பெட் சாரா மற்றும் சோரோ....

" அய்யய்யோ.... மறுபடியும் இதுங்களா?", என்று முகிலன் காலையில் நடந்த சம்பவத்தை நினைவுக்குக் கொண்டுவர... அவர்களோ, சொஹாராவை கட்டி அணைத்து கொண்டனர்...

இவ்வளவு நேரம் இந்த நால்வரும் போட்ட ரம்பத்த்தில் கடுப்பாகி இருந்த ஃப்ரீ பர்ட்... இப்போது ஏலியன் பெட்களை மகிழ்ச்சியுடன் சுற்றிச்சுற்றி வந்தது....., "அப்பாடா.... நாம தப்புச்சுட்டோம்", என்று முகிலன் பெருமூச்சு விட்டபடி, "சரி... சரி...., இன்னும் எவ்வளவு நேரம் வெளியவே நிக்குறது...., வாங்க உள்ள போகலாம்", அனைவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றான்....

உள்ளே சென்றதும் அணுவின் கண்ணில் பட்டது அவளின் 17 missed call என்று ஒளிருக்கொண்டிருந்த அவளின் மொபைல் போன் தான்..., 17 மிஸ்டு காலா?, என்று போனை கையில் எடுத்தவளுக்கு அது வில்சனிடம் இருந்து வந்தது தெரிய..., "இந்த நேரத்துல வில்சன் சார் ஏன் கால் பண்ணி இருக்காரு?,", என்று தலையை சொரிந்து கொண்டே கேட்க, "வில்சனா...?", என்று அவரின் பெயரை கேட்டவுடன் சொஹாரா அதிர்ந்தான்...,

மூவரும் , "இப்போ இவன் ஏன் இப்டி ஓவர் ரியாக்ட் பண்ணுறான்", என்று அவனை குழம்பி போய் பார்த்த அந்த நேரம்... அனுவும் மொபைல் மீண்டும் அலறியது, வில்சன் சார் என்று ஒளிரியபடி....

- தொடரும்.....


Rate this content
Log in

Similar tamil story from Drama