சுதந்திரம்
சுதந்திரம்
இந்த உலகில் உள்ள அனைவரும் கேட்பது சுதந்திரம்.அவர்களை யாரும்,எதுவும் கட்டு படுத்த கூடாது.இது தான் இன்றைய இளைஞன் நினைப்பது.
இது தான் மூர்த்தியின் மனதிலும் ஓடி கொண்டு இருக்கிறது.பெற்றோர் சொன்ன பள்ளியில் படித்து,அவர்கள் எதிர்பார்ப்பு படி மதிப்பெண் வாங்கி,பெற்றோரின் விருப்பத்திற்கு
பொறியியல் படித்து,அவர்கனின் கனவு படி,மென்பொருள் துறையில்
வேலையில் சேர்ந்து அவர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு சம்பளம் வாங்கி கையில் கொடுத்தும் ஆகி விட்டது.சரி இனி எனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா,வயது 26 கடந்து விட்டது.
அடுத்து திருமணம். அது என் விருப்ப படி தான் நடக்க வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி விட்டேன்.
அந்த ஒரு விசயம் ஆவது தன்னுடைய விருப்பம் ஆக இருக்க வேண்டும் என்று தீர்மானத்தில் இருந்தான்.அவன் எண்ணப்படி ஒரு பெண் வாழ்க்கையில் குறுக்கிட,இருவரும் பேசினார்கள்.கருத்து ஒற்றுமை,மன ஒற்றுமை இருப்பதாக புரிந்து கொண்டார்கள்.சேர்ந்து வாழ இருவருக்கும் தகுதி உண்டு என்ற முடிவிற்கு வந்தனர்.
மூர்த்தியும் அந்த பெண் விஜயா இருவரும் தத்தம் பெற்றோர்களிடம் இது பற்றி கூறினார்கள்.இரு பெற்றோருக்கும் சம்மதம்.உங்கள் விருப்ப படி நடக்கட்டும் என்று கூறி ஒரு நல்ல நாளில் திருமணமும் நடந்தது.நாட்களும் இனிதே கடந்து போனது.அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.
இப்போது கதையின் தொடக்கத்தில் இருந்து படிக்கவும்.
