saravanan Periannan

Drama Action Classics

4.5  

saravanan Periannan

Drama Action Classics

சோழ மகோன்னதம்

சோழ மகோன்னதம்

1 min
192


இராசாதித்ய சோழன் தன்னுடைய படையுடன் போர் செய்ய புறப்பட்டிருந்தார்.

தன் படையை வைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் ஒரு விடயம் செய்ய தீர்மானித்தார்.

தன் படை வீரர்களை வைத்து ஒரு ஏரியை அமைத்து தன் தந்தையின் பெயருடன் வீரநாராயண ஏரி என பெயரிட்டார்.

இந்த ஏரி கொள்ளிடம் மற்றும் காவேரியின் கிளை ஆறுகள் அமராவதி மற்றும் பவானி ஆகியவற்றில் இருந்து நீரை சேமித்து வைத்து கொண்டது.

இந்த ஏரியில் 74 திறப்புகள் கொண்டு இருந்தது.

கரிகால சோழன் தீடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து சோழ நாட்டில் வீணாக கலப்பதை தடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் தூங்கியவருக்கு தன் முன்னோர் செய்த உன்னத பணி கனவில் வந்தது.

அவர் இலங்கையில் போர் புரிவதற்காக கப்பல்கள் மூலம் வீரர்களுடன் வந்திருந்தார்.

அந்த போரில் வெல்லும் கரிகால சோழன் இலங்கை வீரர்களை போர் கைதிகளாக சோழ தேசம் அழைத்து வருகிறார்.

இந்த போர் கைதிகளை மற்றும் தன் சோழ தேச வீரர்கள்,யானைகள் உதவியுடன் பாறைகளை இழுக்கவும் உடைக்கவும் செய்கிறார்.

பிறகு கல்லணை கட்டி முடிக்கப்பட்டு மக்கள் உழவு செய்ய வழி வகுக்கிறது.

பிறகு 

முதலாம் இராசராச சோழன் தன் கப்பல் படையுடன் இளவரசனாக இருக்கும்பொழுதே இலங்கை சென்று போரிட்டார்.

படிப்படியாக பலமாக உருவாகிக் கொண்டிருந்த சோழர் கப்பல் படை முழு பலத்துடன் முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் கடல் கடந்து போர் செய்ய ஆரம்பித்தது.

ஸ்ரீ விசய சாம்ராசியம் மீது தாக்குதல் நடந்த ஆரம்பித்த சோழ படை அந்த சாம்ராசியத்தின் துரை முகங்களை தாக்க ஆரம்பித்தது.

தென்கிழக்கு ஆசிய பருவமழை போர்க்கப்பல் வேகமாக பயணிக்க அனுகூலமாக இருக்க, ஸ்ரீ விசய வீரர்கள் முன்னேற்பாடு செய்வதற்குள் சோழர் படை தாக்குதல் நடத்திவிட்டு நாட்டில் வேறு பகுதியை தாக்க சென்று கொண்டிருக்கும்.

இந்த போரில் முதலாம் இராசேந்திர சோழன் வெற்றி பெற்றார்.

கடாரம் நாட்டை கடல் கடந்து வெற்றி கொண்டதால் கடாரம் கொண்டான் எனும் பட்டம் பெற்றார் முதலாம் இராசேந்திர சோழன்.

பின்பு தரைவழியாக நிறைய போர்கள் வந்ததால் சோழரின் கப்பல் படை வலுவிழந்து வீழ்ச்சியை சந்தித்தது.

இராசராச சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.


"சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்" என்றும், "காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்" என்றும் இரண்டு விதமாகக் முதலாம் ராசராச சோழன் பற்றிய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது.

முதலாம் இராசாராசனின் இரண்டு மெய்கீர்த்திகளிலுமே அவன் காந்தளூர் சாலையை வென்ற நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. 

இந்த போரை முதலாம் இராசராச சோழன் நடத்திய காரணம் சோழ வம்சத்தை கொல்ல சதி திட்டம் இங்கு திட்டம் தீட்டப்பட்டதாகவும் அந்த சதியை செய்ய போகிறவர்களுக்கு போர் பயிற்சி இங்கு வழங்கபட்டதும் தான் என விவரங்கள் கிடைத்தது.


காந்தளூர்ச்சாலை பற்றிய விவரங்களை நான் தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்துள்ளேன்.


.



Rate this content
Log in

Similar tamil story from Drama