STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

சந்திப்பு

சந்திப்பு

2 mins
333


அன்று சிவா சந்திக்க போகும் ஒரு நபர் மிகவும் பிரபலமானவர்.அவரை சந்திக்க அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது.

சிவா வாழ்கையில் பெரும் சவால்களை சந்தித்து,பல துன்பங்களை கடந்து வந்தவன்.இன்னும் அந்த துன்பங்களில் இருந்து அவன் மீள முடியவில்லை.அதன் பொருட்டு தான் அவரை சந்தித்து ஆலோசனை கேட்க இருந்தான்.

அவனுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இவன் காத்து இருந்து அவரை சந்தித்தான்.அவர் ஒரு யோகி என்று எல்லோராலும் அழைக்க பட்டவர்.நிறைய சொற்பொழிவுகள் நிகழ்த்தி மக்களின் மனதை கவர்ந்தவர்.

அவர் இவனை பார்த்ததும் தன்னை சந்திக்க வந்த காரணத்தை கேட்டார்.

சிவாவும் தனக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள்,துன்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது.இதில் இருந்து மீள என்ன வழி தெரியவில்லை என்று சொல்ல,

இதில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி இதில் இருந்து விலகி நிற்பது.நீ செய்யும் வியாபாரத்தில் இருந்து. உன்னால் விலகி இருக்க முடியுமா.

முடியாது என்றான்.

அப்படி விலக முடியாத போது,துன்பங்கள் வர தான் செய்யும்.துன்பங்கள் வரும் போது தான் முயற்சிகள் அதிகரிக்கும்.ஓடி கொண்டு இருக்கும் நீர் ஓடி கொண்டு தான் இருக்கும்.அது தேங்கும் போது,அது அத்துடன் நிற்பது இல்லை.தேவைக்கு தேங்கிய பிறகு வெளியேற வழிகளை தேடும்.உடைப்பை ஏற்படுத்தி அது வெளியேறி பயணத்தை தொடரும்.அது போல தான்,துன்பங்கள் வந்தால் அதில் இருந்து மீள வழிகள் அதுவே உருவாக்கி கொடுக்கும்.அதை கண்டு பிடித்து வெளியேறுவது ஒருவரின் திறமை.

இப்போது பல துன்பங்களை கடந்து வந்த உனக்கு அதில் இருந்து மீள வழி தெரிந்து இருக்கிறது.உனக்கு இன்பம் வேண்டும் என்றால் இன்னும் பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டு இருக்க வேண்டும்.ஒரு பிரச்சனையில் இருந்து வெளியில் வருவது தான் இன்பம்.

உனக்கு அந்த இன்பம் தெரிந்து இருக்கிறது.துன்பத்தில் இருந்து அதை சமாளித்து வெளியில் வரும் வழிகளை பலருக்கும் சொல்லி கொடு.உனக்கு இன்பம் கிடைக்கும் போய் வா என்று அனுப்பினார்.

வெளியில் வந்த அவனுக்கு இப்போது புரிந்தது அவர் ஏன் யோகி ஆக இருக்கிறார் என்று.


முற்றும்.


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil story from Abstract